காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 23
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
தொடர் 23
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
காத்தவராயன் வசனம்:
|
தம்பி, சூது சொக்கட்டானில் நீ தோற்று விட்டாய். எமது பந்தயத்தின் படி உனதுநாடு, நகர் அனைத்தும் எனக்குத் தந்து நீயும் எனது தோழமையாக
வரவேண்டும். |
சின்னான் வசனம்:
|
அண்ணா,தங்கள் தோழமையாக அடியேன் வருவதற்கு, நான் தத்தம் பண்ணித்தர வேண்டும். கானகம் சென்று கங்கை நீர் எடுத்து வாருங்கள்.
|
காத்தவராயன் வசனம்:
|
இதோ கொண்டுவருகின்றேன்...
|
சின்னான் வசனம்:
|
காத்தவராயர் தண்ணீர் எடுக்கச் சென்று விட்டார். காட்டிலுள்ள குன்று, குளம் கேணி யாவற்றிலும் தண்ணீர் இல்லாது போகக்கடவது.
|
காத்தவராயன் வசனம்:
|
என்ன ஆச்சரியம்! குன்று, குளம், கேணி யாவற்றிலும் தண்ணீர் இல்லை. இது அந்த சின்னானுடைய விளையாட்டாகத்தான் இருக்கவேண்டும். அவன் செய்தகெட்டித்தனத்திற்கு நானுமோர் பதில் கெட்டித்தனம் செய்கின்றேன் இதோ சின்னானிடம் செல்கின்றேன்
|
|
திரை அரசவை
|
சின்னான் வசனம்:
|
அண்ணா, தண்ணீர் கொண்டு வந்துவிட்டீர்களா?
|
காத்தவராயன் வசனம்:
|
சின்னான் செய்யிறதையும் செய்துவிட்டு பாசாங்கு காட்டுறாயா?
|
சின்னான் வசனம்:
|
நான் என்ன செய்தேன் அண்ணா?
|
காத்தவராயன் வசனம்:
|
எனக்குத்தான் தண்ணீர் இல்லாமல் செய்தாய் பரவாயில்லை . காட்டிலுள்ள அத்தனை மிருக ஜாதிகளிற் கெல்லாம் தண்ணீர் இல்லாமல்செய்து விட்டாயே?என்ன அநியாயம்.
|
சின்னான் வசனம்:
|
காட்டிலுள்ள மிருக ஜீவன்களிற்கு அண்ணாவா தண்ணீர் வைப்பது?
|
காத்தவராயன் வசனம்:
|
படுபாதக வேலை செய்து விட்டு பரிகாசமா செய்கின்றாய்? நீ செய்த வேலைக்கு எனது வலது கால் பாதரட்சையால் உன் முன்வாய்ப்பல்லை உடைத்து அதில் வரும் இரத்தத்தில் தத்தம் பண்ண வைக்க வேண்டும்போல் இருக்கின்றது. ஆனாலும் நீ, எனது பிரியத்திற்குரிய தோழமையாக என்னோடு பயணிக்கவேண்டியிருப்பதால் உன்னை விடுகிறேன்.
|
சின்னான் வசனம்:
|
அண்ணா பகிடிக்குச் சூதாடி விட்டு எனது பல்லை உடைக்கப் பார்க்கின்றீர்களே? அண்ணா! உங்கள் உயிர் நண்பனாக உற்ற நல்தோழனாக என்றுமே கை கொடுப்பேன்.
|
|
திரை- வீதி குடியானவர் வருகை
|
குடியானவர் பாடல்:
|
ஐயா போச்சே ஐயா போச்சே ஐயா! ஐயாவே
மகராசாவே எங்கள் பயிர்பாழாய்ப் போச்சுதையா நட்டுவைத்த கத்தரியை ஐயாவே மகராசாவே - அந்தக் குறுக்காலை போன நரி நடுவாலே பிரிச்சுக் கொண்டோடுதையா. படையோடை பண்டி வந்து ஐயாவே மகராசாவே - பனம் பாத்தியை இடறிக் கொண்டோடுதையா குட்டிக்குரங்கு வந்து ஐயாவே மகராசாவே - என்ர குஞ்சாச்சியை இழுத்துக் கொண்டோடுதையா பெரியதொரு யானைவந்து ஐயாவே மகராசாவே - என்ர பெண்டாட்டியைத் துாக்கிக்கொண்டு ஓடுதையா போச்சுதையா போச்சே ஐயா! ஐயாவே மகராசாவே-எங்கள் | பயிர்பாழாய்ப் போச்சுதையா |
|
திரை - அரசவை
|
குடியானவர் வசனம்:
|
ஐயா, முறையோ, முறை! மகாராசா, முறையோ முறை!
|
காத்தவராயன் வசனம்:
|
சின்னான், குடிமக்களின் அவலக்குரல் கேட்கிறது, சென்று பார்த்து வா
|
சின்னான் வசனம்:
|
அப்படியே செய்கிறேன் அண்ணா மக்களே! உங்களுக்கு என்ன நடந்தது
|
குடியானவர் வசனம்:
|
ஐயா, காட்டு விலங்குகள் எல்லாம் நாட்டிற்குள் புகுந்து, பயிர்களையும் நாசம் செய்து எங்களையும் துன்புறுத்துகிறது ஐயா...
|
சின்னான் வசனம்:
|
குடியானவர்களே! நீங்கள் ஒன்றிற்கும் பயப்படாது சென்று வாருங்கள். நாங்கள் கானகம் சென்று அவ் விலங்குகளை வேட்டையாடி வீழ்த்துகின்றோம்.
|
குடியானவர் வசனம்:
|
சரிஐயா, நாங்கள் போய் வருகின்றோம்.
|
சின்னான் வசனம்:
|
அண்ணா காட்டு மிருகங்கள் எல்லாம் நாட்டிற்குள் புகுந்து குடிமக்களிற்குத் தொந்தரவு பண்ணி வருகிறது.
|
காத்தவராயன் வசனம்:
|
நீ செய்த வேலையால் மிருக ஜாதிகள் எல்லாம் நாட்டிற்கள் வருகின்றது.
சின்னான், இப்பவே நாங்கள் கானகம் சென்று அந்தக் கொடிய மிருகங்களை வேட்டையாடி எமது மக்களைக் காப்பாற்ற வேண்டும் நீவேட்டைக்குரிய ஆயுதங்களை தயார்ப்படுத்துவாயாக.சீக்கிரம்! |
சின்னான் வசனம்:
|
இதோ அப்படியே செய்கிறேன் அண்ணா.
|
சின்னான் -காத்தவராயன் வசனம்:
|
கானகத்தைத் தேடியெல்லோ தம்பி இருபேரும் இப்போ கால் நடையாய்ப் போகினமாம் தம்பி இருபேரும்.
|
|
தொடரும்...
|
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.