மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 24 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

21/12/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 24 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

முடியுடை மன்னர்க்கும் முடிவு இதுதான்
“நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே”                                                       பாடல் 153
​
நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன். நமது ஊரில் மிகுந்த சிறப்பிற்குரிய பெருமகனாகத் திகழ்ந்தவன். இன்று பாடையில் ஏறிக் கடைசிப் பயணம் போகின்றான். நாட்டு மக்கள் பின் தொடர்ந்து வர, முன்னே பறை ஒலிக்கப் போகிறது இறுதி ஊர்வலம்” நாட்டுக்குத் தலைவனாக, ஊருக்குள் உயர்ந்தவனாக இருந்தவன் இன்று பெறுகின்ற மரியாதை இதுதான். உடலில் உயிர் இருக்கும் வரைதான் தலைமையும், தகுதியும், பெருமையும். உயிர் போய்விட்டால் பிணம்தான். போகுமிடம் சுடுகாடுதான் என்பதாகும்.

Picture
கூற்றம் வந்தது, கோலம் கலைந்தது

“முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே”                              பாடல் 154

தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் செம்மையாக அமைந்த பாதுகாப்பு மதிலுடைய கோவிலுக்குள் வாழ்பவர், சிறப்பாகச் செய்யப்பட்ட அந்தக் கோயில் பழுதடைந்து கெட்ட பிறகு அந்தக் கோவிலுள் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓடிவிட்டார்கள். உயிர் போய் உடல் அழியத் தத்துவங்கள் தாமே நீங்கும் என்பதாகும்.

மாடு மனை உறவு காடு வரைதான்

“மதுஊர் குழலியும் மாடும் மனையும்
இதுஊர் ஒழிய இதணமது ஏறிப்
பொதுஊர் புறம்சுடு காடது நோக்கி
மதுஊர் வாங்கியே வைத்தகன் றார்களே.”                             பாடல் 155

தேன் ஊறும் மலர்கள் சூடிய கூந்தலுடைய மனைவியும், மக்களும் செல்வமும் வீடும் என்று இருந்த இந்த ஊராகிய உடலில் இருந்து உயிர் போய்விட, இறந்த உடலை பாடையில் ஏற்றி ஊருக்கு வெளியே பொதுவாக உள்ள சுடுகாட்டை நோக்கிச் சென்று துன்ப மயக்கத்துடனே, பாடையிலிருந்து உடலை எடுத்துச் சிதையில் வைத்துத் தீ மூட்டிச் சென்றுவிட்டார்கள்.

தேடிய செல்வம் கூட வராது

““வைச்சுஅகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாதுஎன நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சகலா நின்று இளைக்கின்ற வாறே”                                பாடல் 156

இறந்த பின் உடலைச் சுடுகாட்டில் சிதையில் வைத்துத் தீ மூட்டிவிட்டு இறந்தவர் நினைப்பை மறந்து அவரவர் பணியைப் பார்க்க ஆரம்பித்து விடும் உலக இயல்பைக் கண்டும் மனிதர்கள் உடலாகிய அச்சை விட்டு உயிர் பிரியாது என்ற நினைப்பில் ஓடி, ஓடி அவர்கள் தேடும் பொருட்கள் மேல் ஆசை வைத்துத் தேடுவதைத் தொடர்ந்து, மற்றவர்களும் ஆசைப் பட்டு அலைந்து, அவர்கள் தங்கள் பெருமை இழந்து சிறுமை உறுகிறார்களே!”. இதை எண்ணிப் பார்க்க வேண்டாமா என்னும் ஏளனம், இரக்கக் குறிப்புடன் கூறப்பட்டுள்ளது.

பல நாள் உறவு ஒரு நாளில் போகும்

“ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதிஇல் லாரே”                                  பாடல் 157

வாழும்போது போற்றிக் கொண்டாடி உறவாட வந்த உறவினரும், மனைவி, மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீராடும் இடம்வரை வருவர். பின்பு உடலைச் சுடலையில் வைத்துத் தீமூட்டித் தலை மூழ்குவர். இந்த அன்பு இல்லாத மக்கள் பல காலம் பழகிய உறவுக்கு சில நொடிகளில் முமுக்குப் போட்டுவிடுகின்றார்களே! நீதியில்லாதவர்கள். நியாயமா இது!.

இறந்த உடலுக்கு இதுதான் மரியாதை

“வளத்துஇடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந்தால் இறைப் போதும் வையாரே”                                                பாடல் 158

இடையின் முன்பாகக் கருப்பையாகிய குளத்திலிருந்து உயிரணுக்களான மண் கொண்டு உயிர்கள் உற்பத்தியாகின்றன. இது உயிர்த் தோற்றம். இன்னொரு பக்கம் குளத்தில் மண் எடுத்துக் குயவன் சட்டி, பானை செய்கிறான். அவன் செய்த மண் குடம் உடைந்து விட்டால் அதை ஓடென்று அதை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் உயிர்த் தலைவன் உற்பத்தி செய்த உடல் உயிர் போய்ப் பிணமாகி விட்டால் நொடிப் பொழுது கூட அதை வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள்.

உயிர் போனது எங்கோ

“ஐந்து தலைப்பறி ஆறு சடைஉள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே”                                  பாடல் 159
​
மனித உடலில் ஐம்புலன்கள், ஆறு ஆதார நிலைகள் உள்ளன. முப்பது எலும்பு மூட்டுக்களும், அதன் மேல் சார்த்தப்பட்டுள்ள பதினெட்டு எலும்புகளும், ஒன்பது இந்திரியங்களும், வரிசையாக அமைந்த பதினைந்து எலும்புகளும் சேர்ந்தமைத்த உடல் உயிர் போனபின் பிணமாக நெருப்பில் வெந்து கிடந்தது. ஆனால் அதற்குள் இருந்த உயிர் போனதெங்கே? தெரியவில்லையே!
​
இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023