மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 21 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

14/10/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 21 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


பிரியா அன்பு பெருமானருள்
“பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே”                             பாடல் 132

சக்தியும் சிவனும் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனம் காணப்பெற்றவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தில், சிவசிந்தனையிலிருந்து விலகாது பெருநெறியாகத் தவயோகத்தில் தங்கி இருந்தனர். இதனால் இவர்கள் பிறவித் துயர் தொலைந்தது. எனவே மீண்டும் மண்ணில் வந்து பிறக்காத பெரும் புண்ணியப் பயன் அடைந்தனர். இறைவன் ஆனந்த நடனமிடும் அந்தப் பொன்னம்பலத்தை விட்டுப் பிரியாத பெரும் பாக்கியமும் பெற்றார்கள். இவ்வளவுடன் அவர்கள் உலகமெல்லாம் போற்றி விளக்க முடியாத பெருமையும் பெற்றார்கள். (உலகில் மற்றவர்களோடு கலந்து உரையாடாது, தனித்துத் தவம் இருக்கும் அருவமாகவும் இருக்கும் யோகசித்தி பெற்றார்கள்)

Picture
சபாபதிப் பெருமை

“பெருமை சிறுமை அறிந்துஎம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறிவார் யார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டிருந் தார்புரை அற்றே”                              பாடல் 133

இறைவன் திருவருள் துணையால் ஆன்மாக்கள் பெருமை பெறுகின்றன. திருவருள் பெற இயலாத உயிர்கள் சிறுமைப்பட்டுத் துன்பம் அடைகின்றன. ஆனால், இறைவன் இவை இரண்டும் கடந்தவன். அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்தின் பெருமை, சிறுமை தெரிந்தவன். இறைவனைப் போலப் பொருள்களின் பெருமை, சிறுமை, எளிமை அறிந்தவர் யார் இருக்கிறார்கள்? இப்படிப் பெருமை, சிறுமை தெரிந்தவர்கள் ஆமையைப் போல் (தலை, கால்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல்) தங்கள் ஐம்பொறிப் புலன்களை அடக்கி ஆள்பவர்கள் புரை அற்றே குறை இல்லாத இம்மை, மறுமை இரண்டும் உணர்ந்தவராயிருப்பர்.

பெருமை பெரும் சோதியில் கலத்தல்

“புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே”                                   பாடல் 134

புரை ஊற்றாத பாலில் கலந்துள்ள நெய் வெளிப்படையாகத் தெரியாதது போல அலைபாயாத தெளிந்த சிந்தையுடையவர்கள், ஞானாசிரியன் அருளிய மூல மந்திரத்தைச் செபித்தபடி, பேச்சற்று, மவுன சமாதியில் இருப்பவர்கள், இவ்வுலகில் மாய உடம்பொழித்து, எல்லையற்ற இறையருட் சோதியில் கலந்து சுத்த சிவமாகி நிலைத்திருப்பர்.

சோதியுள் சுடராய்

“சத்தமுதல் ஐந்தும் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித்து ஆண்டுகொள் அப்பிலே”                           பாடல் 135

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன் இச்சைகளும், ஆசைகளும் அவை தோன்றிய விதமே, தானே அடங்கி அவியப் பெற்றால், சித்தமாகிய ஆன்மாவுக்குச் சித்தாகிய பரம்பொருளோடு இரண்டறக் கலப்பதன்றி வேறு போக்கிடம் இல்லை. பரவெளியில், பரமனோடு, ஆன்ம ஒளி அடங்கும் இன்ப நிலை அது. எனவே, நான் கூறும் உபதேசம் இதையே பொருளாகக் கொண்டு, பின்பற்றி அருள் நீரால் மனத்தூய்மை பெறுவாயாக.

சுடர் சீவன் – சோதி சிவன்

“அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடியது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே”                              பாடல் 136

கடல் நீரில் கலந்திருக்கிற உப்பு, உப்பளங்களில், சூரிய வெப்பத்தால், நீர் ஆவியாகிக் காய்ந்தவுடன், உப்பாகப் படிந்து நிற்கும். இப்படிப் படிந்த உப்பை எடுத்து, அதில் ஓர் உருவம் செய்து, தண்ணீரில் விட்டால், அந்த உப்பு உருவம் தண்ணீரில் கரைந்து, உப்பு வேறு, நீர் வேறாகத் தோன்றாதபடி, தண்ணீரோடு இரண்டறக் கலந்துவிடும். இதைப்போலவே சீவன் சிவத்தோடு கலந்து, சிவனுள் அடங்கும். உப்பும் தண்ணீரும் போலச் சீவனும் சிவனும் இரண்டறக் கலக்கும்.

உயிருக்கு உயிர் திருவடித் துணை

“அடங்கு பேரண்டத்து அணுஅண்டம் சென்றுஅங்கு
இடம்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடம்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடிதானே”                                   பாடல் 137

எல்லா உயிர்களும், உலகங்களும் ஒன்றி அடங்கும் பேரண்டப் பெருவெளியில், சிவப் பரம்பொருளின் அணு அண்டம் இடம் கொண்டுள்ளது. இதுவே நிலைமை. இதில் மாற்றமில்லை. எனவே உயிர்களின் உடல்களில் எல்லாம் அடங்கியிருக்கும் உயிர்கள், தாங்கள் முடிவாகச் சென்று சேரவேண்டிய இடம் எது என்று எண்ணிப் பார்த்தால், அது இறைவன் திருவடியே என்பது தெரியவரும்.

திருவடியே சிவம்

“திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவ லோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே”.                       பாடல் 138
​
ஞானாசிரியனின் இரு பாதக் கமலங்களே சிவம் என்பதை அறிந்துணர்ந்தால், அந்தத் திருவடிகளே சிவலோகம் ஆகும். ஆழமாக அந்தத் திருவடிகளைச் சிந்தித்தால் ஆன்மா செல்ல வேண்டிய பாதைக்கு அது வழி காட்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அந்தத் திருவடிகளே தஞ்சம் அடையத்தக்க புகலிடம் ஆகும் என்பதை உள்ளத்
தெளிவுடைய ஞானிகள் உணர்வார்கள்.
​

இந்தப் பக்கம் web counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023