• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி
01/11/2025
Picture
​காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் 125 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு  நடாத்தப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான துடுப்பாட்ட போட்டியில்  யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய அணியினர்.

09/10/2025
Picture
மரண அறிவித்தல்
திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன்

பிறப்பு: 07/05/1966
இறப்பு: 09/10/2025


யாழ். உடுத்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் 09/10/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

08/10/2025
Picture
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு - 2025

இன்றைய தினம் 08/10/2025 மயிலிட்டி  வடக்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில்   ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.​

05/10/2025
Picture
நெஞ்சழியா நினைவலைகள்
ஒலியிசைப் பேழை 

யா/ நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22/09/1995ம் ஆண்டு நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பலியான 21 மாணவச் செல்வங்களின் 30 வது ஆண்டு நினைவிற்காக திரு. மகிபாலன் மதீஸ் அவர்களின் அர்ப்பணிப்பாக இந்த ஒலியிசைப்பேழை. 

04/10/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)

மலர்வு: 24/08/1969
உதிர்வு: 04/10/2025


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சக்கோட்டை மாவிலங்கேணியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராசா அன்ரன் குணராணி (செவ்வந்தி) அவர்கள் 04/10/2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
​

29/09/2025
Picture
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.

28/09/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி

மலர்வு: 06/02/1949
உதிர்வு: 28/09/2025


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ​திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி அவர்கள் 28/09/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

20/09/2025
Picture
திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)

தோற்றம்: 21/11/1938
மறைவு: 20/09/2025


வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிற்சலாந்த் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) அவர்கள் 20/09/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் இறைபதமடைந்தார்.

அன்னார் கணேசபிள்ளை மகாலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும்,

புஷ்பவதி (தங்கன் அக்கா - திருப்பூர் மயிலிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

19/09/2025
Picture
யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்தில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19/09/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

28/08/2025
Picture
மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து 62 இந்தியப் படகுகள் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் அரசுடமையாக்கப்பட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் 62 இந்தியப்படகுகள் நாளை (29/08) ஏற்றிச்செல்லப்பட்டு அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் கொட்டப்படவுள்ளன.
​



20/06/2025
Picture
ஆறாவது ஆண்டு நினைவு

​அமரர். குணபாலசிங்கம் தேவி

தோற்றம்: 28/01/1951
மறைவு: 20/06/2019


திருப்பூர் மயிலிட்டியை வதிவிடமாகவும், கதிரிப்பாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணபாலசிங்கம் உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு.

18/08/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)

தோற்றம்: 03/07/1956
மறைவு: 18/08/2025


திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும்,  திக்கம் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார். 

18/08/2025
Picture
மரண அறிவித்தல்
திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)

தோற்றம்: 03/11/1960
மறைவு: 18/08/2025

​
காரைநகரை பிறப்பிடமாகவும் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார்.

அன்னார் அமரர்களான கைலாயப்பிள்ளை பத்தாமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

குணசுந்தரி அவர்களின் அன்புக்கணவரும்,

04/08/2025
Picture
 ஸ்தபதி செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் மறைந்தார். - சண் கஜன்

02/08/2025
Picture
மரண அறிவித்தல்
ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்

தோற்றம்: 04/04/1953
மறைவு: 02/08/2025
​


யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02/08/2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

​​அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் புத்திரரும்,

கஜேந்திரன்(கனடா), ஜெயந்திரன், நிவாசினி, யதுர்சிகன் ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்,



16/07/2025
Picture
அம்பிகைபாகன் என்னும் ஆளுமைக்கு அகவை 60.
              *********************************************


​
  • மயிலிட்டி மண் பெற்றெடுத்த பெருமைகளில் ஒன்றாக வலம் வரும் கல்வியியலாளன் இவர்.
 
  • இந்துநாகரீகத்துறையின் ஆழம் தொட்ட அதிமானுடன்.

13/05/2025
Picture
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" - மகிபாலன் மதீஸ்
​​
மாபெரும் தவம் ஒன்றை

தோளினில் சுமந்து

புலம்பெயர் வாழ்வின் வலிகளை 

முகர்ந்து

12/05/2025
Picture
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமுக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடம் திறப்புவிழா.

அனைத்துலக திருப்பூர் மக்களின் நிதிப்பங்களிப்பிலே உருவான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கூடத்தை வடமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மயிலிட்டி திருப்பூர் மண்ணிலே திறந்து வைத்தார்

08/05/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)

தோற்றம்: 23/06/1950
மறைவு: 08/05/2025


வல்வெட்டித்துறையை பிறப்புடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) அவர்கள் 08/05/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் திருப்பூர் வீதி மயிலிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

02/05/2025
Picture
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமுக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்புவிழா -2025.

​1990 களில் வலிந்து துரத்தியடிக்கப்பட்ட எம் மக்களின் ஏக்கம் இடப்பெயர்வின் வலி அகதிகளாக்கப்பட்டோரின் அவமானங்கள் நம் முன்னோர்களின் வாழ்நாள் கனவு எதிர்கால சந்ததியினரின் எழுச்சி என இவை அனைத்தின் ஊற்றாக அனைத்துலக திருப்பூர் ஒன்றிய மக்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமுக நிலையத்துடனான கல்வி நிலைய கட்டடம் திறந்து வைக்கப்பட இருக்கின்றது.

01/05/2025
Picture
மரண அறிவித்தல்
திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)

தோற்றம்: 29/01/1953
மறைவு: 01/05/2025 



மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01/05/2025 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார். 

17/04/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. புஸ்பராணி சிதம்பரி

தோற்றம்: 28/02/1950
மறைவு: 17/04/2025


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி சிதம்பரி அவர்கள் 17/04/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

​

16/04/2025
Picture
திருமந்திரம் - பாகம் 45
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

சேம நிதி சிவ சிந்தனையே
​

“மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரண்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே”                              பாடல் எண் 302
நந்தியெம் பெருமான் அருளாணைப்படி திருமாலும் பணி செய்வான். சிவத்தொண்டு புரிந்தால் பிரமனும் ஏவல் செய்வான். சிவன் கட்டளைக்கேற்ப நடப்பவர் தேவரும் ஆவர். சிவபெருமான் ஆணைப்படி அருள் வழி நடப்பதால் அவன் அருள் துணை என்றும் நமக்குப் பேரின்பப் பெரும் பற்று ஆகும்.


10/04/2025
Picture
மரண அறிவித்தல்
திரு. சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)

தோற்றம்: 20/09/1943 
மறைவு: 10/04/2025


திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா வடிவேல் (செல்லம், பப்பா) அவர்கள் 10/04/2025  வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார். 

அன்னார் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

அம்மன், சுகுணா, சுசீலா, சுபத்திரா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமல், இராஜசுதன், அனுஷா, உஷா, நிஷாந்தன், சுரேஷ், ஆஷா, ஜனா, நிக்‌ஷன், அபிஷா, லிஷா, துஷா, தினேஷ், ரம்யா, வினோத், டிலக்‌ஷி, டிலக்‌ஷன், யதுஷா ஆகியோரின் பேரனுமாவார்.

07/04/2025
Picture
​திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த அமரர். மணிவண்ணன்(ராசன்) (திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி,பிரான்சு கிளையின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவர்) வாசுகி ஆகியோரின் மகளான 

மணிவண்ணன் திருஷிகா அவர்களுக்கு 29/03/2025 அன்று Université Paris cité பல்கலைக்கழகத்தினால் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் முதுகலைமாணிப்பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். (நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பொறியியலில் நிபுணத்துவம்) 

27/03/25
Picture
மரண அறிவித்தல்
திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை

மலர்வு: 10/08/1941
உதிர்வு: 27/03/2025


மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை அவர்கள் 27/03/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நடனசிங்காரவேல் அவர்களின் அன்புமனைவியும்,

இளங்குமரன் (குட்டிப்பாலு) அவர்களின்  பாசமிகு தாயாருமாவார்.

16/03/2025
Picture
 திருமந்திரம் ( பாகம் 44 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 
​
ஞான நூல் அறிவு
“நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே”                        பாடல் எண் 295
​
அறநூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலை அடைய முடியாதவர்கள், மற்றைய இச்சைகளில் மனம் பற்றுக் கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலம் இழப்பார்கள். கோலெடுத்தால் ஒன்று படாது பறந்தோடும் பறவைகளைப் போல், இந்த உலகப் பற்றாளர்களும், மற்றப் பலவற்றில் மயக்கம் கொண்டு, தடுமாறுகின்றனர்.

11/03/2025
Picture
மரண அறிவித்தல்
​திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம்

தோற்றம்: 05/05/1937
மறைவு: 11/03/2025


மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் ​கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு (கிளி) அருந்தவம் அவர்கள் 11/03/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கருணகடாட்சகுரு (கிளி) அவர்களின்  மனைவியும்,.

01/03/2025
Picture
​வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

21/02/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சிற்றம்பலம் நாகம்மா

​பிறப்பு: 28/10/1934
இறப்பு: 21/02/2025


மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, புதுசெட்டித்தெருவை (New Chetty Street) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் நாகம்மா அவர்கள் 21/02/2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.



13/02/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம்

தோற்றம்: 09/08/1944
மறைவு: 13/02/2025


மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13/02/2025 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற ஞானமுத்து பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேம்ராஜ்​, ஹெலனாசாந்தி, அமல்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும். 

13/02/2025
Picture
மரண அறிவித்தல்
திரு. சின்னையா சீவரத்தினம்

அன்னை மடியில்: 14/01/1946
இறைவன் அடியில்: 13/02/2025 

​
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சீவரத்தினம் அவர்கள் 13/02/2025 வியாழக்கிழமை அன்று காலமானார் .

​சிவயோகம் அவர்களின் அன்புக்கணவரும்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நாகரத்திணம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

09/02/2025
Picture
மரண அறிவித்தல்
​திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)

தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025

​
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்

அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.

01/02/2025
Picture
மயிலிட்டி புனித காணிக்கைமாதா தேவாலய வளாகத்தில் மாசித்திருநாளை மாசி 2ம் திகதி கொண்டாட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

23/012025
23/01/2025 வியாழக்கிழமை வெளியாகிய 2024ம் ஆண்டிற்கான புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது திருப்பூர் ஒன்றியத்தைச சேர்ந்த மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். 
(இதுவரை கிடைக்கப்பெற்றவை) ​
19/01/2025
Picture
மரண அறிவித்தல்
திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)

தோற்றம்: 07/12/1968
மறைவு: 19/12/2025


மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) அவர்கள் 19/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
​

01/01/2025
Picture
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே”                          பாடல் எண் 288
​
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.   


Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025