மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 7/10/2018) சுமார் இரண்டு வருடங்கள் அன்மித்த நிலையில் நமது புலம்பெயர் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த 19/07/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகத்தினரால் மயிலிட்டி வாழ் இளைஞர்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் இலட்சனையுடன் பெயரும் பொறிக்கப்பட்ட T-shirts வழங்கும் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் T-shirts க்கான நிதிப்பங்களிப்பினை திருப்பூர் ஒன்றியம் இலண்டன் கிளையின் தலைவர் திரு சிங்கவாகனம் இராஜசுந்தரம் மற்றும் செயலாளர் திரு பாலசிங்கம் றசியசிங்கம்(றசி) அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இருந்தே நமது இளைஞர் ஒன்றியத்திற்கு மிகவும் உறுதுனையாக இவர்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் நல் உள்ளங்களுக்கு எமது இளைஞர் ஒன்றியம் சார்பாக மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு எமது இலட்சனை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட T-shirts வழங்கிவைப்பதற்கு உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி,
நிர்வாகம்,
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.