மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

பணியிடமாற்றம் பெற்றுச் செல்லும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் கௌரவிப்பு!

20/1/2021

0 Comments

 
Picture
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை  மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும், புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது.

யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டித்துறை  மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த திரு. திசவீரசிங்கம் சிவரூபன் அவர்களுக்கு திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

பழம் பெருமை வாய்ந்த மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகம் கடந்த இடப்பெயர்வு காலத்தில் பலத்த சேதத்திற்கு உள்ளாகியருந்த நிலையில் முதல்கட்ட புனரமைப்பு வேலைகள் முடிக்கப்பட்டு 15.09.2019 அன்று செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அன்று முதல் மயிலிட்டித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் முகாமையாளராக செயற்பட்டு வந்த திரு. திசவீரசிங்கம் சிவரூபன் திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கும், திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் முகாமையாளராக கடமையாற்றி வந்த திரு. முருகமூர்த்தி திருக்குமரன் மயிலிட்டித்துறை  மீன்பிடித் துறைமுகத்திற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து இதுவரை மயிலிட்டித்துறை  மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவித்து வழியனுப்புவதுடன் புதிய முகாமையாளரை வரவேற்கும் வகையிலும் மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டறவுச் சங்கத்தினரால் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வு ஆரம்பித்திருந்தது.

மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்டிருந்த மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து துறைமுக மண்டபத்தில் மயிலிட்டித்துறை க.தொ.கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. சு.றசியசிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு பொருளாளர் திரு. இரா.மயூதரனால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மீன்பிடித்துறைமுக முகாமையாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

பணியிட மாறுதல் பெற்றுச் செல்லும் திரு. தி.சிவரூபன், புதிய முகாமையாளர் திரு. மு.திருக்குமரன், காங்கேசன்துறை கிழக்கு கடற்றொழில் பரிசோதகர் பிரிவு கடற்றொழில் பரிசோதகர் திரு. மு.சயந்தன், மயிலிட்டித்துறை வடக்கு ஜே-251 கிராம சேவகர் திரு. கா.துவாரகேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க.வீரசிவாகரன் மற்றும் மயிலிட்டித்துறை க.தொ.கூ.சங்க நிர்வாகத்தினர், மயிலிட்டிவாழ் மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் ஒளிப்படங்கள் : இரா.மயூதரன்.
இந்தப் பக்கம் web counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    மயிலிட்டி செய்திகள்

    மயிலிட்டி

     

    பதிவுகள்

    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020
    December 2019

    முழுப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023