திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அறம் செய்யார் அடையும் துயர்
“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே” பாடல் எண் 260
எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான் அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயன் அறியாப் பாதகர் ஆவர்.