மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் நடாத்தப்படும் மாலைநேர கல்வி நிலையத்தின் 2019ம் ஆண்டிற்கான ஆண்டிறுதி பெற்றோர் பொதுக்கூட்டம் கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அத்துடன் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பிறந்ததினத்தை முன்னிட்டு எமது கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் 32 மாணவர்களுக்கும் 2020ம் ஆண்டு தம்முடைய கல்விநிலைய செயற்பாட்டைத் தொடர்வதற்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
எமது இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று மயிலிட்டி திருப்பூரை சேர்ந்த நமது உறவுகள் நமது மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நிதிப்பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மாலைநேர வகுப்புக்கான உதவியை வழங்கிக்கொண்டிருப்பவர்களின் தற்போதைய விபரங்கள்.
அமரர் பொன்னம்பலம் மற்றும் அமரர் பேரின்பம்(ராசா) ஞாபகார்த்தமாக திரு.பொ.இராசகுமார்(சின்னப்பழம்) ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் - பிரான்சு கிளையை சேர்ந்த இராசரத்தினம் செல்வக்கொடி(மலர்விழி) குடும்பத்தினர் “பிரான்சு கிளையின் எங்கள் கரங்கள் செயற்றிட்டத்தினூடாக” ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
அத்துடன் அமரர்களான V.K இராசையா மற்றும் மனைவி திருமதி தெய்வானை ஞாபகார்த்தமாக V.K இராசையா குடும்பத்தினர் ஒவ்வொரு மாதமும் ரூபா 5,000 வீதம் ஒரு வருடத்திற்கான தொகையினை வழங்குகின்றார்.
அத்துடன் மயிலிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான திரு பொ.ரஞ்சனதேவர்(ரஞ்சன்) அவர்கள் இலவசமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
இவ் நல்உள்ளங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பாகவும் மயிலிட்டி மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
தற்போது எமது ஒன்றியத்தால் மொத்தமாக 23000/- மாதாந்தம் சம்பளமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
•முன்பள்ளி தொடக்கம் தரம் 2 வரையான ஆசிரியர் கொடுப்பனவு : 4000/-
•தரம் 3 தொடக்கம் தரம் 5 வரை (புலமைப்பரிசில் வகுப்பு) ஆசிரியர் கொடுப்பனவு: 8000/-
•ஆங்கில ஆசிரியரின் கொடுப்பனவு : 6000/-
• வரலாறு மற்றும் தமிழ் ஆசிரியர் கொடுப்பனவு: 5000/-
எதிர்வரும் 2020ம் ஆண்டிலும் எம்முடைய கல்வி நிலைய செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்து எமது மாணவச்செல்வங்களின் கல்விமட்டத்தை விருத்தி செய்ய மேலும் பல உறவுகளிடமிருந்து நிதிமூலத்தினையும் தங்கள் முழுமையான ஆதரவினையும் வேண்டிக்கொள்கின்றோம்.
மாலை நேரவகுப்புக்கள் தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு...
•திரு.ச.வசந்தராஜ் (ஆசிரியர்)-பொருளாளர்:(077-2334164)
•திரு.தி.மோகன்-செயலாளர் :
(077-448 6172)
நன்றி,
பொருளாளர்.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.