மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா! - அன்ரன் ஞானப்பிரகாசம்.

24/1/2023

1 Comment

 
Picture
மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா!


மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர்  காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய  வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி  பதிவிடுகின்றேன்.

Picture
போர்த்துக்கேயர் காலம் (1505 ---- 1658)

யாழ்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட ஆரம்ப தேவாலயங்களில் மயிலிட்டி தேவாலயமும் இடம்   பெறுகின்றது.
 
சம்மனசுகள் இராக்கினி எனும் தேவாலயமும், பாடசாலை, குருக்கள் தங்குமிடமும் என இரண்டு  மாடிக் கட்டிடங்கள்   மயிலிட்டியிலிருந்ததாக
 
PHILLIPUS BALDAEUS  என்னும் எழுத்தாளரினால் இலங்கையில் போர்த்துக்கேயர் காலத்திலிருந்த தோவாலயங்கள் பற்றி   பதிவிட்டுள்ள நூலில்
​

 (True and Exact Description of Great Island of Ceylon) 292ம் பக்கத்தில் உள்ளது.

Picture
ஒல்லாந்தர் காலம். ( 1658--- 1796)   
 
ஓல்லாந்தர் காலத்தில் நாட்டில் கத்தோலிக்க மதம் அழிக்கப்பட்ட காலம்.அந்த நேரத்தில் சம்மனசு இராக்கினி தேவாலயம் ஒல்லாந்தர் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்ததுடன் அதனை தங்கள் கோட்டையாகவும் மாற்றிக் கொண்டார்கள்.
 
இதன் காரணமாக அங்கு கத்தோலிக்க தேவாலயமும் இல்லாமல் போனதுடன், வெளிப்படையாக இயங்க மறுக்கப்படுகின்ற கொடூர நிலைமையும் ஏற்படுகின்றது. இந்தக்காலத்தில் தான் நூற்றுகணக்கான கத்தோலிக்கர்கள் வேதசாட்சியாக மன்னாரில் மரித்த சம்பவங்களும் இடம் பெற்றன.
 
மயிலிட்டி பெரியநாட்டுதேவன் துறை எனும் இடத்தில் சங்கரியார் ஒழுங்கைக்கும் சென் மேரிஸ் ஒழுங்கைக்கும் இடைப்பட்ட பகுதில் உள்ள திரு.சந்தியாப்பிள்ளை அவர்களின் வளவிலிருந்து, புதைக்கப்பட்ட நிலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட திருச்செரூபமே காணிக்கைமாதா திருச்செரூபம் என திரு சந்தியாப்பிள்ளையின் முன்னேர்கள் கூறியாகவும்,
 
யோசுவா முனிவர் இரகசியமான முறையில் அருகேயிருந்த நாற்சார் வீட்டில் மீன் விற்கும் பெண் வேடம் பூண்டு வாழ்ந்து வந்து.வழிபாடுள் நடத்தியதாக திரு.சந்தியாப்பிள்ளை அவர்களின் பதிவு யாழ் ஆயர் இல்லத்தின் வரலாற்று பதிவுகளில் உள்ளது.

Picture
ஆங்கிலேயர் காலம். 1796 -----  194

ஆங்கிலேயர் காலத்தில்தான் நம் தேவாலயம் மீண்டும் காணிக்கை மாதா தேவாலயமாக அமைக்கப்பெற்றது.

இத் தேவாலயத்தில் மயிலிட்டி, பலாலி மக்கள் இணைந்தே இத் தேவாலயத்தை தங்கள் பங்குத் தேவாலயமாக சிறப்பாக வழிபாடுகள் நடத்தி வந்தனர்.

1952ல் பலாலி மக்களில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமாதா தேவாலயத்தை கட்டி தங்களுக்கு என தனியாக தேவாலயம் கட்டத் தீர்மானித்த போது ஏனைய பலாலி மக்கள் அதனை ஏற்க மறுத்து இன்று வரை தங்கள் பங்குத் தேவாலயமாக காணிக்கை மாதா தேவாலயத்தின் பங்குதாரர்களாகவுள்ளார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையே. எமது ஆரோக்கிய மாதா தேவாலயம் கட்டப்பட்ட பின்பும் ஆசனத் தேவாலயமாக காணிக்கைமாதா தேவாலயமே திகழ்ந்தது.

மாசித்திருநாள்
 
வருடா வருடம் தை 24ம் திகதி கொடிமரம் ஏற்றப்பட்டு மாசி 1 நற்கருணை ஆராதணையும், மாசி 2ல் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.
 
திருநாள் திருப்பலி முடிவடைந்ததும் கூடு சுத்தும் நிகழ்வு தேவாலயத்திருந்து புறப்பட்டு சென்மேரிஸ் ஒழுங்கையை அடைந்து பின் கடற்கரை வழியாக பலாலிவரை உள்ள எமது பங்கு மக்களின் தொழில்துறைகள் வீடுகள் ஆசீர்  வதிக்கப்பட்டு பின் பிரதான வீதீயை அடைந்து தேவாலயம் வரையுள்ள தொழிகள், வீடுகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டு எமது அன்னை தேவாலயம் வந்து, இறுதி ஆசீர்வாதம் எமது பங்குத் தந்தை கையில் ஏந்தி தலைக்கு மேல் அன்னையின்  திருச்சொரூவத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கும் போது மக்கள் எல்லோரும் மிழந்தால் படியிட்டு மதபேதமின்றி கண்ணீர் பொங்க அந்த ஆசீர்வாதத்தை பெறுவதை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன.

கப்பல்பாட்டு
 
கூடு சுற்றும் போது கப்பல்பாட்டு படிப்பது ஆரம்பதிலிருந்தே காணிக்கைமாதா தேவாலத்தில் சிறப்பாகவிருக்கும்.  பயணம் மிக நீண்டதாகவிருந்தாலும் பக்தியுடன் செபமாலை சொல்லிக் கொண்டு மக்கள் செல்வார்கள். கூட்டுக்கு மேல் சோளம் பொரி, கச்சான் எறிவது மக்கள் வழக்கமாகவிருந்தது.

விருந்து
 
மாதாவின் சுந்றுப்பிரகாசம் முடிந்தபின் விருந்துச்சாப்பாடு மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது. எமது ஊரிலுள்ள  மீன்பிடிப் படகுகள் மாரிகாலம் வந்ததும் சிலமாதங்கள் மீன்பிடிப்பதற்காக தீவுப் பகுதிகளுக்குச் சென்று அங்கு  தங்கியிருந்கு மீன் பிடிப்பது வழக்கம்.

அங்கு மிகத்தரமான மீன்கள் சிறப்பான முறையில் பதப்படுத்தி கருவாடாக விருந்துக்கென்று கொண்டுவந்து   ஆலயத்தில் கொடுப்பார்கள். இதில் எமது இந்து மத உறவுகளும் பங்களிப்பது வழக்கம். இந்த விருந்தை சாப்பிட்ட எனது வயதிற்கு முற்பட்ட எம்மவர்கள் விபரிக்கும் போது. எமது நாக்களில் அமிலச்சுரப்பிகள் சுரக்கத்தான் செய்கின்றது. என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
 
ஆம் நாம் சிறு வயதாகவிருக்கும் போது கூடுசுற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சில வருடங்கள் கூடு  தேவாலயத்தின் உள்பகுதியில் சுற்றுவதற்கு மட்டும் பங்குத்தந்தையினால் அனுமதிவழங்கப்பட்டது. இந்தச்சம்பவம்  மறக்கப்படவேண்டும் ஆனால் மறைக்கமுடியாதது. பின் எல்லோரும் இனி அப்படியான சம்பவம் எதுவும் நடக்காது என  சில வருடங்களின் பின் பங்குத்தந்தைக்கு இளைஞர்களினால் உறுதி கொடுக்கப்பட்டபின் மீண்டும் சிறப்பாக பழையபடிகூடு சுற்றும்நிகழ்வு இடம்பெற்றது பாராட்டுவதற்குரியது. ஆனால் அந்த சிறப்பான விருந்து எமது காலத்திலில்லை  என்பதை மிக வருத்தத்துடன் பதிவிடுகின்றேன்.

மாதா கோயில் மணி
 
எமது முழு மயிலிட்டிக்கும் இருந்த அலாரம் மாதாகோயில் மணி காலை 5.30 மணி, மதியம் 12.00 மணி, பின்நேரம் 18.00  மணி. இந்த மணிஓசை கேட்டதும் மாணவர்கள், மீன்பிடிப்பவர்கள், தோட்டம் செய்பவர்கள், உத்தியோகம் பார்ப்பவர்கள்,என்னும் இதர தொழிகளைச் செய்பவர்கள் தங்கள் கடமைகளை செய்வார்கள்.
 
மாதா கோயில் தண்ணீர்
 
எமது ஊரில் உள்ள பெரும்பகுதி மக்கள் மாதா கோயில் தண்ணீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்துவார்கள்.  தாய்நாட்டில் வாழ்ந்த காலத்தில் எந்த வெளி ஊர் பயணம் செய்தாலும் திரும்ப எப்ப சென்று மாதா கோயில் தண்ணீர்  அருந்த வேண்டும் என்ற அவாவில் இருந்த காலம் கடந்து, இன்று உலகில் பல் வேறு நாடுகள் சென்றாலும் எப்ப நாம் இனி மாதா கோயில் தண்ணீரை மரணத்தின் முன் அருந்துவோம் என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வருகின்றோம். எப்ப தாயே மீண்டும் எமக்கு அந்த வரத்தைத் தருவாய். கண்ணீர் மல்க வேண்டுகின்றோம். மீண்டும் உம் தேவாலய வளவிற்கு எம்மை   அழைத்துச் செல்லும் அம்மா! தாயே!.

​
கூத்துப் பாட்டு
 
எம் மண்ணின் கலைவடிவத்தில் ஒண்றான கூத்து, மாசி 2ம் திகதி இரவு எம் பங்கைச் சேர்ந்த அண்ணாவியார் பூந்தன் யோசேவ் அவர்கள் மிகச்சிறப்பான முறையில் வடிவமைத்து மேடையேற்றிய அந்தக் காட்சிகள்   காலத்தால் அழியாதவை.   எம் நெஞ்சில் இன்றும்,  மரணம் வரை உள்ள நினைவுகள்.
 
உறவுகள் பல ஊர்களிலிருந்தும் வருதல்
 
மாசித்திருநாள் கொண்டாடுவதற்கு பல்வேறு பகுதிகளில் வாழும் எம் உறவுகள், குறிப்பாக முல்லைத்தீவு, தாளையடி,  செம்பியன்பற்று, நாகர்கோயில், கற்கோவளம், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, வலித்தூண்டல் என்னும் பல பகுதிகளிலிருந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி ஊரே விழாக் கோலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக விளங்கும் அந்தக் கண் கொள்ளாக் காட்சி இனி எப்ப வரும் தாயே! எப்ப வரும் தாயே!
 
மாதா கோயில் வெளிச்சம்
 
எம் நாட்டில் ஆழ்கடல் மீன்பிடியில் சிறந்து விளங்கியவர்கள் மயிலிட்டி மீனவர்கள் என்ற உண்மை இன்று உள்ள எம் சந்ததியில் பலருக்கு தெரிய வாய்பு இல்லை என்ற நிலையில் தான் உள்ளது. மீனவர்கள் ஆழ்கடலிருந்து திரும்பி வரும் போது முதலில் காங்கேசன்துறை சீமேந்து தொழிச்சாலை சுடர் தெரிந்து, பின் வெளிச்சம் தெரியும், பின் காணிக்கைமாதா  கோயில் சுடர் தெரிந்து பின் வெளிச்சம் தெரியும். மாதா கோயில் வெளிச்சம் தான் எமது ஊரின் கலைங்கரை வெளிச்சம்.இதன் பின் தான் அரசினால் கட்டப்பட்ட காங்கேசன்துறை கலங்கரை வெளிச்சம் தெரியும் என்ற செய்தி ஆழ்கடல்  மீன்பிடிக்கச்செல்லும் கடலோடிகளுக்குத் தெரியும்.
 
கொடிமரம் முறிதல்
  
1990ல் மாசித்திருநாள் முடிந்தபின் கொடி மரம் இறக்கப்படும். அப்போது கொடிமரம் முறிந்த நிகழ்வு நடந்தது. இதைப்  பலர் தீயஅறிகுறி எனவும், சிலர் 100 ஆண்டுகளாக இருந்து சமண்டல் மரம் பழுதடைந்து விட்டது என தமக்குள் பேசிக் கொண்டார்கள்.
 
பின் 15.06.1990 வெள்ளிக் கிழமை ஒரேநாளில் எந்த அறிவிற்பு ஏதும் இன்றி சிங்கள அரசினால் விரட்டப்பட்ட அந்தக்  கொடுமை எம் ஊரில் நிகழ்ந்தது உடுத்த துணியுடனும் கையில் கிடைத் பையுடனும் தெறித்து ஓடிய எம் உறவுகள் இன்று வரை முழுமையாகக் கூடு திரும்ப முடியாது, பீனிக்ஸ் பறவைகளாக வாழ்ந்து வருகின்றோம்.
 
மயிலிட்டி ஓர் துறைமுகப் பட்டணமாக விளங்கிய மண். பல காலங்களில் பல் வேறு பட்ட போர்களுக்கு முகம் கொடுத்த வீரர்கள் எம் ஊர் வீரம் செறிந்த மண். அரேபியர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் இவர்களின் இறங்கு  துறையாக மயிலிட்டி பட்டணம் விளங்கியது. யுத்த காலத்தில் சிங்கள இராணுவமும் எமது துறைமுகத்தை தமது இறங்கு துறையாகப் பாவித்த வரலாறு நமக்குத் தெரிந்தது. நமது ஊர் வீரர்கள் பல்வேறு யுத்தங்களைச் சந்தித்தவர்கள். நாம்     நெருப்பில் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் வருவோம்.
 
மாற்றுத்துணியில்லாது கையில் கிடைத்த பையுடன் சென்றவர்கள் இன்று வெளிப்படையாகவும் மறைமுகமாகவும்  நாட்டில் எமது ஊரையும் தாண்டி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பல்வேறு மக்களுக்கு தமது உதவிக்கரங்களை  நீட்டும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அச் செய்திகள் எம்  மனங்களில் மிகவும் ஆனந்தத்தை  தருகின்றது. உறவுகளே உங்கள் பணி தொடர காணிக்கை அன்னையிடம் நாமும் பிராத்திக்கின்றோம்.

மீண்டும்
 மாதாவின் திருச் சொரூபம் மறைக்கப்படல்

 
காணிக்கை மாதா தோவாலய பங்கின் பங்காளியான திரு.தேவலிங்கம் தாசன் எமது மயிலிட்டியை விட்டு மக்கள் புறப்படும் போது மாதாவின் திருச்சொரூபத்தை எடுத்து மறைத்து விட்டு மாதாவின் திருச் சொரூபத்தை தான் மறைத்துள்ளதாக திருமதி. செல்வராணி ஞானப்பிரகாசத்திடம் தகவல் பரிமாறியுள்ளார். அந்த சந்தர்ப சூழ்நிலையில் தாசனும் எங்கு மறைக்கப்பட்டது எனக் கூறவில்லை, திருமதி. ஞா.செல்வராணியும் அதனைக் கேட்கவில்லை, இதனை அறிந்த பங்கு இளைஞர்கள் தாசனை சந்திக்க முயற்றி செய்த போது, அதனை எங்கு மறைத்தது என மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முன் தாசன் உயிர் மண்ணுக்காக கொடுக்கப்பட்டுவிட்டது.



சில வருடங்கள் மாசித் திருநாள் கொண்டாட அனுமதி
 
இராணுவம் எமது ஊரைக் கைப்பற்றய பின் சில ஆண்டுகளின் பின்  சிலரின் முயற்சியால் மாசித் திருநாள்  கொண்டாட ஒரு நாள் இராணுவம் அனுமதித்தது. அப்போது எதிலிகளாக சொந்த நாட்டில் வாழ்ந்த எம் ஊர் மக்கள்  பல்வேறு இடங்கிலிருந்து வந்து மாதாவின் தரிசனம் பெற்றுச் செல்வார்கள். அந்த நிகழ்வு சில வருடங்களின் பின் நிறுத்தப்பட்டது.
 
தேவாலயம் முற்றாக அழிக்கப்படல்
 
அதன் பின் தேவாலய சுற்றுப்புறப்பகுதில் இருந்த அனைத்துப் கட்டிடங்களும் இராணுவத்தால் முற்றாக  தரைமட்டமாக்கப்பட்டது. இதில் தேவாலயமும், அதன் அருகேயிருந்த மருதடிப் பிள்ளையார் கோயில், மிகவும் பழைமை வாய்ந்த மிகப் பெரிய மருதமரம், பொது மக்களின் கட்டிடங்களும் தகர்க்கப்பட்டது.

பலாலி விமானநிலையத்தில் தேவாலயத்திலிருந்த திருச் சொரூபம் இன்று
Picture
Picture
மீண்டும் வருவா காணிக்கை மாதா 

ஒல்லாந்தர் காலத்தில் மறைக்கப்பட்ட தாய் மீண்டும் வந்தது போல் மீண்டும் வருவா எம் அன்னை அதற்காக நாம் தயாராகுவோம்.

"காணிக்கை மாதாவின் தரிசனம் கிடைக்க நாம் எல்லோரும் பிராத்திப்போம்"


ஆக்கம்
அன்ரன் ஞானப்பிரகாசம்.

​

இந்தப் பக்கம் website counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு

மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்

மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்

எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்

1 Comment
Sangeetha
24/1/2023 06:04:05

மாதா கோவிலைப் பற்றி புதிய பல தகவல்களை அறிந்து கொண்டோம். நன்றிகள் 🙏🙏

Reply



Leave a Reply.

    Picture

    அன்ரன் ஞானப்பிரகாசம்

    மயிலிட்டி


    பதிவுகள்

    January 2023
    November 2021


    முன்னைய பதிவுகள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023