திருமந்திரம் ( பாகம் 22 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
குரு அருளே திருவருள்
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.” பாடல் 139
குருவின் திருஉருவைக் கண்டு வணங்குதல், குருவின் திருப்பெயரைத் தியானித்தல், குருவின் அருளுரைகளைக் கேட்பது எல்லாம் அறிவை விசாலமடைய அதாவது மேம்படச் செய்யும். இவற்றை விட ஞானாசிரியரின் திருவுருவை நெஞ்சில் நிறுத்தி அவர் அருளுரைகளை எண்ணி நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கமாகும்.

தனித்திரு துதித்திரு
“தானே புலன்ஐந்தும் தனவச மாயிடும்
தானே புலன்ஐந்தும் தனவசம் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே” பாடல் 140
தாமாகவே மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நமக்கு அடங்கும். நம் சொற்படி இயங்கும். இந்த ஐம்புலன்களும் தாம் விரும்பியபடி நம்மை இயக்கும் தன்மையை இழக்கும். ஐம்புலன்களும் இதுவரை அவை விரும்பும் வண்ணம் நம்மை ஆட்டுவித்த நிலைமை மாறும். இவையெல்லாம் ஐம்புலன் இச்சையில் இருந்து விடுபட்டுத் தனியே சென்று (ஆசாபாசம் அகற்றி) பரம் பொருளை அடைந்து அவன் திருவடி பற்றியவர்களுக்கு சித்திக்கும்.
நெஞ்சால் தொழுது நினைவால் வழிபடுக
“சந்திப்பது நந்தி தன்திருத் தாள்இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே” பாடல் 141
கண்கள் கண்டு களிக்க வேண்டியவை இறைவன் திருவடிகளே. மனம் பார்த்து மகிழ வேண்டியது அந்தச் சிவப் பரம்பொருளின் செம்பொன் திருமேனியையே. வாழ்த்தி வணங்கி வழிபடத் தக்கது நந்திப் பெருமானின் திருப் பெயரே. உள்ளத்தில் கொண்டொழுகத் தக்கது நந்தி எம்பெருமானின் அருளுரைகளையே. நெஞ்சிலும், நினைவிலும் நிலைக்க வேண்டியது பரம்பொருள் சிந்தனை மட்டுமே.
ஞானம் வேதம் நாதன் வழிபாடு
“போதம் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினர்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போய்அடைந்தார் விண்ணே” பாடல் 142
மெய்ஞ்ஞான அறிவை உபதேசித்த எங்கள் புண்ணியரான நந்தியெம் பெருமானை, அவரது உபதேசங்களை அறிவால் உணர்ந்து தியானித்துப் புண்ணியவான்களானவர்கள், சிவபெருமானின் திருநடனம் கண்டு களித்துப் பெற்ற பேரின்பப் பெருக்கால், கண்கள் பெற்ற பயன் பெற்று, வேதநூல்கள் எல்லாம் வணங்கிப் பணிந்து பாடும் பரம்பொருளின் விண்ணுலக வாழ்வு பெற்றவராயினர்.
யாக்கை நிலையாமை
“மண்ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டும்மண் ஆனாற்போல்
எண்இன்றி மாந்தர் இருக்கின்ற வாறே”. பாடல் 143
மண் ஒன்றுதான் அதனால் ஆன பாத்திரங்கள் இரண்டு. ஒரு பாத்திரம் தீயினால் சுடப்பட்டதால் உறுதி உடையதாக இருந்தது. இன்னொரு பாத்திரம் பச்சை மண் சுடப்படாமல் இருந்தது. அது மழை பெய்து தண்ணீரில் நனைந்தவுடன் கரைந்து மீண்டும் களி மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. இதேபோலத்தான் உலகிலுள்ள மக்கள் பலரும் உள்ளனர். அதாவது இறைஅருளை உயிர்கள் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
கூடவருவது பாவ புண்ணியமே
“பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.” பாடல் 144
நல்வினை, தீவினைகளை நுகர்வதற்கென்றே பெற்ற உடல் விழுந்துவிட்டால் (இறந்துவிட்டால்) உயிருடன் இருக்கும் போது அவ்வுடலால் பயனடைந்த மனைவி மக்கள் அந்த உயிர் போன வழியே போகமாட்டார்கள். (இறக்கமாட்டார்கள்) ஆனால் அந்த உயிர் வாழும்போது செய்த நல்லறம், மேற்கொண்ட ஒழுக்கம், புண்ணியச் செயல்கள் அந்த உயிருக்குத் துணையாகச் செல்லும். மற்ற எதுவும் கூட வராது..
உயிர் நீங்கிய பின் யாரும் கூட வாரார்
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரைஅம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு அழிந்தார்களே.” பாடல் 145
ஊரில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுது புலம்பி இறந்தவரின் பெயரைக்கூடச் சொல்லாமல் பிணம் என்று சொல்லி சுடுகாட்டில் கொண்டுபோய் வைத்து எரித்துவிட்டு நீரில் முழுகிவிட்டு, இறந்தவரைப்பற்றிய நினைவையும் அடியோடு மறந்துவிடுகின்றனரே. என்ன மனிதர்கள் ! என்ன வாழ்க்கை !. இப்பாடலில் இறந்தவரின் நினைப்பை மறந்துவிடுகின்றனரே என்னும் பொருளில் மறைந்திருக்கும் இவனுக்கு இன்று, நாளை நமக்கு என்பதை மறந்துவிடுகின்றனர் என்ற கருத்தும் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.