ஸ்ரீ லங்கா வனிதாபிமான 2020 மாகாண ரீதியான விருதுகள் பிரிவில் மகளீர் தின வெற்றியாளர் விருதினை மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் பெற்றுள்ளார்.
மீள்குடியேற்றப் பகுதியில் புதிதாக அங்குரார்பணம் செய்யப்பட்ட மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் மயிலை மகளீர் விவகார குழு மயிலிட்டித்துறை வடக்கு ஆகியவற்றினை சிறப்பான தலமைத்துவம் மூலம் வழிநடாத்திச் செல்லுதல் மற்றும் சிறந்த பெண் முயற்ச்சியாளர் அடிப்படையில் மேற்படி விருது தெரிவுசெய்யப்பட்டதுடன் இவ் விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய மகளீர் தினத்தில் கொழும்பு தாமரை தடாக மகிந்த ராஜபக்ச அரங்கில் இடம்பெற்றது.
செய்தி: வீரசிவகரன்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.