ருமந்திரம் ( பாகம் 18 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
முதல் தந்திரம்
1. உபதேசம்
“விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே” பாடல் 113
பரம்பொருள் விண்ணுலகை விட்டிறங்கி, மண்ணுலகை வந்தடைந்து, வினைக்கு இடமான மனித உடம்பெடுத்துத் தண்மை பொருந்திய திருவடிகளை ஆன்மாக்களுக்குப் பாதுகாவலாக வைத்து, உள்ளத்துள்ளே தன் திருவருள் புகச்செய்து கல்மனதைக் கரைத்து, அருள் ஒளியால் நெகிழச் செய்து, ஒப்புவமை கூற இயலாத பேரானந்தப் பொருவெள்ளம் பெருக்கெடுத்தோட, கண்கள் அருள் ஒளி கண்டு களிக்கச்செய்து, மன மயக்கங்கள் என்னும் பாசத் தளைகளை எல்லாம் அறுத்தெறிந்தான்.

மன அழுக்கு மறைந்தது
“களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்புஅறுத்தான் அருள் கண் விழிப்பித்துக்
களிம்பு அணுகாத கதிர்ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே” பாடல் 114
எம் இறைவனாகிய நந்தி, மன அழுக்கைத் துடைத்தெறிந்தான். அவனுடைய அருள் நோக்காலே அகக் கண் திறக்க, என் அஞ்ஞான இருளகன்று ஓடியது. அழுக்கு, குற்றம் குறை அண்டாத பேரொளிப் பிழம்பான அவன் திருவருட் பார்வையாலே தூய்மை பெற்ற, மாசற்ற பளிங்கு போன்ற உள்ளத்துள்ளே, தன் சிவந்த திருவடிகளாகிய பவளநிறப் பாதங்கள் பதியச் செய்தான். அவனே எம் தலைவன்.
பதியை நாடப் பாசம் விலகும்
“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதிஅணுகில் பசு பாசம் நிலாவே”. பாடல் 115
பதி (இறைவன்), பசு (ஆன்மா - உயிர்), பாசம் (மலங்கள்) ஆகிய மூன்றில் இறைவனைப் போலவே உயிர்களும் மலங்களும் அனாதியானவை (தோற்றமும் முடிவும் இல்லாதவை, என்றும் உள்ளவை). ஆன்மாக்கள் தலைவனாகிய இறைவனை நெருங்குவதில்லை. காரணம் அவற்றைப் பற்றியுள்ள பாசங்கள். ஆனால் ஆன்மாக்கள் இறைவனை நெருங்கினால் அவற்றைப் பீடித்த பாசம் நிற்காது. விலகிப் போகும்.
அருள் வெள்ளம் ஆண்டவன்
“வேயின் எழுங்கனல் போலஇம் மெய்எனும்
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமதாய் எழும் சூரியன் ஆமே” பாடல் 116
காட்டில் மூங்கில் வெறும் மரமாகத்தான் உள்ளது. ஆனால், அந்த மூங்கில் ஒன்றோடொன்று உரசுகிறபோது அதிலிருந்து நெருப்பு வெளிப்படுகின்றது. மூங்கில் உள்ளிருக்கும் நெருப்புப்போல, இந்த உடம்பாகிய கோயிலுக்குள்ளே இறைவனாகிய நந்தி (ஆன்மாக்களின் தலைவன்) கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளான். தாயைக் காட்டிலும் மிகுந்த பாசம் உடையவன் அவன். ஆணவம், கன்மம், மாயை என்னும் மன அழுக்குகள் மூன்றையும் கழுவி அகற்ற, அருளை வெள்ளமெனப் பொழிந்து, உள்ளத்துள்ளே பேரொளிப் பிழம்பாகத் தோன்றி எழும் ஞான சூரியன் அவனே.
பாசம் அகலப் பரமனருள் வேண்டும்
“சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே”. பாடல் 117
சூரிய ஒளியில் சூரிய காந்தக் கல் முன் வைத்த பஞ்சு பற்றி எரிவதைப் போல், வெறும் சூரிய காந்தக் கல் முன் பஞ்சை வைத்தால் அது எரியாது. சூரிய ஒளிதான் சூரிய காந்தக் கல்லில்ப் பட்டு வெப்பத்தை அதிகமாக்கி பஞ்சைப் பற்றி எரியச் செய்கிறது. இவ்வாறே இறைவன் அருட்பார்வை உயிர்களின் அக இருளைப் போக்கும்.
பரமன் அருள் பாச வினையகற்றும்
“மலங்கள் ஐந்தாம்என மாற்றி அருளித்
தலங்கள் ஐந்தான்அச் சதாசிவம் ஆன
புலங்களைந்தான் அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே”. பாடல் 118
ஆணவம், கன்மம், மாயை, சஞ்சிதம், பிராரத்தம் ஆகிய ஐந்து மலங்களையும் கெட ஐந்து மூர்த்தங்களாக இருக்கின்ற சிவப்பரம்பொருள் அருள் செய்தான். பொதுமன்றில் திருநடனமிடும் இறைவன் தானாக விரும்பி உள்ளத்துள் வந்தமர்ந்து புலன்வழி உயிர்களைப் பற்றும் இச்சைகளைப் போக்கி அருளினான்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.