நற்பணி செய்யும் மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயம்...
இந்த சமூகத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக பல நற்பணிகளை செய்யும் ஆலயமாக,
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயம் திகழ்கின்றது.

இவ் ஆலயத்தினை சார்ந்த தொண்டர்கள் சமய வழிபாடுகளை கடந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனார்.
வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மயிலிட்டி கலைமகள் பாடசாலை என்பவற்றில் கல்வி கற்கும்,
350 மாணவர்களிற்கு மதிய உணவினை வழங்கி வருகின்றனர்.
உள்நாட்டு யுத்த சூழ்நிலமை காரணமாக கடந்த 1990ம் ஆண்டு இப் பிரதே மக்கள் இடம்பெயர்ந்து செல்லும்போது மிகவும் சிறிய ஆலயமாக இவ் ஆலயம் காணப்பட்டது.
இப் பிரதேசம் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பின்பு இவ் ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் மிகவும் சிறப்புற மீள கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்கள் சமய வழிபாடுகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இந்த சமூக நன்மைக்காகவும் பணியாற்ற வேண்டும் எனற எமது கோரிக்கையின் வெளிப்பாட்டினை, இந்த ஆலயம் வெளிப்படுத்தி நிற்கின்றமையினை நாம் வெகுவாக பாரட்டி நிற்கின்றோம்.
இது போன்று ஏனைய ஆலயங்களும் சமூக நன்மை கருதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி எமது பிரதேச மக்களின் நன்மைக்காக உழைக்க வேண்டும் என்பதே எமது உயர்ந்த எதிர்பார்ப்பாகும்.
பக்தர்களும் ஆலயங்களிற்கு நிதி உதவி வழங்குகின்ற நல்ல உள்ளங்களும் இது போன்ற பணிகளை முன்னெடுக்க ஆலயங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என நாம் தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.
குறிப்பாக ஆலயங்களில் நடைபெறும் தேவையற்ற நிகழ்வுகளை தவிர்த்து அதற்காக செலவு செய்யும் பணத்தினை எமது சமூகத்தின் நன்மைக்காக செலவு செய்ய ஆலயம் சார்ந்த நபர்களை ஊக்கப்படுத்த, இந்த சமூகம் மீது கரிசனை கொண்ட சகல உள்ளங்களும் முயற்சி எடுக்க வேண்டும் என நாம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.