காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் 125 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான துடுப்பாட்ட போட்டியில் யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய அணியினர்.
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் 125 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான துடுப்பாட்ட போட்டியில் யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய அணியினர்.
0 Comments
க.பொ.த (சா/த) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களயும் பாராட்டி வாழ்த்துகின்றோம் - கலைமகள் ம19/9/2025
வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.) மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது. ஆனால் பாடசாலையைக் காண்பதற்கு முன்பே கண்ணில் புலப்படுவது பாடசாலையை ஒட்டியுள்ள தேவாலயமொன்றின் சிதைந்த இடிபாடுகள். இதனாற் போலும் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்றால் பலருக்குத் தெரிவதில்லை. பேய்க்கோயில் பள்ளிக்கூடம் என்றால்தான் அடையாளம் காட்டுவார்கள் அவ்வூர் மக்கள். பேய்க்கோயில் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட புரட்டஸ்தாந்து மதத் தேவாலயம். இத் தேவாலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் பல. 1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 0419/9/2019
கலைமகளின் செல்லக் குழந்தைகள் நல் ஆசான்களின் வழிநடத்தலில் சகல விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினர். உடற்பயிற்சி போட்டியிலும் போற்றத்தக்க வகையிலேயே தங்களின் ஆளுமையால் எமது வித்தியாலயத்திற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், தாச்சிப் போட்டி, உடற்பயிற்சி, எல்லே எதனையும் விட்டுவைக்கவில்லை, அத்தனை சவால்களையும் களம் கண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்து கலைமகளுக்குப் பெருமை சேர்த்த செல்லக் குழந்தைகள் நாங்கள்.
|
|