அனைத்து மயிலிட்டி உறவுகளுக்கும் இனிய வணக்கம்.
தொன்மையான வரலாறுகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட ஓர் வளமான பூர்வீக கிராமம் மயிலிட்டியாகும்.
நீண்ட கால வரலாற்றுத் தொன்மையைக் கொண்ட கிராமத்தின் வரலாறுகள் தொடர்பான ஆவணப்படுத்தல்கள் அல்லது வரலாற்று நூல்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.
ஒரு சில நூல்கள் மட்டுமே சில வரலாறுகளை உள்ளடக்கிய வகையில் காணப்படுகின்றது.
அதேவேளை மேலும் ஒரு சில நிகழ்வுகளின் தொகுப்புக்களாகவும் காணப்படுகின்றது.
மேலும ஒருசில நிறுவனங்கள் சார்ந்தவயாகவும் வரலாற்று குறிப்புகள் எழுதப்ட்டவையும் காணப்படுகின்றன.

இந்த பின்னடைவுக்கு எமது கட்டாய இடம்பெயர்வும் ஒரு பிரதான காரணமாகும். எச்சங்கள் எதுவும் மிச்சம் இன்றி போர்தின்ற பூமியான எமது ஊரில் அரிய பல வரலாற்று தடங்கள் உள்ளபோதும் ஆவணப்படுத்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு பல வரலாறுகளை தற்கால சந்ததியும் எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையை உருவாக்கியுள்ளது.
நூல்கள் மற்றும் ஆவணப்படுத்தல்கள் எமது வரலாறுகளை பல நூற்றாண்டுகளுக்கும் நிலைத்து வாழச்செய்யும் ஓர் வரலாற்று மூலாதாரமாகும். ஓர் இனத்தின் அல்லது மொழியின் தொன்மையினை அறிந்து கொள்ள இலக்கிய மூலாதாரங்களே பெரிதும் உதவுகின்றன.
எனவே இவ்வாறான வரலாற்று தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி நிர்வாகத்தினரால் "மயிலிட்டி மண்" எனும் பெயரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றினை வெளியீடு செய்வதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இவ் வரலாற்று ரீதியான ஆவணமாக்கல் நூலின் பிரசவிப்பிற்கு ஊரில் உள்ள உறவுகள் மற்றும் புலம்பெயர் தேசத்தில் உள்ள மயிலிட்டி உறவுகள் அனைவரதும் ஒத்துழைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இதில் முழுமையான மயிலிட்டியை உள்ளடக்கிய அனைத்து வரலாறுகளும் உள்ளடக்கப்படும்.
இந் நூலானது எமது ஊரின் முழுமையான வரலாறுகளுடன் ஒரு சில ஆய்வு கட்டுரைகளையும் உள்ளடக்கியதாக அமையும் இதனூடாக எமது தற்போதைய உறவுகள் மற்றும் எதிர்கால சந்ததியினர் மற்றும் ஏனைய ஊரின் மக்கள் எமது ஊர் சார்ந்த வரலாற்றை அறிய உதவுவதுடன் பல்கலைக்கழக மற்றும் மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும் ஆய்வுக் கட்டுரைகளுக்காக இந்த வரலாற்று நூலினை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு கிடைப்பதுடன் எமது நூலின் சிறப்பும் மேலோங்ககூடிய வகையில் அமையும்.
நூலின் பெயர்: மயிலிட்டி மண்.
நூலாசிரியர் :சகாதேவன் வசந்தராஜ்.
(தலைவர்,மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்)
வெளியீடு: மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.

இந்த வரலாற்று நூலில் உள்ளடக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளவையாக...
இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "மயிலிட்டி மண்" எனும் தவக் குழந்தையினைப் பிரசவிப்பதற்கு அனைத்து உறவுகளினதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
தொடர்புகளுக்கு: +94 77 2334 164
நன்றி,
தலைவர்,
சகாதேவன் வசந்தராஜ்.
திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.
- மயிலிட்டி எனும் பெயரின் பின்னணி. (வரலாற்று ரீதியான ஆய்வு)
- மயிலிட்டியின் அமைவிடம். (எல்லைகள் மற்றும் உள்ளடங்கும் பகுதிகள் தொடர்பானவை)
- மயிலிட்டியின் தொன்மை. (வரலாற்று மூலாதாரங்களை அடிப்படையாக கொண்ட ஆய்வுக்கட்டுரை)
- மயிலிட்டி துறைமுகம் தொடர்பான வரலாறு. (வரலாற்றுரீதியான ஆய்வு)
- மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் வரலாறு.
- மயிலிட்டியில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களின் வரலாறு.
- மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகை அம்மன் ஆலயம்.
- மயிலிட்டி முனையன்வளவு முருகையன் ஆலயம்.
- பெரியநாட்டுதேவன்துறை வரசித்தி விநாயகர் ஆலயம்.
- மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய பேச்சி அம்மன் ஆலயம்.
- சங்குவத்தை மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்.
- மயிலுவக்கடவை பிள்ளையார் ஆலயம்.
- ஆதிமயிலிட்டி பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம்.
- தோப்புப் பிள்ளையார் ஆலயம்.
- குளத்தடி கண்ணகி அம்மன் ஆலயம்.
- மயிலிட்டி காசிபூதராயர் ஆலயம்.
- புதுக்கிணற்றடி வைரவர் ஆலயம்.
- மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம்.
- முலவை செபமாலை மாதா தேவாலயம்.
- பாடசாலைகளின் வரலாறுகள்.
- மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயம்.
- மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலை.
- மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாலயம்.
- பொது அமைப்புக்களின் வரலாறுகள்.
- சனசமூக நிலையங்கள்.
- கண்ணகி படிப்பகம்.
- பாரதி சனசமூக நிலையம்.
- திருப்பூர் ஒன்றிய இளைஞர் நற்பணி ஒன்றியம்.
- திருப்பூர் ஒன்றிய வரலாறு.
- விளையாட்டுக்கழகங்கள்.
- முன்பள்ளிகள்.
- கடற்தொழிலாளர் சங்கம்.
- மாதர் சங்கங்கள்.
- கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள்.
- மீள்குடியேற்ற சங்கம்.
- 1990ன் இடப்பெயர்வு. (இடப்பெயர்வு நாள் தொடர்பான முழுமையான வரலாற்றுத் தொகுப்பு)
- மயிலிட்டியில் காணப்பட்ட காணப்படும் கலைகள் தொடர்பானவை.
- மயிலிட்டியில் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பானவை. (கடற்கோள் அனர்த்தம்) இது போன்றவை.
- மயிலிட்டியின் பாரம்பரிய தொழில்கள் தொடர்பான கொகுப்பு.
- 1990இன் இடப்பெயர்வின் நினைவுகள். (வலி சுமந்த வரிகள்)
- இடப்பெயர்வின் பின்னரான முகாம் வாழ்வு தொடர்பான (அனைத்து முகாம்கள் தொடர்பானவை) நினைவுப்பகிர்வு.
- மீள்குடியேற்ற போராட்டங்கள் தொடர்பானவை.
- 2017 மீள்குடியேற்றம் தொடர்பானவை.
- ஏனைய ஆய்வுக்கட்டுரைகள். (தேவையானவை மேலும் சேர்க்கப்படும்.)
- கவனிக்கப்பட வேண்டியவை.
- இந்த ஆக்கங்கள் முழுவதும் மயிலிட்டி மக்களினுடையதாக அமையவே விரும்புப்படுகன்றது.
- ஒருவர் ஒரு ஆக்கத்தை மட்டுமே பொறுப்பெடுக்க முடியும். (ஏனையவர்கள் பொறுப்பெடுக்காத பட்சத்தில் மேலதிகமாக பொறுப்பெடுக்க முடியும்)
- ஆக்கங்கள் யாவும் ஆக்கங்களை எழுதுபவர்களுடைய பெயருடன் பிரசுரிக்கப்படும்.
- ஆக்கங்கள் யாவும் தனிநபர் புகழ்கூறாத வகையில் அமைய வேண்டும். (பெயர் குறிப்பிடவேண்டியவற்றுக்கு கட்டாயம் பெயர்கள் குறிப்பிட வேண்டும்)
- ஆக்கங்கள் யாவும் பேதங்களை ஏற்படுத்தாத வகையில் அமைதல் வேண்டும். (உண்மைத்தன்மைகள் திரிவுபடுத்தாமல் சரியாக குறிப்பிடப்படல் வேண்டும்)
- ஆக்கங்கள் தொடர்பான முழுமையான வரலாற்றுப் பின்னணிகள் ஆராயப்பட்டு பலருடன் கலந்துரையாடி அவை தொடர்பான நூல்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வுசெய்து தொகுக்கப்பட வேண்டும். (சாதாரணமாக எழுதப்படும் ஆக்கங்கள் எந்தவகையிலும் பிரசுரிக்கப்படாது)
- ஆக்கங்களை பொறுப்பெடுப்பவர்கள் பொறுப்பெடுத்த காலப்பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அச்சுப்பிரதியாக ஒப்படைக்க வேண்டும்.
- ஆக்கங்களில் ஏற்படும் சரிபிழைகளுக்கு அவ் கட்டுரைகளின் உரிமையாளர்களே பொறுப்பாவர்.