திருமந்திரம் ( பாகம் 20 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சிவலோகம் இருப்பது சீவனுக்குள்ளே
“முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்பரிய சிவம்கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.” பாடல் 126
[பேரின்ப வீடு அடைவதற்கு உதவும் வழியாகிய முப்பத்தாறு தத்துவங்களையும்

1. ஆன்மதத்துவம் ( பிரகிருதி மாயை ) - 24. அவையாவன
1.ஐம்பூதங்கள் - 5 ( 1.நிலம் , 2.நீர், 3.தீ, 4.காற்று, 5.ஆகாயம்.),
2.கன்மேந்திரியங்கள் - 5 (1.வாய்-பேச்சு, 2.கை, 3.கால், 4.எருவாய், 5.கருவாய்.),
3.ஞானேந்திரியங்கள் - 5 (1.மெய், 2.வாய்-நாக்கு, 3.கண், 4.மூக்கு, 5.செவி.),
4.தன்மாத்திரைகள் - 5 (1.சுவை, 2.ஒளி, 3.ஊறு, 4.ஓசை, 5.நாற்றம்.),
5.அந்தக்கரணங்கள் - 4 (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.).
2. வித்தியாதத்துவம் ( அசுத்த மாயா தத்துவங்கள் ) - 7. அவையாவன
1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.அராகம், 6.புருடன், 7.மாயை-ஒருபகுதி.
3. சிவதத்துவம் ( சுத்த மாயா தத்துவங்கள் ) - 5. அவையாவன
1.நாதம்-சிவம், 2.விந்து-சக்தி, 3.சதாக்கியம்-சதாசிவம், 4.ஈஸ்வரம், 5.சுத்தவித்தை.]
ஏணிப் படிகளாகக் கொண்டு மேல் ஏறி (மூலாதாரத்தை அடந்து), அங்கு ஒப்புவமை இல்லாத இறைவனின் ஆனந்தத் தாண்டவம் தன் உள்ளத்தில் ஒளி வெள்ளமாய்ப் பரவி நிற்க, அந்த ஒளி வெள்ளத்தில் சொல்லுவதற்கு இயலாத பெருமை உடைய சிவப் பரம்பொருளைக் கண்டு, அதுவே மெய்ப்பொருள் எனத் தெரிந்து (தெளிந்து) அந்தத் தெளிந்த ஞான நிலையே பிறவிப் பயன் என்று இருந்தவர்கள் ஞானிகள்.
சீவன் பெருமை சும்மா இருப்பது
“இருந்தார் சிவம்ஆகி எங்கும் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்துஅங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே” பாடல் 127
சித்தத்துள்ளே சிவனைக் காண்பதே பிறவிப் பயன் என்று இருந்த சித்தர் பெருமக்கள், சிவசொரூபமாகி காணும் இடமெல்லாம் காணப்படுபவர்கள் தாங்களே ஆகி, எங்கும் நிறைந்திருந்தனர். நடப்பவை எல்லாம் சிவன் செயல் என்று கண்டுணர்ந்திருந்தனர். நிகழ்காலம், எதிர்காலம், இறந்தகாலம் என்னும் முக்காலங்களின் இயல்பையும் அறிந்து, நான், எனது என்னும் செருக்கொழிந்து செயலற்றிருந்தனர்.
சும்மா இருப்பது சுகானுபவம்
“சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டார் அச்சுருதிக்கண் தூக்கமே” பாடல் 128
செயலற்றவர்கள் இருக்குமிடம் தூய பரவெளியாகிய சிவ வெளியிலே. அவர்கள் செயலற்றுச் சிந்தையை அடக்கிச் சும்மா கிடப்பதும் அந்தத் தூயதான பரவெளியிலே ஆகும். இவர்கள் உணர்வுகள் ஒன்றி இருப்பதும் வேத முடிவான சிவபெருமான் திருவடிகளிலேயே. இப்படிச் செயலற்று நிற்கும் சித்தர்கள் வேதம் ஓதும் விமலனை எண்ணியே யோக நித்திரையும், இன்பத் துயிலும் கொண்டனர்.
சுகானுபவம் சிவயோகம்
“தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலைசொல்வது எவ்வாறே” பாடல் 129
கண்மூடிச் சிவ சிந்தனையில் ஒன்றியிருக்கும் சித்தர்கள் சிவலோகம் கண்டனர். இவர்கள் சிவயோகமும் கண்டனர். இவர்கள் சிவனோடு இரண்டறக் கலந்த இன்ப நிலையும் பெற்றனர். இப்படித் தியான சமாதியில் திளைத்தவர்கள் பெருமையை, ஆற்றலை, உயர்ந்த நிலையை எப்படிச் சொல்லில் விளக்குவது?
சிவயோகம் சித்திகள் அருளும்
“எவ்வாறு காண்பான் அறிவு தனக்குஎல்லை
அவ்வாறு அருள்செய்வன் ஆதி பரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே” பாடல் 130
தவயோகத் தியானத்தில் இருப்பவன் எந்த அளவுக்கு மெய்யறிவும் இறை உணர்வும் உடையவனாக இருக்கிறானோ அந்த அளவிற்கு ஆதியாகிய பரம்பொருளும் அவனுக்கு அருள் செய்வான். ஒப்புவமை கூற இயலாத பெருமை உடைய நடன சபையில், உமையவள் காணத் திருக்கூத்தாடும், சிவந்த அந்திவானில் தெரியும் மாணிக்கச் செம்பருத்தி போன்ற, அழகிய சிவந்த அருள் சுடரான சிவபெருமான் அவரவர் பக்திக்கும் பக்குவத்திற்கும் ஏற்ப அருள் பாலிப்பான்.
சித்திகள் என்பது சக்தியின் பரிசு
“மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடும் திருக்கூத்தைப்
பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே” பாடல் 131
மாணிக்கத்தின் சிவந்த ஒளி வீசும் திருமேனி உடைய சிவனுக்குள், மரகதத்தின் பச்சை நிற திருமேனியுடைய சக்தி ஒன்றியிருந்து, சதாசிவம் சக்தியும் சிவமுமாகக் காட்சி தருகிறது. இப்படிப்பட்ட சக்தியும் சிவனும் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனம் காணப்பெற்று, வணங்கித் தொழுதவர்கள், எத்துணையோ பேறு பெற்றவர்கள். புண்ணியம் செய்தவர்கள்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.