
மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம்
(திருப்பூர் ஒன்றியம் - பிரான்சு கிளையின் காப்பாளர்)
பிறப்பு: 10/02/1952
இறப்பு: 22/03/2024
பிறப்பிடம்: திருப்பூர், மயிலிட்டி
வதிவிடம்: பிரான்ஸ்
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம் அவர்கள் 22/03/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்லசாமி லட்சுமியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மதிவதனம் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம்
(திருப்பூர் ஒன்றியம் - பிரான்சு கிளையின் காப்பாளர்)
பிறப்பு: 10/02/1952
இறப்பு: 22/03/2024
பிறப்பிடம்: திருப்பூர், மயிலிட்டி
வதிவிடம்: பிரான்ஸ்
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி அமிர்தலிங்கம் அவர்கள் 22/03/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்லசாமி லட்சுமியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மதிவதனம் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார், அமுதினி, வாணி, சுகந்தினி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமா, மதீஸ், அருணன் ஜெனிதன் ,கத்தரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அசினி, செரானா, திரிசான், வர்சா, லக்சா, அகரன், ஜெய்தன், ஜேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தருமலிங்கம், சடாச்சரலிங்கம், விசுவலிங்கம், காந்தமலர், நேசமலர், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
உமா, மதீஸ், அருணன் ஜெனிதன் ,கத்தரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அசினி, செரானா, திரிசான், வர்சா, லக்சா, அகரன், ஜெய்தன், ஜேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தருமலிங்கம், சடாச்சரலிங்கம், விசுவலிங்கம், காந்தமலர், நேசமலர், இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.
அனைவருக்கும் துயர்கலந்த பணிவான வணக்கங்களுடன்,
22/03/2024 அன்று இப்பூவுலகில் வந்தபணி முடித்து, பிறவிப்பயன் முடிந்ததால்,அமரத்துவமடைந்த எனது மாமனாரான அமரர்.செல்லசாமி அமிர்தலிங்கம் அவர்களின் துயர்செய்தி அறிந்து கூட இருந்தும், தொலைபேசி வாயிலாகவும், ஆறுதல், அனுதாபங்களை கூறி எமது துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,
தொர்சிதமிழ்ச்சோலை / தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினர்க்கும், எம் துயரில் பங்குகொண்ட தொர்சிவாழ் மக்களுக்கும், ஆரம்பத்திலிருந்து கூடவேயிருந்து எமது திருப்பூர் ஒன்றிய பிரான்ஸ் நிர்வாகத்தினர்க்கும்,தாயக நிர்வாகத்தினர்க்கும், திருப்பூர் இளைஞர் ஒன்றிய நிர்வாகத்தினர்க்கும் தமது அனுதாபங்களை இன்னும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நல்லுள்ளங்களுக்கும், சிரமங்களை பாராது இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மருமகன் மதீஸ் |
அப்பாவிற்கு மகள் எழுதும் கவிதை (கடிதம்)
அப்பா உங்களுக்காக நீங்கள்
வாழ்ந்ததே இல்லை.
உங்கள் பாசத்தைவிட
பெரிது எதுவும் இல்லை.
அப்பா நீங்கள் இருக்கும் வரை
நான் அழுததே இல்லை...நீங்கள் பிரிந்த
பிறகு நான் அழாத நாளில்லை அப்பா..
அப்பா என் கவலைகளை உங்களுடன்
பகிர்ந்து கொண்டதுண்டு...
நீங்கள் நிரந்தரமாய் உறங்கியதால்- இன்று
என் கவலைகளை பகிர்ந்த்துகொள்ள
யாருமில்லை.
அப்பா இந்த உலகத்தில் எதுவும்- வேண்டாம் அப்பா - நீங்கள் மறுபடியும் எழுந்து வந்தால் அதுவே போதும் அப்பா.
அப்பா எழும்பி வாப்பா...
அப்பா நீங்கள் என்னோடு இருந்த நாட்கள்
கரைந்து விட்டது....
இனி உங்கள் நினைவோடு-வாழும் நாட்கள் கண்ணீரானது அப்பா.
மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
நான் உங்களுக்கு மறுபடியும்-
மகளாக பிறக்கவேண்டும் அப்பா.
ஏனெனில் உங்களைப்போல - வேறொருவரும் இல்லையப்பா எனக்கு.
உங்கள் அளவில்லா பாசத்திற்கு
ஈடேதுமில்லையப்பா.
அப்பா எழும்பி வாப்பா.
நிஜங்கள் எழுதும் உங்கள் கதையில் - இன்று
உங்கள் நினைவுகள் மட்டுமே என்னோடு கதாபாதிரங்கள் ஆகின்றது அப்பா.
அப்பா எழும்பி வாப்பா....
அன்புடன் உங்கள் மகள்
அமுதினி
😭ஆழ்ந்த இரங்கல்கள்😭
பேர் அன்பிற்கும்
பெரும் மதிற்பிற்கும் உரிய
திருப்பூர் மண் பெற்றெடுத்த திருமகனே பெரிய மாமா.
அமுதன் என்ற பெயருக்கு இலக்கணமாய் அமுத மொழி பேசிய அந்த பொன்னான காலங்களை எண்ணி கலங்குகின்றோம் மாமா
நல் உள்ளமும் நன் மதிப்பும் கொண்ட நீங்கள் வையகத்துள் வாழ்ந்த அந்த கனிவான காலங்களை எண்ணி வியந்து நிற்கின்றோம்.
தாய் மண் விட்டு புலம் பெயர்ந்து வெளிநாடு சென்ற போதிலும் நீங்கள் உமது மண் மீதும் உங்கள் சொந்தங்கள் மீதும் நீங்கள் வைத்த அன்பிற்கு நிகர் ஏது,
நேரில் உங்களை கண்டது கிடையாது அதற்கான வரத்தை படைத்தவன் வழங்கவில்லை ஏனோ,
படைத்தவன் நினைத்திருந்தால் நேரில் உங்களை கண்டு ஆர தளுவி கள்ளம் இல்லாத அந்த அன்பை பெற்றிருப்போம். இருந்தாலும் குறைவில்லை
தாங்கள் எம்முடன் பேசி மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்து கலங்குகிறோம்.
திரும்பவும் திருப்பூர் மண்ணிலும் வேல் வீதியிலும் உங்கள் கால் தடம் பதித்து உங்கள் உற்றத்தார் சுற்றத்தார் என்று அனைவரையும் பார்த்து ஆனந்தம் அடையவேண்டும் என்று எண்ணி காத்திருந்தோம்.
காலனவன் சதி தொலைபேசியில் வந்த செய்தி கேட்டு வந்த செய்தி பொய்யாகி விடாதா என்று எண்ணி படைத்தவனை வேண்டி நின்றோம்.
என்ன செய்ய நல்லவர்கள் இவ்வுலகில் அதிகநாள் வாழ்வது இல்லைப்போலும்
கனிவான வார்த்தை பேசி பண்பான நடை நடந்து உழைப்பிற்கு ஓர் இலக்கணமாய் வாழ்ந்து எல்லோர் மனதிலும் உமக்கு என்று ஓர் இடத்தை பிடித்த நீங்கள்,
வாழ்ந்த காலங்களில் நீங்கள் கையெடுத்து வணங்கிய தெய்வங்களின் அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும் அதில் துளி அளவும் அய்யமில்லை
இவ்வுலகில் பணி முடித்து விண் உலகம் சென்ற உங்கள் ஆத்மா சாந்தியும் சமாதானம் அடைந்து எம் குலத்தாயவள் பேச்சி அம்மன் திருப்பாதங்களில் சரணடைய வேண்டி பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
மகி நதீஸ்
மருமகன்
தாயகம்
மதிப்புக்குரிய எமது பிரான்ஸ் கிளையின் காப்பாளரே..
எம்மை வழிநடத்திச் சென்ற ஆசானே..
அனைவரது மனங்களிலும் சிரித்த முகத்துடன் ஒளிர்ந்த திருப்பூர் பெற்றெடுத்த புன்னகையானே.
கனிமையான பேச்சும் அன்பான அரவணைப்பும் என்றும்
தூர தொலைநோக்குடன் எம்மை வழிநடத்தி நல்ல சிந்தனைகளை எமக்குள் ஊக்குவித்த குருவே.
உங்களை இழந்து இங்கு தவிக்கிறோம்.
அன்பிற்கு இனியவரே...
மூன்று தசாப்த காலங்கள் புலம் சேர்ந்த தேசத்தில் இருந்தபோதிலும் தாயிற்கு மேலாக திருப்பூர் மண்ணை நேசித்த உத்தம புத்திரனே..
ஒன்றிற்கு நூறு தடவை எமது மண்ணைப் பற்றிய உணர்வுகளை எமக்குள் விதைத்த வித்தகனே...
சிந்தனைகளின் செல்வப்புதல்வனே...
திருப்பூரின் நலனுக்காக எம் அருகில் இருந்து நல்வழி காண்பித்த சித்தமும் சிதறாத சிந்தனையாளரே..
எங்களை இடைநிலையில் தவிக்கவிட்டு சென்றது ஏனோ...
எமது சாகரத்தாயின் பாதக்கமலங்களில் சரணடையப் போற்றுகின்றோம்.
🙏🙏🙏
திருப்பூரின் அழகோவியமே பாரினை விட்டு சென்றதேனோ,
சிரிப்பொலியின் சித்திரமே சிந்தை இழந்ததேனோ,
வஞ்சகம் இல்லா பேச்சழகனே,
காலம் அழைத்தது என காலனிடம் சென்றதேனோ,
உறவுகளை வாரி அணைத்திடும் பாசமலரே,
பாசக்கயிறு இடம் பணிந்தது ஏனோ,
உழைப்பில் சோர்ந்து விடாது உயர்ந்தவரே,
எம்மை விட்டுப் புண்ணிய தேசம் சென்றது ஏனோ,
எம் பூரிப்பின் அழகோவியமே எம்மை விட்டு சொர்க்கவாசல் சென்றாலும்
உன் சிரிப்பொலியின் அழகோவியம்
எம் கண் முன்னே நிழலாடும் நிரந்தரமாக.
- மயிலை ச.சாந்தன்
கிரியை:
28/03/2024 வியாழக்கிழமை
12.00 மணியிலிருந்து 14.00 மணிவரை
முகவரி:
Crématorium des Joncherolles Villetaneuse.
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse.
தகனம்:
28/03/2024 வியாழக்கிழமை
15.00 மணியிலிருந்து 16.00 மணிவரை
முகவரி:
Crématorium de Saint-Soupplets
2 rue du pré de vornat – 77165 Saint-Soupplets
குறிப்பு:
கிரியை நடைபெறும் இடத்திலிருந்து தகனம் நடைபெறும் மயானத்திற்கு போக்குவரத்திற்கான வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சுரேஸ் (மகன்):
+33 7 78 24 26 12
மதீஸ் (மருமகன்):
+33 6 18 46 20 89
தகவல் - குடும்பத்தினர்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.