• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 45 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/4/2025

0 Comments

 
Picture
திருமந்திரம் - பாகம் 45
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

சேம நிதி சிவ சிந்தனையே
​

“மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரண்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே”                              பாடல் எண் 302
​
நந்தியெம் பெருமான் அருளாணைப்படி திருமாலும் பணி செய்வான். சிவத்தொண்டு புரிந்தால் பிரமனும் ஏவல் செய்வான். சிவன் கட்டளைக்கேற்ப நடப்பவர் தேவரும் ஆவர். சிவபெருமான் ஆணைப்படி அருள் வழி நடப்பதால் அவன் அருள் துணை என்றும் நமக்குப் பேரின்பப் பெரும் பற்று ஆகும்.



மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 44 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/3/2025

0 Comments

 
Picture
 திருமந்திரம் ( பாகம் 44 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 
​
ஞான நூல் அறிவு
“நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே”                        பாடல் எண் 295
​
அறநூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலை அடைய முடியாதவர்கள், மற்றைய இச்சைகளில் மனம் பற்றுக் கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலம் இழப்பார்கள். கோலெடுத்தால் ஒன்று படாது பறந்தோடும் பறவைகளைப் போல், இந்த உலகப் பற்றாளர்களும், மற்றப் பலவற்றில் மயக்கம் கொண்டு, தடுமாறுகின்றனர்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 43 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

1/1/2025

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே”                          பாடல் எண் 288
​
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.   



மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 42 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

7/6/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 42 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

இறைவனோடு இரண்டறக் கலப்பது இன்பம்
“இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவிக்குத் தொழில்பல எண்ணினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப்பிரான் வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே”                               பாடல் எண் 281  

இவ்வுலக வாழ்வில் ஆன்மாக்கள் இன்பம் எய்தி இருக்கப் பல வழிமுறைகள் வகுத்து வைத்துள்ளான் இறைவன். என்றாலும் வாழ்வு துன்பம் நிறைந்ததாயுள்ளது. இதற்குக் காரணமான வினைத் தொடர்புகளும் பலவாக உள்ளன. எனவே ஆதியான பரம்பொருளோடு அன்பினால் இரண்டறக் கலக்கும் உயிர்களுக்கு, இறைவன் முன்பு தந்த இந்தப் பிறவி முடிவடையும். இனிப் பிறவி இல்லையாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 41 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

26/4/2024

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 41 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அன்பு செய்வார்க்கே இன்ப நிலை
என்அன்(பு) உருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்(பு)உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்(பு) உருகிப் பெருந்தகை நந்தியுந்
தன்அன்(பு) எனக்கே தலைநின்ற வாறே”                         பாடல் எண் 274
​
என்ன பேசி என்ன பயன்? அன்பால் அகம் குழைந்து மனம் உருக ஆண்டவனை வணங்குங்கள். முதலில் அகம் குழைய அவன் அருளைப் பெற முயலுங்கள். அதன்படி நான் அன்பு செலுத்திய பேரறிவாளனாகிய நந்தியெம்பெருமான் தன்னுடைய அருளை, அன்பை எனக்குத் தந்துதவ, நான் அவன் அடியவன் ஆனேன்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 40 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/8/2023

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 40 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வினையால் விளைவது நன்மையும் தீமையும்
“இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே”                             பாடல் எண் 267
​
உலக வாழ்வில் இன்பம், துன்பம் என இரண்டு இருப்பது அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறவியில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள் அறச் சிந்தனை அற்றவர்களே.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 39 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/11/2022

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அறம் செய்யார் அடையும் துயர்
​

“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே”                                  பாடல் எண் 260

​எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான் அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயன் அறியாப் பாதகர் ஆவர். 



மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 38 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/7/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே”                            பாடல் எண் 253

பற்று, பந்தம், பாசம் இவற்றை விட்டொழித்த ஞானிகளுக்கு உணவளிப்பதே மேலான தருமம் என்று நீதி நூல்கள் கூறும். இப்படியிருந்தும் பல நூல் கற்று அறிவு மணம் வீச இருப்பதாகச் சொல்லும் மனிதர்கள், அப்படிப்பட்ட ஞானிகளைப் பார்த்தறிந்து, எங்காவது ஒரு ஆறு குளக்கரைகளில் தியானத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்து வந்து உண்ணச் செய்வதால் பெறக்கூடிய புண்ணியப் பயனை அறியாமல் இருக்கின்றார்களே! அந்தோ பரிதாபம்!.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 37 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/3/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) 

அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே”                   பாடல் எண் 246
​
மூச்சுக் காற்றைப் (பிராணவாயுவை) முறைப்படுத்தி, நிறுத்தி, பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்து, மூலாக்கினியை மேலேற்றிச் சந்திர கலையாகிய மூலாதாரத்தில் வடியும் அமுத பானத்தை உண்ணாமல், அறிவு மயங்கிக் கள்ளைக் குடிக்கும் மந்த மதியினரைத் தண்டிக்க வேண்டியது, நாடாளும் மன்னன் கடமையாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 36 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/2/2022

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே”                       பாடல் 239

அன்றாடம் அரசன் அவனுடைய நாட்டில் அற ஒழுக்கம் கெடாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அவன் அன்றாடம் அவனுடைய நாட்டில் நீதி முறை சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்தறியத் தவறுவானேயானால், அவனுடைய நாடு ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டழியும். அறியாமை எங்கும் மிகும். செல்வமும் செல்வாக்கும் நாளும் குறைய, அரசனும் அழிவான்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 35 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/12/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே”                              பாடல் 232
​
மேலான ஞான மார்க்கமான, அறிவற்று அறியாமையும் விட்டு, ஆச்சாரியன் வழிகாட்டிய உபதேச முறைப்படி, மெஞ்ஞான குருவாகிய பரம்பொருள் திருவடிகளைத் தியானித்துப், புறக் கருமங்களை, சடங்குகளை, செயல்களை ஒதுக்கி விட்டு, உள் ஒளியில் இறைவனைக் காணும் உண்மை மறைப் பொருள் உணர்ந்தோர்க்குத், தூய சமாதி நிலை சித்திக்கும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 34 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

24/11/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 34 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஒடுக்கம் முடிவு ஓம் என்னும் பிரணவம்
“வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண்டு இன்புறு வோர்களே”                                          பாடல் 225
​
வேத முடிவான உபநிடதங்களின் உண்மைப் பொருளறிய ஆசைப்பட்டு, முப்பதமான அகர, உகர, மகரமாக, அறிவின் எல்லையான (போதாந்தமான) “ஓம்” என்னும் பிரணவத்துள் நின்று, நாதாந்த (ஒலி), வேதாந்த (வேதத்தின் முடிவு), போதாந்தத் (ஞானம்) தலைவனாக விளங்குகின்ற சிவப்பரம்பொருளே (சிவமே) எல்லாவற்றிற்கும் முடிவென்று கண்டு இன்புறுவார்கள்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 33 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

28/2/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 33 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
மயங்கித் தவிக்கும் மனித வாழ்வு
“போதிரண்டு ஓதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துஉட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே”                                 பாடல் 217
​
காலை மாலை ஆகிய இரு வேளையும் வேதம் ஓதி வேள்வி செய்தால் குண்டலினி (மூலாதாரம்) மேலோங்கிச் சிவசக்தியாய் நிற்கும். இருவருடைய உயிர்ச் சத்து (சுக்கிலம், சுரோணிதம்) கலப்பால் உடல் இரண்டு சிறகடித்து வானில் பறப்பது போலிருக்கும். ஆணும் பெண்ணுமாகிய பறவைகள் இதனால் மாற்றம் அடைந்து மயக்கம் கொள்ளும்


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 32 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

28/2/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 32 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அருட்செல்வம் – அதைத் தேடுவீர்
“பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே”                                   பாடல் 210

சூரியன் உதித்துக் காலைப் பொழுது விடிந்ததுமே வயிற்றுப் பசியை அடக்க அரிய பொருட் செல்வத்தைத் தேடுவீர்கள். எந்தக் குழியை நிரப்பினாலும் இறைவன் புகழை மறவாது போற்றுங்கள். போற்றினால் மன அழுக்கு அகலும். அழுக்ககன்றவுடன் அப்பிறவிக் குழி தானே மூடிவிடும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 31 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

14/9/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 31 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஆசை யாரை விட்டது
“பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயல் உறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே”                                                      பாடல் 203
​
பொருள் ஆசையால் குடிகளைத் துன்புறுத்தி வரி கொள்ளும், விடாக் கண்டனாகிய கொடுங்கோல் அரசனானாலும், மெய்ஞ்ஞான அறிவை மறைக்கும் ஆணவத்தை வென்று, இருளில் தோன்றிய மின் ஒளியைப் போன்ற இறையருள் துணையால், ஞான மார்க்கத்தில் செல்லும் ஞானிகளானாலும், மருண்ட விழிப் பார்வை உடைய பெண்களிடம் மயங்குவார்கள். இப்படிப் பெண்களிடம் மயங்கும் மனத்தைத் திருத்த முடியாதவராய் இருப்பர்.” அதாவது அரசனானாலும், ஆண்டியானாலும் பெண்ணாசையை விடுவது பெரியகாரியம்தான் எனக் கூறப்பட்டுள்ளது.



மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 30 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

4/6/2019

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 30 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பசிக்குச் சோறு பரமன் பூசை
“அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வல்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக் கொடுஉண்மின் தலைப்பட்ட போதே”                         பாடல் 196
​
அடுத்தவர் மீது பொறாமை கொண்டு, அவதூறாகப் பேசி, அநியாயம் செய்யாதீர்கள். நீதி நூல் கூறிய நல்வழி கெட நடக்காதீர்கள். பெரும் கோபம் கொண்டு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளாதீர்கள். எல்லாச் சிறப்பும் பெருமையும் பெற்று வாழ்வில் சிறந்திருக்கும் போதே, நீங்கள் உண்ணும் போது பசி என்று யாரேனும் உங்களிடம் வந்தால் அப்போதே அவர்களுக்கு உண்ண உணவைக் கொடுத்துவிட்டு நீங்கள் உண்ணுங்கள். இதுவே வாழும் வழி (வாழ்க்கை நெறி)


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 29 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

23/3/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 29 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

மண்ணாலானது மண்ணாய்ப் போனது
​

“மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே”                                 பாடல் 189

​மண்ணாலான உடம்பு இது. இதில் இழுத்தல், விடுதல் என்னும் இரண்டு உயிர் மூச்சின் நடனம் நிகழ்ந்தபடி இருக்கின்றது. இந்த உடலுக்குள்ளே காலம், ஊழ், உழைப்பு, உணர்வு, விழைவு என்னும் ஐந்து அரசர்களும் உள்ளனர். இந்த உடலுக்குள்ளேயே இந்த அரசர்களுக்கு மேலான அரசனான சிவபெருமானும் இருக்கின்றான். இந்த அரசன் தானிருக்கும் உடலை விட்டு நீங்கி விட்டால் மண்ணாலாகிய மனித உடல் மண்ணோடு மண்ணாகக் கலந்து விடும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 28 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

10/3/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 28 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

வாழ்நாளை வீண் நாளாக்காதீர்கள்

“காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே”                                                            பாடல் 182
​
காலைப் பொழுதில் கண் விழித்து எழுந்தவர்கள் நித்தம் நித்தம் மாலைப் பொழுதாகி இரவு வந்தவுடன் உறங்கப் போவதும், இப்படியே ஒவ்வொரு நாள் பொழுதும் உறங்குவதும் விழிப்பதுமாக வாழ்நாள் வீணாகக் கழிகின்றன. அருமை உடையதாகிய வாழ்வை இப்படி வீணாக்குபவர்களை இறைவன் கோபிப்பான். என்றாலும் அவனை மனம் பொருந்த நாளும் நினைந்து பணிபவர்களுக்கு அவன் நல்லருள் புரிவான்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 26 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

10/2/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 26 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

செல்வம் நிலையற்றது
“அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே”                                   பாடல் 168
​
அருளுடைய அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், திரண்ட பெரும் செல்வமும் எல்லாம் பிறர் கொண்டு செல்வதற்கு முன்பாகத் தெளிந்த உள்ளத்தோடு உயிர்ச் செல்வனாகிய இறைவன் அருளை அடையப் பெற்று விட்டால் பிறகு அவன் பெரிய தவத்திலே கூட மயங்கமாட்டான்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 25 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

19/1/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 25 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அழியும் உடம்பிது அறிக

“அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ்அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே”                                                                                        பாடல் 160
​
உடலும் உயிரும் கருப்பையில் உயிர்ப்படைந்து வளர்ந்து உடலெடுத்துப் பிறந்து உயிர் வாழத் தொடங்கியது. காலப்போக்கில் ஒரு நாள் உயிர் உடலை விட்டுப் போய் விட்டது. உடனே அழுது புலம்பி மற்றவர்கள் அந்த உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றார்கள்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 24 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

21/12/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 24 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

முடியுடை மன்னர்க்கும் முடிவு இதுதான்
“நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே”                                                       பாடல் 153
​
நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப்பிற்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக் கடைசிப் பயணம் போகின்றான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம்” நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் பிணம்தான். போகுமிடம் சுடுகாடுதான் என்பதாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 23 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

7/12/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 23 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

போன உயிர் மீளாது
“காலும் இரண்டும் முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறியாதே”                                                                   பாடல் 146
​
இரண்டு கால்களாகிய சுவரின் மேல் முதுகுத் தண்டாகிய உத்தரத்தைச் சாத்தி வலுவான விலா எலும்புகள் முப்பத்திரண்டை பக்கவாட்டில் சாத்தி தசையும் சதையும் சேர்த்துப் பூசிச் செய்தமைத்த கூரை வீடு இந்த உடல். இதில் உள்ளே இருக்கும் உயிர் ஒருநாள் கபாலம் திறக்க வெளியேறி விட்டால் மீண்டும் உள்ளே வர இயலாது. அதற்கு வர வழி தெரியாது”. அதாவது செத்தவர் பிழைக்கமாட்டார் என்பது பொருள். எனவே அழியும் உடல் இது என்பது கூறப்பட்டுள்ளது. ​


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 22 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

27/10/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 22 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

குரு அருளே திருவருள்
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.”                                              பாடல் 139
​
குருவின் திருஉருவைக் கண்டு வணங்குதல், குருவின் திருப்பெயரைத் தியானித்தல், குருவின் அருளுரைகளைக் கேட்பது எல்லாம் அறிவை விசாலமடைய அதாவது மேம்படச் செய்யும். இவற்றை விட ஞானாசிரியரின் திருவுருவை நெஞ்சில் நிறுத்தி அவர் அருளுரைகளை எண்ணி நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கமாகும்.


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 21 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

14/10/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 21 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


பிரியா அன்பு பெருமானருள்
“பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே”                             பாடல் 132

சக்தியும் சிவனும் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனம் காணப்பெற்றவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தில், சிவசிந்தனையிலிருந்து விலகாது பெருநெறியாகத் தவயோகத்தில் தங்கி இருந்தனர். இதனால் இவர்கள் பிறவித் துயர் தொலைந்தது. எனவே மீண்டும் மண்ணில் வந்து பிறக்காத பெரும் புண்ணியப் பயன் அடைந்தனர். இறைவன் ஆனந்த நடனமிடும் அந்தப் பொன்னம்பலத்தை விட்டுப் பிரியாத பெரும் பாக்கியமும் பெற்றார்கள். இவ்வளவுடன் அவர்கள் உலகமெல்லாம் போற்றி விளக்க முடியாத பெருமையும் பெற்றார்கள். (உலகில் மற்றவர்களோடு கலந்து உரையாடாது, தனித்துத் தவம் இருக்கும் அருவமாகவும் இருக்கும் யோகசித்தி பெற்றார்கள்)


மேலும் படிக்க...
0 Comments

திருமந்திரம் - பாகம் 20 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

7/10/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 20 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


சிவலோகம் இருப்பது சீவனுக்குள்ளே
“முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்பரிய சிவம்கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.”                   பாடல்  126
[பேரின்ப வீடு அடைவதற்கு உதவும் வழியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும்


மேலும் படிக்க...
0 Comments
<<Previous

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    December 2024
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025