பார்போற்ற வாழ்ந்திடல்
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட
உத்தமராசா நீங்கள்.....
ஊரெல்லாம் ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க
உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட
உத்தமராசா நீங்கள்.....
ஊரெல்லாம் ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க
உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........
தேம்பி அழுகின்றது
நீங்கள் உட்கார்ந்திருந்த வீட்டுத்திண்ணை தேடிவருவோர்க்கும் வாடிவருவோர்க்கும் நாடி பாராமல் ஓடிவந்து உதவிட உங்களைப்போல் இனிமேலும் மானிடம்தான் உயிர்பெறுமோ.. தோளில் துண்டுபோட்டு நடந்துவரும் உம்மழகு தேரில்வரும் திருவடியான் பேரழகிற்கொப்பாகும் தொண்டுகள் பல செய்தாய் ஊர்காக்க பாடுபட்டாய் உறவுகளை அரவணைத்தாய் வாடிநின்ற வறியோர்க்கெல்லாம் வள்ளலானாய்... கொடுத்துக்கொடுத்தே கர்ணணுக்கே அண்ணனானாய் புகழ்ந்து பாடுதல் ஒன்றும் உண்மைக்கு மாறில்லை. உண்மையே நீங்களாகி உறவுகளை அரவணைத்தீர்கள்.... செல்லமாக பேசினாலும் கோபமாக பேசினாலும் குழந்தைத்தனம் வந்துவிடும் அறியாமல் தவறுசெய்தால் அறிவுரையால் ஆசானாவீர்கள் உமக்காக வாழாது எமக்காகவே வாழ்ந்து அள்ளிக்கொடுத்த கை அமைதியாய் கிடக்கின்றது.. பேரப்பிள்ளைகளை மடிதனில் உட்கார பேறுபெற்றீர்கள் பெருமாள்போல் இருந்து எமைக்காத்த பெருமானே எமைவிட்டு சென்றாலும் எனிமேலும் துணைநின்று எமக்கு வழி காட்டிடுவீர். இறைநாமம் ஓர்நாளும் இல்லாமல் போகாது இறையாக நீங்கள் நின்று எம் நாமம் காத்தருளும் உங்கள் மானிட சாபல்யம் நீங்கி, புண்ணியாத்மா இறைபாதம் சரணடைந்து சாந்தியும், சமாதானமும் பெற வேண்டிநிற்கும்.
|
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.