மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

"இழப்பு" நினைத்தது நான் தான் - சுகுமார் தியாகராஜா

18/4/2021

0 Comments

 
​நண்பர்களே இந்த வார பகுதிக்கு இழப்புகள் என்று தலைப்பிட்டு உள்ளேன். இதோ அது...

இந்த பகுதியை வெளியிடும் நேரத்தில் எல்லா தமிழ் நெஞ்சங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆம் சகல தரப்பு தமிழ் ரசிகர்களையும் தன் நகைச்சுவையாலும் கருத்துக்களாலும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் “சின்னக்கலைவாணர்” விவேக் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கினார். 
​
இவரது மறைவு அனைத்து தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த கவலைக்கும் இட்டு சென்றுள்ளது. நாங்களும் இவரது மறைவுக்கு எங்களது இறுதி வணக்கத்தை செலுத்திக் கொள்வோம். அத்துடன் இவரது ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்போம். இவ்வளவு காலமும் தனது நகைச்சுவை மூலம் எங்கள் நலனில் கவனம் செலுத்தியதற்காக நன்றியையும் செலுத்தி கொள்வோம். இன்னும் சிறிது காலத்திற்கு இவரது நகைச்சுவையை ரசிக்க முடியாமற் பண்ணிவிட்டார் என்று கவலை அடைகிறோம். இவரது நகைச்சுவையை பார்க்கும் போதெல்லாம் இவரது இழப்பு வந்து கவலையையூட்டுமே. எப்படி அதை ரசிக்க முடியும். ஆனாலும், கலைவாணர் எப்படி நினைவில் கொள்ளப்படுகிறாரோ அப்படி இவரும் சின்னக்கலைவாணர் என்று தமிழ் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை .
​

இப்பொழுது நாங்கள் எங்கள் தொடருக்கு வருவோம். இன்னொரு தகவலையும் இங்கு பகிர விரும்புகிறேன். கீழுள்ள சம்பவம் நடந்த நாள் November 19 1984. இந்நாள் மறைந்த சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் பிறந்த நாளாகும்.
கடந்த பகுதியில் இராணுவ அதிகாரியொருவர் இரும்புக்கடையில் சிறிய குவளை ஒன்று வாங்கி சென்றதை குறிப்பிட்டிருந்தேன். அந்த சம்பவம் நடந்து சில மணித்தியாலங்கள் கடந்த பின், வர்த்தலைவிளான் பகுதியில் ஒரு கண்ணிவெடி தாக்குதலில் ஒரு உயரதிகாரி கொல்லப்படடார் என்று ஒரு செய்தி பரவியது. அவர் கேர்ணல் ஆரியபெருமா என்னும் இராணுவ தளபதி ஆவார். அதன் பின் அவர் அரசினால்  பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்படடார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் யார் இந்த அதிகாரி என்று. அவர் வேறு யாருமல்ல இரும்புக்கடையில் என் கையால் குவளை பெற்று சென்றவர் தான்.
அக்காலத்தில் ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இளைஞர்கள் மத்தியில் ஒருவகையான வரவேற்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது எனலாம். அந்த நேரத்தில் கேர்ணல் தரத்தில் ஒரு தளபதி கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. இது வெற்றிகர தாக்குதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அதை எண்ணும் போது மனதிற்கு சிறிது நெருடலாக இருக்கிறது. ஏனென்றால் அவர் இரும்புக்கடை வந்தபோது அவர் ராணுவ அதிகாரியாக வரவில்லை, கடையில் பொருள் வாங்கும் ஒரு சாதாரண மனிதராக தான் வந்திருந்தார். என் பார்வையில் அவர் கொடுமையான அல்லது கடுமையான அதிகாரியாக தெரியவில்லை. அந்த சில கணங்களில் ஒருவரை எடைபோட முடியாது என்பது தெரியும். ஆனாலும் மனதில் ஏதோ சிறு நெருடல் ஏற்படுகிறது. இந்த போராட்டத்தில் பலவகை உயிரிழப்புகளும் நடந்துள்ளன. ஆனால்  எங்கள்  நாட்டின் துரதிர்ஷ்டம் ஒரு தரப்பினர் இந்த இழப்புகளின் பெறுமதியையோ, நாம் கொடுத்த விலையையோ உணர்ந்த மாதிரி இல்லை. வெற்றிப் போதையை மக்களிடம் பரப்பி பதவிக்கு வருவதில் குறியாய் இருக்கிறார்கள்.

இப்பொழுது நடந்த சம்பவத்தின் முழு விபரத்தையும் பார்ப்போம். அன்று தையிட்டியில் வைத்து ஒரு சிங்களவர், மல்லி என அழைக்கப்படுபவர், இயக்கத்தினால் கொல்லப்பட்டிருந்தார். இவரை எனக்கும் தெரியும், அப்பப்ப பார்த்திருக்கிறேன். மயிலிட்டியில் மீன்பிடி தொழில் செய்பவர்களுக்கு உதவுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவரின் உடலை பார்ப்பதற்கோ அல்லது மீட்பதற்கோ வந்தவர்கள் தான் ஆரியப்பெருமாவும் அவர் அணியினரும். பலாலியிலிருந்து தையிட்டி செல்லும் வழியில் தான் இரும்புக்கடையில் நிறுத்தி அந்த குவளையை வாங்கி சென்றார். தையிட்டியில் அவர்கள் கடமை முடிந்த பிறகு அங்கிருந்து தெல்லிப்பளை சென்று, கட்டுவன் வீதியூடாக முகாம் திரும்பி கொண்டிருந்தார்கள். அவர்கள் வறுத்தலைவிளான் பகுதியை அடைந்த போது தாக்குதலுக்கு உள்ளானார்கள். அத்தாக்குதல் ஆரியபெருமா சென்ற ஜீப்பின் மேல் குறிவைக்கப்பட்டு நடாத்தப்பட்டது. அதில் அவர் கொல்லப்பட்டார். ஆனால் இங்கு ஒன்று குறிப்பிட வேண்டும், அவர்கள் தையிட்டியில் உடலை பார்த்த பிறகு அவர்கள் ஏன் தெல்லிப்பளை சென்று முகாம் திரும்பும் வழியை தெரிவு செய்தார்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் போனவழியில் திரும்புவதே குறுகிய வழியாகும். அநேகமாக அது ராணுவ நடைமுறையாய் இருக்கலாம் - போனவழியில் திரும்புவது ஆபத்து மிக்கது என்று கருதியிருக்கலாம். 

அந்த நாட்களில் ஏதாவது தாக்குதல் நடந்தால் அந்த இடத்திற்கு நண்பர்களுடன் சென்று பார்ப்பது வழக்கம், எல்லாம் curiosity தான். புதினம் பார்க்க என்றும் சொல்லலாம். அது கொஞ்சம் ஆபத்தானதும் கூட. இத்தருணத்தில் அந்த இடத்தை பற்றி ஒன்று சொல்லியாகணும். வறுத்தலைவிளான் பகுதியில்  புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் வீடு இருப்பதாக சொன்னார்கள். அந்த வகையில் வறுத்தலைவிளான் சென்ற போது, சம்பவம் நடந்த இடத்தை சுற்றியிருந்த வீடுகள் யாவும் தீக்கிரையாக்க பட்டிருந்தன. நாங்கள் அங்கு சென்ற போது ஒரு வீடு முற்றாக எரிந்து collapse ஆவதை பார்க்க கூடியதாக இருந்தது. அதில் சில வீடுகளிலுள்ள தீயை அணைக்கும் முயற்சியும் நடந்தது. அதில் நாங்களும் எங்களாலான சிறு உதவிகளை செய்தோம். பிறகு தாக்குதல் நடந்த இடத்தில், எங்களுடன் வந்தவர்களில் ஒருவர்(புஸ்பராஜா), துப்பறிவாளர்கள் தடயங்களை தேடி எடுக்கிற மாதிரி ராணுவ வாகனத்தின் பாகங்களை பொறுக்கிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் நிறைய நேரம் நிற்பது ஆபத்தானது என்பதால் நாங்கள் வீடு திரும்பினோம்.

இதே மாதிரி இன்னொரு தடவை இடைக்காட்டிலும் ஒரு கண்ணிவெடி தாக்குதல் நடந்தது. வழமை போல் அங்கு சென்று பார்த்த போது எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அதனால் அத்தாக்குதல் வெற்றியடையவில்லை என்று கருதினோம். 

இப்போது மனது இடைக்காடு பற்றி நினைத்தபடியால், என்னுடன் campusல் படித்த இடைக்காட்டை சேர்ந்த செங்கோவிடம் சென்றது. இவரைப் பற்றி சொல்வதென்றால், அமைதியான சாந்தமான மனிதர். தாடியுடன் இருப்பதால்  நாங்கள் கேலியாக சாமியார் என்று சொல்லுவோம். அதற்காக நீங்கள் நித்தியானந்தாவை எல்லாம் நினைக்க கூடாது. இவர் அதற்கு முற்றிலும் எதிர்மாறானவர். இவர் இப்பொழுது அமெரிக்காவில் நிதி சம்பந்தமான அமைப்பு (Fidelity) ஓன்றில் வேலை செய்கிறார். நாங்கள் பங்குசந்தை சம்பந்தமான எந்த கேள்விக்கும் இவரைநாடுவோம். இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரது காதலுக்கு ஒரு தடவை நான் அனுமன் வேலை பார்த்துள்ளேன். இவரது இணை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் படித்து முடித்து யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சிநெறியில் ஈடுபட்டிருந்தார். நான் எங்கள் தவணை(term) விடுமுறைக்கு வீடு சென்றபோது, எனது நண்பர் சிறு பொதி ஒன்றை தந்து தனது இணையிடம் கொடுக்குமாறு கேட்டிருந்தார். நானும் அதை சந்தோசத்துடன் உரியவரிடம் சேர்த்தேன். இப்பொழுது சிலபேர் இந்த பழமொழியை நினைக்கலாம், ஊர்ப்பிள்ளைக்கு ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானா வளரும் என்று. தன்பிள்ளை தறிகெட்டு போச்சு என்று சொல்லத்தான் முடியுமா.

அடுத்த பதிவில் எங்கள் ஊரில் நடந்த அமைதி வழியான எதிர்ப்பை பற்றி பார்ப்போம்.​
​
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சுகுமார் தியாகராஜா
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    April 2021

    அனைத்துப் பதிவுகள்

    All

    இந்தப் பக்கம் best free website hit counter வருகை தந்தோர்.
Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2022