• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
  மயிலிட்டி.info
மயிலிட்டி

திருமந்திரம் - பாகம் 17 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

19/8/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 17 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

 நாத வடிவான நாயகன்

“சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஒங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே”                                                                    பாடல் 106

மூலப் பரம்பொருளான சிவன் பிரம்மன், திருமால், உருத்திரன் என்று மூவராகவும், மகேசுவரன், சதாசிவம் என்று ஐவராகவும் இருக்கின்றான். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை எனும் ஆறுடன் மேல், கீழ் என்னும் இரண்டு சகஸ்ரதளத்துடன் சேர்ந்த ஆதார நிலைகளில் நாதமும், விந்தும் (ஓசையும் ஒலியும்) சேர்ந்து  பத்தாகவும் நிற்பவன் சங்கரன் ஆவான்.

Picture
அயனும் மாலும் சிவனே

“பயன்அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே”                                 பாடல் 107

மூலப் பரம் பொருள் சிவனே. அவனே சிவனாகவும், சக்தியாகவும், சதாசிவமாகவும் இருக்கின்றான் என்ற உண்மை உணர்ந்து, அதன்படி நாம் வழிபாடு செய்வோமான்னால், பிரமனும், திருமாலும் நமக்கு அயலவர் ஆகமாட்டார்கள். முக்கண் உடைய நந்தி தேவரும் நமக்கு உறவுடையோராவார். எனவே இந்த உண்மையை உணர்ந்து அவ்வானவர் தலைவரைப் பணியுங்கள். பணிந்து பயன் பெறுங்கள்.

                     பாலொத்த மேனிப் பரமன்

“ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்துஅடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்அடி நல்கிடு என்றானே”                                 பாடல் 108

இறைவன் அடியவர்கள் தொழத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் சபா மண்டபத்திற்கு வந்து நின்று, அழிவில்லாத வாழ்நாள் பெற்ற தேவர்கள், பால்போலும் வெண்ணிறம் உடைய திருநீறு திருமேனி எங்கும் பூச நின்ற பெருமானைத் தொழுது வணங்க, நானும் வணங்கினேன். பரம்பொருள் நீயும் உலகைப் படைத்த ஆதிப் பிரமனுக்கும், திருமாலுக்கும் ஒப்பானவன். பூவுலகில் சென்று நம் திருவடி பரவுக என்று அருளினான்.

                உள்ளத்துள் உள்ள இறைவனை உணர்க

“வானவர் என்றும் மனிதர் இவரென்றும்
தேனமர் கொன்றைச் சிவன்அருள் அல்லது
தான்அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊன்அமர்ந் தோரை உணர்வது தானே.”                               பாடல் 109

தேவர்கள் என்றும், பூவுலகத்து மனிதர்கள் என்றும் உள்ள வேறுபாடுகள் எல்லாம், தேன் நிறைந்த கொன்றை மலர்மாலை சூடிய சிவபெருமான் அருளால் அறியப்படும் பேதங்களேயன்றி வேறில்லை. வானவரும், மனிதரும் சேர்ந்து தெளிந்து உணர்ந்த ஒரே தெய்வம் சிவன் அன்றி வேறில்லை. எனவே உண்மையான வழிபாடு நம் உள்ளுறையும் இறைவனை உணர்ந்து, அறிந்து வழிபடுவதேயாகும்.

             மூன்று ஐந்தென நின்றவன் ஒருவனே

“சோதித்த பேரொளி மூன்றுஐந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித்து அவரைப் பிதற்றுகின் றாரே.”                                  எண் 110

எங்கும் நீக்கமற நிறைந்து, பொங்கிப் பரவி நிற்கின்ற பேரொளிப் பிழம்பான சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன் என மூன்றாகவும், ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலால் பிரம்மன், திருமால், சிவன், உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் என்று ஐந்தாகவும் இருக்கின்றான் என்பதை மூடர்கள் அறிவதில்லை. அவரவர் செயல்களுக்கு (கிரியைகளுக்கு) ஏற்ப சிவன், திருமால், பிரம்மன் என சிவபெருமான் தோன்றுகின்றார் என்பதை அறியாது, அவர்களை வேறு வேறு தெய்வங்களாக எண்ணி வீணே உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

                       பாவத் துயர் போக்கும் பராபரன்

“பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறமாகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே”                                 பாடல் 111

சிவப் பரம்பொருள் பார் எல்லாம் ஒன்றிக் கலந்து நிற்கின்றான். உயிர்களின் உள்ளும், புறமும் இருந்து இயக்கும் சக்தியும் அவனே. உயிர்களைப் படைப்பதில், காப்பதில், அழிப்பதில் பிரமனாக, திருமாலாக, உருத்திரனாக இருந்து முடிவில் உயிர்களுக்கு அவற்றின் வினைப் பயன் கழித்து வீடுபேறு கிட்டவும் அவனே அருள் செய்கின்றான்.

                    உயிர்த் தலைவன் உமை ஒரு பாகன்

“தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை
வான்ஒரு கூறு மருவியும் அங்குளன்
கோன்ஒரு கூறுடல் உள்நின்று உயிர்க்கின்ற
தான்ஒரு கூறு சலமயன் ஆமே”                                      பாடல் 112
​
சக்தியும் சிவமும் சேர்ந்த ஒரு தோற்றமாக நிற்கின்ற சதாசிவமே எம் கடவுள். அவன் அண்ட வானத்தையும் தன் ஒரு அங்கமாகக் கொண்டு, அங்கும் நிறைந்துள்ளான். உயிர்த் தலைவனாகிய இச் சிவப் பரம்பொருளே உயிர்களின் உடல் புகுந்து, உயிர் கலந்து, அவற்றை இயங்கச் செய்யும் தண்ணருள் உடையவனாகவும் இருக்கின்றான். 
​
இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    April 2025
    March 2025
    January 2025
    June 2024
    April 2024
    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    ALL
    திருமந்திரம் தொடர்கள்

  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • தொடர்புகளுக்கு
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • சாதனையாளர்கள்
Picture
தொடர்புகளுக்கு:
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter

​தொடர்பு கொள்வதற்கு:

compteur de visites html
Copyright © 2025