மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

எனது அன்பு மாமா அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

29/1/2023

2 Comments

 
Picture
எனது அன்பு மாமா அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

வளம்மிகு மயிலிட்டி மண்ணின் பெருமைமிகு தோன்றல் அமரர் திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்கள். பலருக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். உயர்ந்த திடகாத்திரமான தேகமும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட மரியாதையான தோற்றத்திற்குச் சொந்தக்காரர்.

Picture
சோர்வு என்பது அறியாத சிறந்த உழைப்பாளி. சிறந்த கல்விமான். ஆழ்ந்த அரசியல் நோக்கம் கொண்ட ராஜதந்திரி. ஆழ்ந்து சிந்தித்து செயற்பட்டு எடுத்த காரியத்தை வெற்றிபெற வைக்கும் அறிவு கொண்டவர். தான் சார்ந்த மக்களுக்காக ஓடி ஓடி உதவும் மனம்கொண்டவர். மயிலிட்டியில் மட்டுமல்லாது அவர் சார்ந்த அயல்கிராமங்களிலும் பல புதிய விடயங்களை அறிமுகப்படுத்திய முன்னோடி.இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து எமது கிராமங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் முதல்மனிதராக ஆரம்பத்திலிருந்து செயற்பட்டவர்.

அருணாசலம் தங்கம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது பாசமிகு மகன் ஆக 28.08.1945ம் ஆண்டு திருப்பூர் மயிலிட்டியில் பிறந்தார். தவமணி (இரத்தினம்), உருக்குமணி ஆகிய மூத்த சகோதரிகளையும் சதாசிவம் (சித்தப்பா) எனும் இளைய சகோதரரையும் உடன் பிறந்தவர்களாக கொண்டவர். 1967 இல் திருமணபந்தத்தில் இணைந்தார். உருத்திராட்சரூபவதி (தேவி) அவர்களைத் திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுக்கு தந்நையானார்.

தனது ஆரம்பக்கல்வியை மயிலிட்டி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் (தற்போதைய யா/ மலிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திலும், S.S.L.C வரை யாழ். காங்கேசன்துறை அமெரிக்க மிசன் பாடசாலையிலும் பயின்றார். அதன்பின் தன் சொந்த முயற்சியால் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களில் பயின்று ஒரு வானொலிப் பெட்டியை தானாக உருவாக்கும் அளவிற்கு திறமை பெற்றார். அத்துடன் மின்சார வேலைகள் சம்பந்தமாக சரியான புரிதலற்ற காலத்தில் தனது வீட்டிற்கு முழுமையான மின்சார இணைப்பை உருவாக்கினார். மின்சார இணைப்பு சம்பந்தமாக அயலவர்களுக்கும் உதவினார்.
​

Picture
டியிற்றல் தொழில்நுட்பத்தினூடாக ஒளிப்படங்களை உருவாக்கத் தொடங்கிய காலத்திற்கு முன்னமே 1970 களில் இருந்து புகைப்படத்துறையில் சிறந்து விளங்கினார். புகைப்படத்துறையில் புதிய நுட்பங்களையும் புதிய பரிமானங்களையும் கையாண்டு புகைப்படத்துறையில் பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். கறுப்பு வெள்ளை நிழல் படங்களை தனது வீட்டிலேயே இருட்டு அறை அமைத்து பிரதி செய்தார். 70களில் தேசிய அடையாள அட்டைக்கு படம் எடுப்பதற்கு அனுமதிபெற்ற புகைப்படக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
​

​அத்துடன் மீன்பிடி விசைப்படகுகளை (றோலர்) உருவாக்குவதிலும் திறமை பெற்றவர். தனக்குச் சொந்தமான மீன்பிடிப் விசைப்படகை தானே உருவாக்கிய திறமைசாலி. மின்சாரமில்லாத போர்க்காலங்களில் (1990) சைக்கிளில் டைனமோ பொருத்தி மின்சாரம் பெற்று வானொலிச் செய்திகளை கேட்பார். ஊரே திரண்டு வந்து இவரது வீட்டில் கூடி நாட்டு நிலவரங்களை அறிந்து கொள்ளும்.

இன்னும் பல தனிப்பட்ட திறமைகளை தன்னகத்தே கொண்ட இவர் சிறந்த வாசிப்பு பழக்கத்தை கொண்டவர். 1980 களிலேயே குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற தென்னிநதிய வார இதழ்களையும் இலங்கையிலிருந்து வெளிவரும் வார இதழ்கள் மற்றும் பத்திரிகைகளையும் வாங்கி வாசிப்பதோடு அவற்றை சேகரித்து சிறிய நூலகத்தை உருவாக்கி வைத்திருந்தார். அத்துடன் பஞ்சாங்கம் பார்ப்பதற்கும் அறிந்து வைத்திருந்தார். உறவினர்களுக்கு சுபநிகழ்வுகளுகான நாட்களைக் குறித்துக் கொடுப்பதும் இவரே ஆவார்.

Picture
வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத்தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வலிவடக்கின் பல பிரதேசங்களின் விடுவிப்பிற்கும் மீள் குடியேற்றத்திற்கும் உதவியுள்ளார். அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்க ஆலோசகர், மயிலிட்டி மீள்குடியேற்ற சங்கத் தலைவர், மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபைக் காப்பாளர், மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய இளைஞர் நற்பணி மன்றக் காப்பாளர் ஆகிய பொறுப்புக்களிலும் தன்னை இணைத்துக் கொண்டும் 77 ஆவது வயதிலும் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

​மயிலிட்டியின் விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிப்பதிலும், அயல்கிராமங்களினை மீட்பதிலும் தனது பணிகளை தொடர்ந்த வேளை 31.12.202 அன்று எதிர்பாராதவிதமாக சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.

​என்றும் அவரது ஆலோசனைகளும் அறிவுரைகளும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். என்றும் எம் நெஞ்சங்களில் மாமாவின் நினைவுகள் நீங்காதிருக்கும். மாமாவினுடைய ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல பேச்சி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

- சங்கீதா தேன்கிளி


இந்தப் பக்கம் hit counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு

அருணாசலம் தந்த அரும் பெரும் புதல்வனே குணபாலசிங்கம் - மகிபாலன் மதீஸ்

2 Comments
சிவதாசன் கமலன்
29/1/2023 11:15:21

எனது ஊர் மயிலிட்டி மக்கள் குணபாலசிங்கம் ஐயா அவர்களை சரியாக பயண்படுத்த தவறிவிட்டார்கள். இன்னும் சில வேலை திட்டங்களை செய்திருக்கலாம் தவற விட்டுவிட்டோம்.

Reply
குணபாலசிங்கம் அருண்குமார் link
29/1/2023 20:36:06

கருத்துக்கு நன்றி.

Reply



Leave a Reply.

    சங்கீதா தேன்கிளி

     

    பதிவுகள்

    January 2023
    March 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023