காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் 125 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான துடுப்பாட்ட போட்டியில் யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய அணியினர்.
முதலாவது சுற்றில் அருணோதயா கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் விக்டோரியா கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து அரை இறுதிப்போட்டியில் வசாவிளான் கல்லூரியுடன் மோதி தோல்வியை தழுவிக்கொண்டாலும் எமது பாடசாலை வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள்.
பின்னர் மூன்றாவது நிலையை தீர்மானிப்பதற்கான போட்டி நடைபெற்றது அப்போட்டியில் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்டு நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இருப்பினும் எமது பாடசாலை மாணவர்கள் மிகவும் சிறந்த முறையில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டமையினையும். அவற்றை வழிப்படுத்திய திரு. பிரணவரூபன் உடற்கல்வி ஆசிரியருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பிலும் பழைய மாணவர்கள் சார்பிலும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.