
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.