திருமந்திரம் ( பாகம் 8 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
தொழுது பணிவார்க்குத் தோழனும் ஆவான்
“சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குக்
கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே” பாடல் 41
அமுதம் பெற வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்பொது கொடிய நஞ்சு தோன்றியது. அதைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களைக் காக்க நஞ்சை உண்டு கண்டத்திலே தேக்கிக் கொண்டான் சிவபெருமான். அழகிய ஒளி பொருந்திய உமையைத் தன் இடப்பாகம் கொண்ட இறைவன், அன்பு கொண்ட அடியவர்களுக்குத் தன் இனத்தோடு கூடி வாழும் மான் போல உதவ எப்போதும் இருப்பான்.

திருவருளே பெருந்துணை
“போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான்முடி செய்ததுவே நல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே” பாடல் 42
பற்றுக்களை, மன மயக்கங்களை விட்டு விட்டுப் போய்ச் சிவபெருமானைப் புகழ்ந்து பணிந்து வணங்குபவர்கள் அடையப்பெறுவது நாதன் நமச்சிவாயத்தின் அருளான பேரின்பமே. பிரமன் படைப்பான மாய உலகில் மறுபடியும், மறுபடியும் பிறக்க வேண்டியவர் ஆனாலும், மூங்கில் போல் தோளுடைய உமையவளின் நாயகனான சிவபெருமானின் திருவருள் அவர்களுக்குக் கிட்டும்.
அழுதால் பெறலாம் அவனருளை
“அரன்அடி சொல்லி அரற்றி அழுது
பரன்அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்தங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரனடி செய்து நிறைந்து நின்றானே” பாடல் 43
சிவபெருமான் திருவடியை நினைந்து, அவன் பெயரைச் சொல்லி கதறி அழுது, கைகூப்பித் தொழுது, பரம்பொருளை நிதம் பரவித் துதிப்பவர்க்கு, இறை உணர்விலே ஊன்றி அதிலேயே இலயித்துக் கிடப்பவர்க்கு இறைவன் திருவருள் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் உள்ளம் எல்லாம் இறைவன் நிறைந்திருப்பான்.
திருவடிப் புகழ்ச்சி
போற்றி என்பார் அமரர் புனிதன்அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி
போற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே” பாடல் 44
தேவர்கள் சிவபெருமான் திருவடியைப் போற்றி, போற்றி என்று பாடித் துதிப்பார்கள். சிவபெருமான் புனிதத் திருவடியை அசுரர்களும் போற்றி, போற்றி என்று பரவித் துதிப்பார்கள். மண்ணுலக மாந்தர்கள் சிவன் சேவடியைச் சிவ சிவ போற்றி என்று வணங்குவார்கள். நானும் பரமனைப் போற்றிப் புகழ்ந்து என் அன்பு மனத்துள்ளே விளங்க வைத்தேன்.
எதுவும் விதிப்படியே நடக்கும்
“விதிவழி அல்லது இவ்வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே” பாடல் 45
விதித்த விதி முறைப்படி இவ்வுலகம் இயங்குகிறதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அது போல ஆன்மாக்கள் அடைகிற இன்பமும் விதித்தபடியே அமையும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அன்றாடம் இறைவனைப் போற்றித் தொழுது துதி செய்வதன் மூலமே சுடர் ஒளிச் சோதியாகத் திகழ்கின்ற சிவபெருமான் அருளைப் பெறலாம். பேரின்பப் பேறாகிய வீட்டுலகடைய வழி காட்டும் கதிரவன் போல இருப்பான் அவன்.
அறிவான தெய்வம் அகம் புகுந்தது
“அந்திவண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ
முந்திவண்ணா முதல்வா பரனே என்று
புந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே” பாடல் 46
அந்தி வானத்து நிறம் போலச் செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே, சிவனே, சிவப் பரம்பொருளே என்று மனத்தால் எண்ணி, வாக்கால் துதித்து சிந்தித்திருக்கும் மெய்யடியார் தொழ முதன் முதலாக முந்தித் தோன்றிய மூர்த்தியே என்று நானும் தொழுதேத்த அறிவுருவான அச்சிவபெருமானும் என் உள்ளத்தின் உட்புகுந்தான். (எந்த உருவில், நிறத்தில் நினைத்து வழிபட்டாலும் அந்த உருவில், நிறத்தில் அறிவில் விளங்குவான் இறைவன் என்பது பொருள்)
இல்லறம் நல்லறம்
“மனைஉள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனைஉள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின்இன்பம் தானே” பாடல் 47
இல்லற வாழ்வில் இருந்து வருபவர்கள் மாதவம் செய்த தேவர்களைப் போன்றவர்கள். சிவபெருமானை நினைவில் நிறுத்தி அவனோடு நேயம் கொண்டு நிற்பார்கள். இவர்களுக்கு இறைவன் திருவருள் கைகூடும். ஆனால் பனை மரத்தில் வந்தமர்ந்த பருந்து போல இருப்பார் சிலர். பனை மரத்திலே பருந்து இருந்தாலும் அது அப் பனைபடு பொருளால் எந்தப் பயனும் பெறாமல் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பின் பறந்துவிடும். இப்படிப்படவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் அவர்கள் இறைவனை நினைப்பதில்லை. எனவே அவர்களுக்கு இறையருளாகிய இன்பம் கிட்டுவதில்லை.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.