மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

கோவில் எங்கள் கோவிலாம்! பேச்சி அம்மனுக்கு கோவிலாம்! - இரா.மயூதரன்

1/2/2020

0 Comments

 
Picture
கோவில் எங்கள் கோவிலாம்! பேச்சி அம்மனுக்கு கோவிலாம்!

நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகாத்தை தாயவள்
திருவுருவப் படத்துடன் தொடங்கிய திருப்பணி
திருவுருவச் சிலையாக மிளிரப்போகுது நாளை

Picture
​எங்கட திருப்பூர் மண்ணில குடியிருந்து
எங்கள் குலம் காக்க திருவுளம்கொண்ட
பேச்சி அம்மாளின் பெருங்கனவு நனவாகுது இங்கே

எங்கட பேச்சி அம்மாளாச்சியோட
அற்புதங்கள் எண்ணிலடங்காதவை

மனமுருகி வேண்டியவர்களையும்
மனக்குறையோடு சென்றவர்களையும்
கைவிட்டதில்லை ஒருபோதும்

பலநாள் வெறும் கையோடு கரைதிரும்புபவர்கள்
மனதார வேண்டுதல்வைத்து மறுமுறை திரும்புகையில்
மீன்பிடிக் கலம் தாழுமளவிற்கு மீனை அள்ளிவந்தது
கதையல்ல மெய்யே என்பதற்கு பேச்சி அம்மன் முன்றலில்
பொங்கிச் சரித்த பொங்கல்களே சாட்சி

​ஓலைக்குடிலில் திருவுருவப் படமாக கொலுவிருந்து
எம் குலம் காத்த பேச்சி தாயவளுக்கு
ஆலயம் அமைக்கத்தொடங்கினர் எம்முன்னவர்கள்
எண்பதுகளின் தொடக்கத்தில்

கொஞ்சம் விசாலமா
பேச்சி அம்மனுக்கு கோவில கட்டவென
காணிக்கு காணி குடுத்தும்
நன்கொடையாகவும் பெற்ற இடமதில்
ஆலயம் அமைக்க எத்தனமாயிற்று

பேச்சி அம்மாளை மனதில் இருத்தி
முத்துமாரி அம்பாளை மூலவராக்கி
ஆலயம் அமைப்பதென கருத்தொருமித்து முடிவாயிற்று

கடலன்னை அள்ளி அள்ளிக்கொடுக்க ஈட்டிய எம்மவர் செல்வத்தில்
முழுக்க முழுக்க பொழி கல்லினாலே உருவாகியது ஆலயம்
அச்செல்வமும் போதா நிலையேற்பட்ட போதிலெல்லாம்
இண்டைக்கு கிடைக்கிறதெல்லாம் பேச்சி அம்மாளாச்சிக்குத்தான்
என முறைவைத்து கடலேறி கரைதிரும்பி
காணிக்கை செலுத்தினர் எம்முன்னவர்கள்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
கண்முன்னே உருவாகிய ஆலயத்தை
முடிவுறுத்தி ஆராதிக்குமுன்பே
ஆக்கிரமிப்பு போரின் வடிவில் வந்தது இடைஞ்சல்

ஆம், 15/06/1990 அன்று வலி வடக்கு பகுதியை
இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட
ஆக்கிரமிப்பு போர் எம்மவர் கனவுகளை கலைத்தது
வேரோடும் வேரடி மண்ணோடும் ஓரிரவில்
விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டோம் நாம்!

நாட்கள் மாதங்கள் வருடங்கள் உருண்டோடின...
இடம் விட்டு இடம் தாவும் உள்ளக இடப்பெயர்வு
வாழ்வின் சுவடுகளை அலங்கோலமாக்கியது...
உடனிருந்த உறவுகளின் உயிர்பறித்தும்
அவையவங்களை துண்டாடியும்
கொடிய போர் கோரமுகமெடுத்தாடியது...
இருந்தபோதிலும் எம்மவர் மனதிலிருந்த
பேச்சி அம்மாளின்ர கோவில் வேட்கை மட்டும்
மாறவேயில்லை...

எப்படியும் ஊர் திரும்புவம்தானே...
விட்டது விட்டபடியேதானே கிடக்கும்...
போனதும் முதல் வேலையா கோவிலை முடிக்கவேணும்
என்ற நம்பிக்கையுடன் கழிந்தது
ஓராண்டல்ல ஈராண்டால்ல
இருப்பத்தியேழு ஆண்டுகள்....

உயர்பாதுகாப்பு வலயமென்ற போர்வையில்
கால் நூற்றாண்டு கடந்த ஆக்கிரமிப்பின் பரிசாய்
ஊரே இடித்தழிக்கப்பட்டே கைவிடப்பட்டது

எங்க எங்கட வீடு...?
எங்க எங்கட வீதி...?
எங்க எங்கட வாசிகசாலை...?
எங்க எங்கட பெற்றோல் செட்....?
எங்க எங்கட பனிக்கட்டி தொழிற்சாலை...?
எங்க எங்கட உப்பு மில்...?
எங்க எங்கட படகுகள்...?
எங்க எங்கட வள்ளங்கள்...?
என்ற அங்கலாய்புகளையெல்லாம் மிஞ்சியதாக
எங்கட பேச்சி அம்மன் கோவில் அழிப்பு
வெகுவாகப் பாதித்தது எம்மவர்களை...

கிழவி என்றும்
ஆச்சி என்றும்
பேச்சி என்றும்
அம்மாளாச்சி என்றும்
பற்பல நாமம் கொண்டு
எம்மவர் மூச்சிலும் பேச்சிலும் நிறைந்திருந்தாள்!

இருக்கும் போதிலும்
எழுந்திருக்கும் போதிலும்
'என்ர பேச்சி அம்மாளாச்சி' என
மூச்சுக்கு முந்தி உச்சரிக்குமளவிற்கு
ஒன்றித்துப்போன எங்கட குலதெய்வத்துக்கு
எப்பாடுபட்டேனும் ஓர் ஆலயம் அமைப்பதென்ற
வேட்கையின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது
நாடுவிட்டு நாடு கடந்தும்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியும்
புலம்பெயர்ந்திருக்கும் எங்கள்
திருப்பூர் ஒன்றிய உறவுகளின் தாராள நிதிஉதவியே

எவ்வித குற்றம் குறையேதுமின்றி
அமையவிருக்கும் ஆலயத்தை உருவாக்க
துறைசார் விற்பனர்களை ஆலோசித்து
அரும்பணியாற்றி வருவதுடன்
கண் துஞ்சாது இறைபணியாற்றிவரும்
ஆலய பரிபாலன சபையினரது சேவை மகத்தானது

ஊர்கூடி ஒருமித்த உணர்வுடன் தொடரும்
இக்கைங்கரியம் சிறப்புடன் நிறைவேற
அருள்மிகு பேச்சி அம்மாளின் அருள் வேண்டி பணிகின்றேன்!

​இரா.மயூதரன்
​

இந்தப் பக்கம் best free website hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    பேச்சி அம்மன் ஆலயம்

     

    பதிவுகள்

    July 2022
    April 2022
    February 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023