மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்

24/1/2023

0 Comments

 
Picture
​நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.

முன்பு நான் படித்த பள்ளியின் முற்றமது - அதன்
பின்பு தான் விளையாடும் வளவு எனக்கு
வம்பு செய்து சிக்கலில் மாட்டவரும் போதெல்லாம்
தெம்பாக நான் சென்றொளித்த வீடு அது.

தேர்போன்ற 'நிழல்வாடி' குடை பிடிக்க - நன்றாக
வேர்விட்ட 'வேப்பமரம்' விசிறிவிட
ஊர் வணங்கும் 'மாதா கோயில்' மடிவிரிக்க
தேன்சுரக்கும் கிணறு ஒன்று தாகம்தீர்க்க
யார்வந்து எது சொல்லி திட்டினாலும்
பல பேரோடு நான் இருந்து மகிழ்ந்த இடம்.

உன்னைப் பிரிந்தது நான் எண்பத்து எட்டில் - உன்
நீரைப் பருகாமல், வேப்பமரவேரில் அமராமல்,
பெடியளோடு விளையாடித் திரியாமல்,
'குருசு'வின் அடியில் குசும்படிக்காமல்
முப்பத்தை ந்து வருடங்கள் முடிந்துவிட்டன.

கோயில் வளவே!
என்னுயிரின் இயங்குசக்தி முடிவதற்குள் - வந்து
உன்மடியில் அமர்ந்திருந்து கதையளக்க
தம்முயிரை ஈந்தளித்தோர் நினைவோடு - நீ
என்னையும் அரவணைக்க வேண்டும் தாயே!


பொன்னையா மலரவன்.
24/01/2023
​
Picture
Picture
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு

மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா! - அன்ரன் ஞானப்பிரகாசம்.

மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்

0 Comments



Leave a Reply.

    பொன்னையா மலரவன்

    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023