மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்

திருமந்திரம் - பாகம் 39 "சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி"

16/11/2022

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 39 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

அறம் செய்யார் அடையும் துயர்
​

“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே”                                  பாடல் எண் 260

​எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான் அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தின் பயன் அறியாப் பாதகர் ஆவர். 


Picture
​அறம் பல செய்யவே அமைந்தது வாழ்வு
“ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே”                             பாடல் எண் 261

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகின்றன. இப்படிப் பல யுகங்கள் போய்விட்டன. கட்டிய மனக் கோட்டைகள், ஆசைக் கனவுகள் எல்லாம் ஒவ்வொருநாளும் ஒவுவொன்றாகக் குறைந்து குன்றி விட்டன. சாறு பிழிந்த சக்கை போலத் தங்கள் பெருந் துன்பத்திற்கு இடமான உடல் மெலிந்து, தளர்ந்து ஒருநாள் அழிந்தும் போகும். இதை எல்லாம் பார்த்த பிறகும் மக்கள் அறத்தின் பயன் அறியாது இருக்கிறார்களே! உயிர் உள்ளபோதே நல்லறச் செயல்களை மேற்கொள்ள இவர்கள் ஏன் நினைப்பதில்லை?

அறம் அறியார் இறைவன்  பதம் அறியார்
“அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே”                           பாடல் எண் 262

நல்லறச் செயல்களைச் செய்யத் தெரியாதவர்கள், அண்ணல் சிவப்பரம் பொருளின் திருவடி நினைத்துப் போற்றும் பக்தி வழியை அறிய மாட்டார்கள். இவர்கள் சிவலோகத்தின் நிழலைக்கூடத் தரிசிக்க முடியாதவராவார்கள். மற்றவர்கள் கூறும் பொய்யுரைகளைக் கேட்டுப் பாவத்தைச் செய்யத் தெரிந்த இவர்கள் பாவப் படுகுழியிலேயே வீழ்ந்து கிடப்பர்.

ஈயாதவர்க்கே வரும் இருமலும் சோகையும்
“இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாக(ம்) உரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே”.                         பாடல் எண் 263

இருமல், இரத்தம் குறைவதால் வருகின்ற நோயான இரத்தசோகை, சளி சம்பந்தமான காசநோய், கணைச் சூடு, உஷ்ணத்தால் உண்டாகும் உபாதைகள் எல்லாம் தருமம் செய்யாதவர்களைத் தேடி வரும் நோய்களாகும். உயிரை அச்சுறுத்தும் இடி, மின்னல் தாக்குதல், கழுத்துக் கட்டி, பிளவை ஆகிய நோய்கள் தருமம் செய்து வாழ்பவர்களைச் சேரமாட்டா.

நரகம் தவிர்க்க நல்லது செய்யுங்கள்
“பரவப் படுவார் பரமனை எத்தார்
இரவலர்க்(கு) ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே”                                                     பாடல் எண் 264

பல்லோராலும் போற்றித் தொழப்படுகின்ற பரம்பொருளை வணங்காதவர்கள், இல்லை என்று வருபவர்களுக்குத் தங்களிடம் மிஞ்சியுள்ளதைக் கூடக் கொடுத்துதவ மாட்டார்கள். சிறு குடத்தில் நீரை மொண்டு ஊற்றிச் செடிகளைக்கூட வளர்க்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் முடிவில் நரகத்தில் நின்று துயர்ப்பட வேண்டி வரும். எனவே நல்ல மனம் கொண்டவர்களே! நினைத்துப் பாருங்கள். நல்லது செய்யுங்கள்.

பரமன் அருள் ஓங்கப் பாவ வினை நீங்கும்
“வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஒட்டிட்(டு)
ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே”                           பாடல் எண் 265

அறவழியில் செல்பவர்கள் இல்லாமல், வானுலகப் பேறு நீங்கத் தீயவழிகளிலேயே செல்பவர்கள், இருண்ட நரகத்தில் நடப்பவர் ஆவார்கள். தீவினையாகிய குற்றங்களைச் செய்யத் தூண்டும் காம, குரோத நினைவுகளை முழுதுமாக நீங்கச் செய்துவிட்டு, இந்த வினைத் தொடர்புகளை விட்டு விலகி நடப்பவர்கள் பாவ வினை கடந்து பரம் பொருள் வழி நிற்பவர் ஆவார்கள்.

ஆருயிருக்கெல்லாம் அன்பு செய்க
“கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம(து) ஆள்வர்
மலிந்தவர் மாலுந் துணையுமொன்(று) இன்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே”                       பாடல் எண் 266

எல்லா உயிர்களிலும் ஈசன் இருக்கிறான் என்ற உண்மை உணர்ந்து, எல்லா உயிர்களிடமும் அன்பும், இரக்கமும் கொண்டு மகிழ்ந்திருப்பவர், பரம் பொருளின் திருவடி நிழலைக் காணும் பேறு பெறுவர். இறையருள் அவர்களுக்குக் கிட்டும். உலக இன்பங்களைத் துறந்து விடத் துணிந்து துறவு மேற்கொண்டு தவம் இருப்பவர் வீட்டின்பம் அடையப் பெறுவர். இந்த இரண்டிலும் சேராது, உலக இன்பங்களில் உழன்று, தங்கள் நிலையில் தாழ்ந்து வாழ்பவர்கள், துணை யாருமின்றி, அநாதையாக, வருத்தும் எமனுடைய கோபத்துக்குள்ளாகி இறப்பர்.
​

இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020

    அனைத்துப் பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023