அடிக்கிற காத்தில ஆலமரம்கூட அடிசாயும்
மாரிகால அடைமழை வந்தால் மடைதிறந்த வெள்ளம்போல
ஆழிக்கடல் ஆர்ப்பரித்து, கட்டுமரம் வள்ளம், ரோலர் என அனைத்தையும் கரையொதுக்கும்...
மாரிகால அடைமழை வந்தால் மடைதிறந்த வெள்ளம்போல
ஆழிக்கடல் ஆர்ப்பரித்து, கட்டுமரம் வள்ளம், ரோலர் என அனைத்தையும் கரையொதுக்கும்...
உப்புக்காத்தில சுவாசித்து வாழ்ந்தவாழ்க்கை போக
மிச்சமிருக்கிற காலத்தை திக்குத்திசைதெரியாமல் ஆக்கிடுமோ.....?
என
ஏக்கம் கனதியாக தூக்கம் தூரப்போக,
கனவுகளை மெய்யாக்க காலமும் கைகூடி வந்தது.......
இருட்டை உடைத்து வெளிச்சம் வந்ததுபோல
ஒருவரது சிந்தனையே, உராரின் ஆதரவால்
அன்னைவடிவென, காவல்தாயாக
திருப்பூர் வீதியில் இருந்த திரிபுர சுந்தரிக்கு....
அடம்பன்கொடியென ஒன்றாக திரண்டு
அனைவரும் சேர்ந்து கோபுரம் எழுப்பினர்.....
அண்ட சராசரத்தையே கட்டியாண்ட
அகிலாண்ட ஈஸ்வரிக்கு
உப்புக்காத்தோரம் ஊர்வலம் எடுத்தனர்......
பக்தர்கள் கூடினால் பட்டினியும் பறந்துபோகும்
ஆச்சியுனை கைதொழுதால்
பிறவிப்பயனாக மோட்சமே கைகூடும்....
அன்னையின் பக்திதனை அளவிட்டு என்னபயன்
அடிமுடி தெரியாத சோதிப்பிளம்பென வண்ணமயமாக,
உன் எண்ணமே எனை ஆட்கொண்டுள்ளபோது...........
ஐந்தாவது வருடத்து மஹோற்சவமாம் இது.....
அன்னையும் வாசல்தேடி அளவில்லா,
அளவில்லா பெரும்திரளாய் பக்தர்வெள்ளம்.
வண்ணமின்விளக்குகள் அலங்கரித்து,
ஊரே ஒன்றுசேர்ந்து விழாக்கோலம்....
இன்பமயமான விழாநாளில்
சஞ்சலம் இல்லா மனநிலை வேண்டுவோம்...
ஒன்றுசேர்தல் என்பது உன்வாசலில் நிகழட்டும்
உடல்கள் இணைவது போல், முகமலர்ந்து உள்ளங்களும் லயிக்கட்டும்.
சாம்பிராணி வாசமது சுவாசம் தனை ஆட்கொண்டு
சுந்தரத்தமிழ் தந்த ஆதியின் பாதி
ஆனவள் சந்நிதியில் அன்பை வளர்க்கட்டும்
இருக்குமிடமிருந்து
உன் புன்சிரிப்பால்
அனைவரையும் ரட்சிப்பவள் நீ.......
அனைத்தையும் அறிந்த உனக்கென்ன நான்சொல்ல
என் எழுத்தாணியூடாக
உள்ளத்தால் கரம்கூப்பி
உன் பாதம்தொழுது
பேச்சித்தாய்க்கு அரோஹரா
- மகிபாலன் மதீஸ்