மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

திருமந்திரம் - பாகம் 35 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

27/12/2020

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 35 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
அறிந்தும் அறியாத ஆனந்த நிலை
“திருநெறி யாகிய சித்து அசித்தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே”                              பாடல் 232
​
மேலான ஞான மார்க்கமான, அறிவற்று அறியாமையும் விட்டு, ஆச்சாரியன் வழிகாட்டிய உபதேச முறைப்படி, மெஞ்ஞான குருவாகிய பரம்பொருள் திருவடிகளைத் தியானித்துப், புறக் கருமங்களை, சடங்குகளை, செயல்களை ஒதுக்கி விட்டு, உள் ஒளியில் இறைவனைக் காணும் உண்மை மறைப் பொருள் உணர்ந்தோர்க்குத், தூய சமாதி நிலை சித்திக்கும்.

Picture
குறைகுடம் கூத்தாடும்
“மறை ஓதுவாரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறைஓர்தல் மற்றுள்ள கோலா கலம்என்று
அறிவோர் மறைதெரிந்(து) அந்தணர் ஆமே”                            பாடல் 233

வேதம் ஓதுபவர்கள் எல்லாம் வேதியர்கள்தாம். ஆனால் வேதம் ஓதும் வேதியர்களின் வேதாந்தம் உண்மையில் உயர்ந்தது எனினும், மற்றுள்ள குறைபாடுடைய பிற நூல்களைக் கற்றல் என்பது, வீண் ஆரவாரம், வெறும் பகட்டு என்பதைக் கற்றுணர்ந்தவர்களே மறையவர். அதாவது வேதியர் ஆவார்.

நல்லவர் வாழும் ஊர் நன்றாக இருக்கும்
“அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே”                                பாடல் 234

வாழும் உயிர்களிடத்தும் அன்பு காட்டும் மேலான அருள் உள்ளம் கொண்ட, உயர்ந்த வேதப் பொருளைத் தியானித்தபடி இருக்கும் மேன்மக்கள் இருக்கின்ற ஊரில், வளமை குறையாது. அந்த ஊரை (நாட்டை) அரசாளும் மன்னனும் உயர்ந்தவனாக இருப்பான். அதிகாலைப் பொழுதிலும், அந்தி நேரத்திலும் அவ்வூரில் மறையவர்கள் வேள்வித் தவம் செய்வார்கள்.

ஞான மார்க்கம் நமசிவாயம்
“வேதாந்த ஞானம் விளங்கும் விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே”                             பாடல் 235

வேதம் கற்று வைராக்கிய சித்தியுடன் ஞானம் அடைய வாய்ப்பில்லாதவர்கள், நாத முடிவான நாதனை அடைய உடலில் உள்ள உயிராற்றலை இயக்கிப் பிரணவ தேகம் பெற்று முத்தி அடைவர். இது தாந்திரிகம் எனப்படும். ஆனால் அறிவு வடிவான இறைவனை ஞான மார்க்கத்தில் சென்றடைய முயல்வதே, முத்தியும், சித்தியும் தரவல்லதாகும்.

மனம் மொழி மெய் அடங்கவேணும்
“ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே”                                பாடல் 236

மனம், மொழி, மெய் என்ற மூன்றும் தன் வசமாகி அடங்கிய காலத்தும், நலமுடன் இருந்து, நல்லுரை பேசினாலும், எல்லா உலகங்களையும் உயிர்களையும் வென்று விளங்கும் சிவப்பரம்பொருளையே சிந்தை செய்பவர்கள், பலரும் தேடிச் சென்று பணியும் திருவருட் செல்வத்தைப் பெற்ற மன, மொழி, மெய் அடங்கக் கற்ற மேலோர் ஆவர்.

“நான்” எனும் அகந்தை தானொழிய வேண்டும்
தானே விடும்பற்(று) இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர் ஆகுதிஅவி உண்ணவே”                                பாடல் 237

தானாகவே விடுபட்டு விலகும் பற்றுக்கள் இரண்டு. ஒன்று அகப் பற்று, மற்றொன்று புறப் பற்று. இந்த இரண்டும் இறை உணர்வை மனதில் கொள்ளத் தாமாகவே விலகிப் போகும். நான் என்னும் ஆணவம் விடுபட மற்ற அகங்காரங்கள் எல்லாம் கெட்டழியும். பிறகு உள்ளம் வேறொன்றையும் அடைய விரும்பாது. தாமரைப் பூவிலிருக்கும் நான்முகனாகிய பிரமன், புண்ணிய மூர்த்தியாய் விளங்குவது ஓமத்தீயிலே இடப்படும் அவியை உண்ணுவதற்காகவே.

ஆட்சி முறை
“கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே”                                பாடல் 238
​
கல்வி அறிவில்லாத அரசன், உயிர்களைக் கவரும் எமன் இருவரும் ஒன்றே. இருவருக்கிடையே வேறுபாடில்லை என்பது மட்டுமல்ல, முட்டாள் அரசனைவிட எமன் நல்லவன். அறிவில்லாத அரசன் அறநெறியைக் கடைப்பிடிக்க மாட்டான். நியாயம், அநியாயம் உணர மாட்டான். தனக்குப் பிடிக்காதவர்களைக் “கொல்” என்று கட்டளை இட்டாலும் இடுவான். ஆனால் எமன் அப்படியல்ல. நல்லவர்களுக்குத் துன்பம் தரமாட்டான்.

இந்தப் பக்கம் free counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2022