மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 25

22/10/2022

Comments

 
Picture

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 25
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்


​​​காத்தவராயன் வசனம்:
தம்பி சின்னான், இந்த நீரிலே ஒரு விதமான   நறுமணம் வீசுகிறதல்லவா?
சின்னான் வசனம்:
அண்ணா, அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லயே.
​காத்தவராயன் பாடல்:
மஞ்சளெல்லோ சின்னான் மணக்குதடா -எனக்கு 
​
மதிமயக்கம் தம்பி கொள்ளுதடா
சின்னான் பாடல்:
மஞ்சளெல்லோ அண்ணா மணக்குதென்று - ​நீங்கள் 
​
மதிமயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம்
​காத்தவராயன் பாடல்:
அத்தரெல்லோ தம்பி மணக்குதடா - எனக்கு 
ஆனந்த மயக்கம் வருகுதடா
சின்னான் பாடல்:
அத்தரிங்கு அண்ணா மணக்கவில்லை -நீங்கள் 
​
அதி மயக்கம் அண்ணா கொள்ள வேண்டாம்
​காத்தவராயன் பாடல்:
புனுகுமெல்லோ ராசா மணக்குதடா -எனக்கு 
​
புன் முறுவல் மெல்லப் பூக்குதடா
சின்னான் பாடல்:
புனுகுமெல்லோ புனுகு மணக்கவில்லை -தங்கள் 
​
புன் சிரிப்பு ஏனோ நானறியேன்
​காத்தவராயன் பாடல்:
ஆர் குளித்த இந்தப் பொய்கையடா -நீயும் 
​
அறிந்து வந்து துரையே சொல்லேனடா
சின்னான் வசனம்:
அண்ணா இவ்விடத்தில் அமருங்கள் இது யார் குளித்த பொய்கையென்று  வேடுவனிடத்தில் அறிந்துவருகின்றேன். 

​
வேடுவனே! இந்தப் பொய்கையில் யார் வந்து நீராடுவது?
​வேடுவன் வசனம்:
ஐயா, ஆயிரம் பேருக்கு அரியதோர் தங்கை ஆரியப்பூமாலை நீராடும் 
பொய்கை தான் இது.
​சின்னான் வசனம்:
ஓகோ..... அப்படியா சங்கதி. 

​
அண்ணா...
சின்னான் பாடல்:
ஆயிரம் பேரிற்கு அரிய தங்கை - அழகு 
ஆரியப்பூ மாலை குளித்த பொய்கை
காத்தவராயன் வசனம்:
தம்பி, ஆரியப் பூமாலை குளித்த பொய்கை இவ்வளவு வாசனை என்றால்   அந்த ஆரியப் பூமாலை எப்படி இருப்பாள்.  
எதற்கும் அந்த வேடுவனிடம் விசாரிப்போம் வா. வேடுவரே இந்தப் 
பொய்கையிலே தினமும் நீராடும் அந்த ஆரியப் பூமாலையின் 
அழகு வடிவை சற்று விவரிக்க முடியுமா?
வேடுவன் வசனம்:
ஐயா, 
அந்தமங்கை இங்கே நீராடுவதற்குப் பலத்த பாதுகாப்புடனேயே வருவாள்.  
சில வேளை மிருகங்கள் ஏதாவது  விக்கினங்கள் செய்தால் என்னை 
அழைத்து வேட்டையாடச் செய்வார்கள். 
அப்படியான வேளைகளில் அந்த அரசிளங்குமாரியை நான் 
பார்த்திருக்கின்றேன்.
காத்தவராயன் பாடல்:
கூந்தலுமோ மாலைக்கு எவ்வளவு - ​எந்தன் 
கோதையவள் மாது எவ்வழகு
வேடுவன் பாடல்: ​​
எல்லாருடை ஐயாவே கூந்தலுந்தான் - அங்கே 
ஒரு முழமாம் ஐயாவே இருமுழமாம்
​
அந்த ஆரியப்பூமாலை கூந்தலுந்தான் - என்னாலை 
அளவிடவோ ஐயா முடியுதில்லை

காத்தவராயன் பாடல்:
மேற்புருவம் வேடுவனே எவ்வழகு - எந்தன் 
​
மெல்லியலாள் மாலை எவ்வழகு
வேடுவன் பாடல்: ​​
மேற்புருவம் ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல 
​
வேப்பமிலை அழகுச் சாயலைப்போல்
காத்தவராயன் பாடல்:
மேற்புருவம் வேடுவனே இவ்வழகு - அவளின் 
​
நெற்றியும் தான் வேடுவா எவ்வழகு
வேடுவன் பாடல்: ​​
நெற்றியெல்லோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 
​
நிலவினது மூன்றாம் பிறையது போல்
காத்தவராயன் பாடல்:
கண்ணழகோ மாலைக்குச் சொல்லேனடா - அந்தக் 
​
கன்னிகையின் அழகைக் கூறேனடா
வேடுவன் பாடல்: ​​
கண்ணழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அழகுக் 
கருங்குவளை மலரின் சாயலைப் போல்
காத்தவராயன் பாடல்:
கண்ணழகோ கன்னிக்கு இவ்வழகு - அவளின் 
​
சொண்டழகை வேடுவனே சொல்லேனடா

வேடுவன் பாடல்: ​​
சொண்டழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 
சோலைக் கிளி சிவந்த சொண்டது போல்
காத்தவராயன் பாடல்:
சோலைக்கிளி மாலை இவ்வழகு - அவள் 
​
பல்வரிசை பார்த்துச் சொல்லேனடா

வேடுவன் பாடல்: ​​
பல்லழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - நல்ல 
​
பவளமது கோர்த்து நிரைத்தது போல்
காத்தவராயன் பாடல்:
மூக்கழகோ வேடுவனே எவ்வழகு - எந்தன்
 மொய் குழலாள் மாலை எவ்வழகு
வேடுவன் பாடல்: ​​
மூக்கழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - அந்த 
​மூங்கிலது ஐயாவே முளையது போல்
காத்தவராயன் பாடல்:
கழுத்தழகோ மாலைக்கு எவ்வழகு - எந்தன் 
​
கண்மணியாள் மாது தான் எவ்வழகு
வேடுவன் பாடல்: ​​
கழுத்தழகோ ஐயாவே சொல்லுறன் கேள் - இளம் 
கதலி வாழை அழகுத் தண்டது போல்

காத்தவராயன் பாடல்:
கழுத்தழகோ வேடுவனே இவ்வழகு - எந்தன் 
கன்னி நல்லாள் மாலை எவ்வழக்கு
வேடுவன் வசனம்: ​​
ஐயா ஆரியப் பூமாலையின் ஒவ்வொரு அங் அசைவுகளையும் இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் ஐயா. நீங்களும் கேட்டுக் கோண்டே போகலா ஐயா. மொத்தத்தில் இத்தனை அழகும் நிறைய பெற்றவள் தான் அந்த ஆரியப்பூமாலை.
காத்தவராயன் பாடல்:
மாலை தரித்தவளோ வேடுவனே சொல்லாய் 
​
மாங்கல்யம் சூடினளோ வேடுவனே பாராய்

வேடுவன் பாடல்: ​​
மாலை தரிக்கவில்லை மாது கன்னி மாலை
மாங்கல்யம் சூடவில்லை ஐயாவே பாராய் 

​காத்தவராயன் பாடல்:
கூறை அணிந்தவளோ ஆரியப்பூமாலை 
​
குங்குமம் தரித்தவளோ வேடுவனே சொல்லாய்

வேடுவன் பாடல்: ​​
கூறை அணியவில்லை ஐயாவே கேளாய்-அவள் 
​
குங்குமம் தரிக்கவில்லை ஐயாவே பாராய்

காத்தவராயன் பாடல்:
மஞ்சள் தரித்தவளோ ஆரியப்பூமாலை 
​
மணமாலை ஏற்றவளோ வேடுவனே கூறாய்
வேடுவன் பாடல்: ​​
இன்னும் மணமாகவில்லை ஐயாவே கேளாய் 
​
மணமாலை ஏற்கவில்லை ஐயாவே பாராய்

வேடுவன் வசனம்:
ஐயா! அந்த ஆரியப்பூமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதையா? அவள் என்ன செய்வாள் தெரியுமா?
காத்தவராயன் வசனம்:
​என்ன செய்வாள் வேடுவனே?
வேடுவன் பாடல்: ​​
போனால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள் 
​
போட்டிடுவாள் பெருவிலங்கு ஐயாவே பாராய்
காத்தவராயன் பாடல்:
போனவுடன் புருஷன் என்று ஆரியப் பூமாலை 
​
போற்றி முத்தம் தான் தருவாள் எந்தனது மாலை
வேடுவன் பாடல்: ​​
கண்டால் விடமாட்டாள் ஐயா ஐயாவே கேளாய் - அவள் 
​
கட்டிவைத்தோ விலங்கிடுவாள் ஐயாவே பாராய்

காத்தவராயன் பாடல்:
கண்டவுடன் கணவன் என்று ஆரியப்பூமாலை 
​
கட்டி முத்தம் தான் தருவாள் ஆரியப்பூமாலை

வேடுவன் வசனம்:
ஐயா, என்னவோ யோசித்து செய்யுங்கள். எனக்கு நேரமாகுது. நான் சென்று வருகின்றேன்.
  
தொடரும்.....
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments
    Picture

    மயிலைக்கவி
    சண் கஜா

     

    பதிவுகள்

    October 2022
    July 2022
    March 2022
    January 2022
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

    காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
    தொடர்கள்
    free counter
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023