• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 24

16/7/2022

Comments

 
Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 24
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்

 
​திரை - வனம்
 
வேடுவன் வரவு
வேடுவன் பாடல்:
வேட்டையிலே விருப்பம் கொண்டு
வில்லம்பு தான் கையில்க் கொண்டு
காட்டினிலே வேட்டையாடக்
​கவண் வேடன் நானும் வந்தேன்
வேடுவன் வசனம்:
​நீண்ட நேரமாக அலைகின்றேன் மிருகங்கள் ஒன்றும் சிக்கவில்லை. சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். அதோ, வருகிறது கூட்டம்...
​வேடுவன் பாடல்:
ஓடுது பார் வேகமதாய் ஒரு கணைக்ககப்பட மானினமே
​பன்றிகள் பலபல குட்டியைக் கூட்டிக் கொண்டு

(ஓடுது பார்.....]
காத்தவராயன் வசனம்:
​சின்னான் அதோ பார் ஓர் வேடுவன் ஓடி வருகின்றான். அவனுக்குப் பரீட்சயமான காடாகத்தான் இது இருக்கும். ஆதலால் அவனின் உதவியுடன் வேட்டையாடுவோம் வா.
சின்னான் வசனம்:
​அப்படியே செய்வோம். வாருங்கள் அண்ணா. வேடுவனை அணுகுவோம். 
காத்தவராயன் வசனம்:
​வேடுவனே, நீ இந்த வனத்திலே நீண்ட காலம் வேட்டையாடி வருபவன் போல் தெரிகிறதே? 
வேடுவன் வசனம்:
​ஆமாம் மகாராசா, என் வாழ்க்கையே இந்த வனந்தான். 
காத்தவராயன் வசனம்:
​அப்படியென்றால் எங்களோடு சேர்ந்து வேட்டையாட முடியுமா? 
வேடுவன் வசனம்:
​தங்கள் உத்தரவு. அப்படியே செய்கிறேன் மகாராசா. 
காத்தவராயன் வசனம்:
​​வேடுவனே அதோ பார் ஓர் மலை அங்கு சென்றால் என்ன வேட்டை ஆடலாம்? 
வேடுவன் வசனம்:
​ஐயா! அது உச்சமலை அங்கு போனால் உடும்பு வேட்டை ஆடலாம். 
சின்னான் வசனம்:
​வேடுவனே இதோ தெரிகிறது ஓர் மலை இங்கு சென்றால் என்ன வேட்டையாடலாம்?
வேடுவன் வசனம்:
​மகாராசா, இது பச்சை மலை இங்கு சென்றால் பன்றி வேட்டையாடலாம். 
காத்தவராயன் பாடல்:
​உச்ச மலை மலைச் சாரலிலே காத்தான் நான் உடும்பு வேட்டை சுழன்று ஆடுறன் பார்
சின்னான் பாடல்:
பச்சை மலை மலை மீதேறி சின்னான் நான் பன்றி வேட்டை பதுங்கி ஆடுறன் பார்
வேடுவன் பாடல்: 
கரிய மலை மலைச் சாரலிலே வேடன் நான் கரடி வேட்டை வேட்டை சுழன்றாடுறன் பார்
காத்தவராயன் பாடல்:
புல்லாங்கிரிச் சிகரம் மீதேறி காத்தான் நான் புலி வேட்டை ஒதுக்கி ஆடுறன் பார்
சின்னான் பாடல்:
குன்று குளம் சின்னான் ஏறி இறங்கி - இப்போ குருவி வேட்டை குறித்து ஆடுறன் பார்
வேடுவன் பாடல்: ​
வெள்ளி மலை மலை மீதேறி வேடன் நான் விருது வேட்டை விரும்பி ஆடுறன் பார்
​காத்தவராயன் பாடல்:
மான் கூட்டம் மலைமேல் வருகுதல்லோ - இப்போ மறித்து வைத்தோ மடக்கி ஆடுறன் பார்
சின்னான் பாடல்:
சிங்கக் கூட்டம் அண்ணாவே வருகுதல்லோ சின்னான் நான் இங்கிதமாய் இருந்து ஆடுறன் பார்
​காத்தவராயன் வசனம்:
​நீண்ட நேரம் வேட்டையாடியதால் களைத்து விட்டோம். 
​காத்தவராயன் பாடல்:
வேட்டையெல்லோ காத்தான் ஆடியதால் களைத்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே
சின்னான் பாடல்:
வேட்டையெல்லோ சின்னான் நானாடி வியர்த்து வீற்றிருந்தேன் நடுக்கானகத்தே
வேடுவன் பாடல்: ​​
வேட்டையெல்லோ வேடன் ஆடியதால் அலுத்து வீற்றிருந்தேன் இந்தக் கானகத்தே
​​காத்தவராயன் வசனம்:
தம்பி, எனக்குத் தாகமாக இருக்கிறது. எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்து வருவாயா? 
சின்னான் வசனம்:
இருங்களண்ணா, பார்த்து வருகிறேன் வேடுவனே இங்கே எங்காவது தண்ணீர் கிடைக்குமா? 
வேடுவன் வசனம்:
ஐயா, அதோ ஓடுகிறது ஓர் அருவி அங்கே சென்று தாகம் தீர நீரருந்துங்கள். 
சின்னான் வசனம்:
சரி, வேடுவனே.
அண்ணா அதோ ஓடுகிறது ஓர் அருவி. அங்கே சென்று நீர் அருந்தலாம் வாருங்கள்.

​​​காத்தவராயன் வசனம்:
அப்படியே ஆகட்டும் தம்பி.
(இருவரும் நீர் அருந்துதல்)
 
தொடரும்.....
இந்தப் பக்கம் web counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments
    Picture

    மயிலைக்கவி
    சண் கஜா

     

    பதிவுகள்

    August 2023
    October 2022
    July 2022
    March 2022
    January 2022
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    ALL

    காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
    தொடர்கள்
    free counter
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025