23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
இயற்கை அனர்த்தங்கள் அதிகம் காவு கொள்வது மீனவக் குடும்பங்களை தான் என்பதற்கு சுனாமி போன்ற எத்தனையோ ஆழிப் பேரழிவுகளை பட்டியலிடமுடியும்.