
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும், புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது.
|
மயிலிட்டி.info |
![]()
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும், புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது.
0 Comments
![]()
அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது.
அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அ16/11/2020 ![]()
அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அவலம்!
மயிலிட்டித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டது... மயிலிட்டி மக்களிடமே கையளிப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் ஊடகங்கள் சாட்சியாக கூப்பாடுபோட்டுவிட்டு போனார்கள்.... மயிலிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இரண்டு 28 அடி நீள 2 சிலிண்டர் ஜம்மார் எஞ்சின் பொருத்தப்பட்ட றோலர் படகுகளும் சாதாரண மீன்பிடிப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தன. ![]()
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாற. பலத்த சேதத்திற்குள்ளாகியது. |
மயிலிட்டி
பதிவுகள்
January 2021
முழுப் பதிவுகள் |