மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 26 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

10/2/2019

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 26 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

செல்வம் நிலையற்றது
“அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே”                                   பாடல் 168
​
அருளுடைய அரச பதவியும், யானைப் படையும், தேர்ப்படையும், திரண்ட பெரும் செல்வமும் எல்லாம் பிறர் கொண்டு செல்வதற்கு முன்பாகத் தெளிந்த உள்ளத்தோடு உயிர்ச் செல்வனாகிய இறைவன் அருளை அடையப் பெற்று விட்டால் பிறகு அவன் பெரிய தவத்திலே கூட மயங்கமாட்டான்.

Picture
செல்வ மழை பொழியும் சிவன் அருள்

“இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயல்கொண்டல் போலப் பெரும்செல்வ மாமே”                       பாடல் 169

நன்கு ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவு ஒளி இழந்து கரிக்கட்டை ஆனதைப் போல, தேயும் செல்வமும் குறைவதால் வரும் துன்பத்தைச் சொல்லவும் வேண்டாம். எனவே பொருட் செல்வத்தின் மேல் வைத்த பற்று நீங்கத் தேவாதி தேவர்கள் தலைவன் திருவருள் துணையை நாடுங்கள். உங்களுக்கு மேகம் பொழிவதுபோல் அவன் அருளாகிய பெருஞ் செல்வம் மழையாய்ப் பொழியும்.

உயிர் உடமை உன்னுடையதல்ல

“தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டு கொளீரே”                                பாடல் 170

தன் நிழல் தனக்கு உதவாது. நிழல் நம் கூடவே வரும் என்றாலும் நின்று அதில் நாம் இளைப்பாற முடியாது. இந்த உண்மை தெரிந்திருந்தும் இது என்னுடைய செல்வம், நான் தேடியது, எனக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைப்பவர் ஏமாளிகள். உன் உயிர் நீ பிறக்கும் போது உன் உடலோடு சேர்ந்து பிறந்தது என்றாலும், அது ஒரு நாள் உன் உடலை விட்டுப் போய்விடும். நீ தேடிய செல்வமும் அப்படித்தான். எனவே அகக்கண் கொண்டு அந்த உள் ஒளியை உணர்ந்து உய்வீர்களாக.

காட்டிய செல்வம் கை விட்டுப் போகும்

“ஈட்டிய தேன்பூ மணம்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்துஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரத்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே”                                பாடல் 171

ஒரு பூவில் தேன் நிறைந்திருப்பதை அந்தப் பூவின் வாசத்தைக் கொண்டே அறிந்து வந்த வண்டு அந்தத் தேனைத் திரட்டிக் கொண்டு போய் ஒரு மரக் கொம்பில் கூடுகட்டிப் பாதுகாக்கும். இப்படித் தேனீக்கள் சேர்த்த தேனடையை மனிதர்கள் தீப்பந்தம் கொளுத்தித் தேனீக்களை விரட்டி ஓட்டி விட்டுத் தேனைத் தாங்கள் எடுத்துக் கொள்வர். இதைப் போலவே ஒருவர் தேடித் திரட்டிய செல்வத்தையும் வலியவர் ஒருநாள் செல்வம் உடையவர் வருந்தும் பொருட்டு அவர் செல்வத்தை எடுத்துக் கொள்வர்.  மற்றவர் கண்ணுக்குப் படக்கூடியதாகக் கட்டப்பட்ட தேன்கூடு தன்னைக் காட்டிக் கொடுத்து இல்லாமல் போனது போல செல்வமும் ஒருநாள் பறிபோகும்.

அருட் செல்வத்தைத் தேடுங்கள்

“தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கல்மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே”                               பாடல் 172

செல்வம் நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிவடையுங்கள். முன்னமேயே அறிந்து தெளிந்தவர்கள் செல்வம் இல்லாமையை எண்ணிக் கவலைப்படாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வச் செழிப்பைக் கண்டு கலங்கி மயங்காமல், உங்கள் மனதை மாற்றிக் கொண்டு இறையருளாகிய பெரும் செல்வத்தைப் பெற முயலுங்கள். முயன்றால் எமபயம் கூட உங்களை அணுகாது”. ஆற்று வெள்ளம் வந்தது போல் ஒருநாள் வற்றிப் போய்விடும் அது போல் செல்வமும் ஒரு நாள் எங்களை விட்டுப் போய் விடும்.

சிமிழ்ச் செல்வமே செல்வம்

“மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே”                            பாடல் 173

மன மகிழ்ச்சி தரும் பெரும் செல்வமும், வீடு, வயல் என்ற பிற செல்வங்களும் ஆற்று வெள்ளத்தில் மிதக்கின்ற படகைப்போல் ஒரு நாள் கவிழ்ந்துவிடும். அழிந்து போய்விடும் உடலுக்கு ஆதார சக்தியாகத் தலைப் பகுதியில் சிமிழ் ஒன்று வைத்துள்ளதைப் பலரும் அறியாமல் இருக்கின்றார்களே. சிமிழை அறிந்து அதன் பயன் உணர்ந்தால் அருளாகிய செல்வம் அமுத மழையாகப் பொழியும்.

செம்பொருள் சிவமே செல்வம்

“வாழ்வு மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவேது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவு துணைஒன்று கூடலும் ஆமே”                                  பாடல் 174
​
நல்ல வாழ்க்கை, அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், உடன் பிறந்தார், சுற்றத்தார் என்று “எனக்கு என்ன குறை?” என்று கூறுபவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறந்த செம்பொருளான சிவன் அருளைப் பெறுகின்ற முயற்சியை ஆழமாக மேற்கொள்ள நினைப்பார்களேயானால். அந்தச் செம்பொருள் சிவம் கூவி அழைத்துக் கொள்ளத்தக்க துணையாக வந்து சேரவும் கூடும்.
​

இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023