திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே” பாடல் 232
மேலான ஞான மார்க்கமான, அறிவற்று அறியாமையும் விட்டு, ஆச்சாரியன் வழிகாட்டிய உபதேச முறைப்படி, மெஞ்ஞான குருவாகிய பரம்பொருள் திருவடிகளைத் தியானித்துப், புறக் கருமங்களை, சடங்குகளை, செயல்களை ஒதுக்கி விட்டு, உள் ஒளியில் இறைவனைக் காணும் உண்மை மறைப் பொருள் உணர்ந்தோர்க்குத், தூய சமாதி நிலை சித்திக்கும்.