மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

கந்தகங்கள் இளைப்பாற வைரசுக்கள் போர்க்களத்தில். - மயிலைக்கவி

15/3/2020

Comments

 
Picture
வல்லரசுகளின் விளையாட்டா?
வர்த்தக முதலைகளின் வஞ்சனையா?
கந்தகங்கள் களைப்பாற வைரசுகள் ஊர்வலமா?
பூமி பாரம் கூடியதால் பூமாதேவியின் தாண்டவமா?
பூலோகம் எங்கணும் கொரோனாவின் ஆதிக்கமா?

காலங்கள் தோறும் களையெடுக்கும் திருடர்கள்,
ஏவிய கிருமியா உலகத்தை ஆட்டுது?
நூற்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் கொல்லுதாம்,
மருத்துவ உலகையே மிரண்டு ஓடச் செய்யுதாம்,

பிறந்த குழந்தையையும் பிசாசு கொல்லுதாம்,
அப்புவையும், ஆச்சியையும் அதிகம் பற்றுதாம்,
அரசன் முதல், அமைச்சர் வரை விட்டு வைக்கவில்லையாம்,
நடிகன் முதல், நாட்டாமை வரை தனிமைப் படுத்தப் படுகினமாம்,

விஞ்ஞான உலகம் இன்னும் விழி திறக்கவில்லையோ?
பொல்லாத நோயை போக்க வழி இல்லையோ?
பரவாமல் தடுக்க பல முறைகள் சொல்லுகிறார்,
அதில் எங்கள் பண்பாடும் ஆங்காங்கே கலந்துள்ளது.

தமிழனின் பண்பாட்டை உலகமே கொண்டாடுதாம்,
கட்டியணைத்தவரெல்லாம் கையெடுத்து வணங்கீனமாம்,
இந்து மத தத்துவங்கள் அனைத்தும் உண்மை என்று ,
இப்ப வென்றாலும் சொல்கிறார்கள் நாஸ்திகர்கள்,

உடற் சூடும், இருமலும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் அதற்கான அறிகுறியாம்,
வறண்ட தொண்டையும், வலியெடுக்கும் தசைகளும்
​உனக்குள் இருக்கும் உயிர்கொல்லியின் ஆரம்பமாம்,

பல்குழலில் இருந்து தப்பி வந்த தமிழனை, பாழ்பட்ட கொரோனா பயம் கொள்ள வைக்குது,

விண் கல் விழுந்தென்று விக்கிரமசிங்க விளக்குகின்றார்,
விலங்குகளே தந்ததென்று மருத்துவங்கள் இயம்புறது,
வூகானில் வேர் கொண்டு பாரெங்கும் படர்கிறது,
சீனாவும் ,அமெரிக்காவும் மாறி மாறிச் சாடுகிறார்,

துப்பரவு முக்கியமாம் ,தூரநின்று பேசட்டுமாம்,
கைகளை கழுவட்டுமாம், கூட்டங்களைத் தவிர்க்கட்டுமாம்,
ஆயுள்வேத வைத்தியமே அதிகம் பேசப்படுகின்றது,
அதுவும் தமிழன் பெருமை என்று வலைத்தளங்கள் புகழ்கின்றது,

உலகப் பெருநகரம் எல்லாம் ஓய்வெடுத்து தூங்குறது,
உயரப் பறந்த விமானம் பறப்புகளை தவிர்க்கிறது,
பாடசாலை கோயில் எல்லாம் இழுத்து மூடப்படுகிறது,
பள்ளிவாசல் தொழுகைகளும் கதவு சாத்தப் படுகிறது,

வர்த்தக நிலையம் எங்கும் வரிசையில் மக்கள் கூட்டம்,
கடையில் உள்ள தட்டுக்கள் எல்லாம் காலியாக கிடக்கிறது,
கடைகளில் இல்லையாம் கக்கா துடைக்கும் கடதாசி,
குளக்கரையில் குந்திய நமக்கு உவையேதும் தேவையில்லை,
​

பிறந்த நாள் கொண்டாட்டம் பிற் போடப்படுகிறதாம்,
கலியாணச் சாப்பாடும் பிறகு ஒரு நாள் பாப்பமாம்,
செத்த வீடு மட்டும் சிம்பிளாக நடக்கிறது,
கட்டியழவில்லை எனினும் கண்ணீர்விட்டு வரச் செல்கின்றோம்,
நாளை நம்மையும் காவ நாலு பேர் வேண்டுமல்லவா?.

-மயிலைக்கவி.

இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments
    Picture

    மயிலைக்கவி
    சண் கஜா

     

    பதிவுகள்

    October 2022
    July 2022
    March 2022
    January 2022
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

    காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
    தொடர்கள்
    free counter
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2022