நண்பர்களே, ,
இந்நாட்களில், எமது வயதின் காரணமாக தூக்கம் இடையில், அதுவும் அதிகாலையில் கலைவது இயல்பு ஆயிடுச்சு. அந்தக் கலைவின் பின் திரும்ப தூங்குவது கடினமான ஒன்று. அப்படியான நேரங்களில் மனது பழைய நாட்களை நோக்கி நகர்வது இயல்பு. அந்த நினைவுகளை எழுத்தில் வடிக்கலாம் என்று அப்பப்ப மனம் நினைக்கும்.

இப்பொழுது அதற்கான நேரம் வந்ததால் அவற்றை எழுத்தில் கொண்டு வந்து வரிசைப்படுத்தி தொகுத்து பகுதிகளாக உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன். இத்தொகுப்பிலுள்ள விவரங்கள் யாவும் நான் சம்பந்தப்பட்டதாகவும், நான் அறிந்தவைகளாகவும், என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களாகவே இருக்கின்றன. இதன் நோக்கம், நீங்கள் என்னை பற்றி அறியப் பண்ணுவதல்ல. எனக்கேற்பட்ட அனுபவங்கள், நீங்கள் சம்பந்தப் பட்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு அதேமாதிரி அனுபவம் இருந்தாலோ, உங்களை அந்த நினைவுகளிற்கு இழுத்துச் செல்லலாம். அவை இனியமையானவையாகவும் துன்பத்திற்குள்ளாக்காதவையாகவும் இருக்குமென நம்புகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் பகிர தொடங்குவேன். ஆரோக்கியமான ஆலோசனைகள் எப்பொழுதும் வரவேற்கத்தக்கவை. என்னால் முடிந்தவரை யார் மனதையும் புண்படுத்தாதவாறு பார்த்துக்கொள்வேன்.
இதுதான் எனது தொகுப்பின் முதல் பகுதியை பகிர்வதற்கான தருணம். இந்த தொகுப்பிற்கு “நினைத்தது நான் தான்” என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன். என்னை நன்றாக தெரிந்தவர்கள் இதன் flavorஐ எப்படி நினைப்பார்கள் என்று எனக்கு தெரியும். தொடர்ந்து படிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். இந்த பகுதிக்கு “தூக்கம் கலைந்தது” என்ற தலைப்பு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.