திருமந்திரம் (பாகம் 1 )
நாகேந்திரம் கருணாநிதி
திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது. உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. . சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது.

ஔவையார்
“தேவர் குறளும் திருநாள் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.”
இதன் பொருள் திருக்குறள், நான்கு வேதங்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் படைப்புக்கள், அகத்தியரின் நூல், திருஞானக்கோவை, திருவாசகம் ஆகிய அனைத்துமே திருமூலர் கூறும் ஒரு வாசகத்திற்கு இணை என்பதாகும். இக்கூற்றிற்கு மேலாகத் திருமந்திரத்தைப் பற்றிக் கூறவேண்டிய அவசியமில்லை.
திருமந்திரத்தை அருளிய திருமூல நாயனார் அட்டமா சித்திகள் பெற்ற தவயோகி எனவும், அவர் திருக்கயிலாய மலையிலிருந்து தென் நாட்டிற்கு வந்தவர் எனவும், கூறப்படுகின்றது. அவர் கி.பி. 4 ஆம் ,5 ஆம் நூற்றாண்டில் மூவாயிரம் வருடங்களாக யோக நிலையிலிருந்து ஆண்டுக்கொருமுறை விழித்து ஒவ்வொரு பாட்டாகத் தமிழில் திருமந்திரத்தைப் பாடியதாக வரலாறு கூறுகின்றது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்“ எனத் திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் பெருமானான் திருத்தொண்டர் புராணத்தில் “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” எனவும் போற்றியுள்ளார்கள்.
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டுள்ளது.
முதற் தந்திரம் முப்பொருள் உண்மையை அதாவது பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை எனும் சைவசித்தாந்தக் கருத்தை விளக்கி, அவற்றின் இயல்புகளை விளக்குகிறது. அத்துடன் யாக்கை, செல்வம், இளமை, உயிர் ஆகியவை நிலையற்றவை என விளக்குகிறது. மேலும் ஒழுக்கம் அதாவது கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, பிறர் மனைவியை நாடாமை, அறம், அன்பு, கல்வி போன்ற பொதுவான அறங்களை வலியுறுத்துகிறது.
இரண்டாம் தந்திரம் புராணக்கதைகள் மூலம் நல்லொழுக்கம், உண்மைப்பொருள் விளக்கம், ஐந்தொழில்களின் செயற்பாடுக்கேற்ப உயிர்களின் செயற்பாடுகள் பற்றி விளக்குகிறது. அகத்தியம், அட்டவீரட்டம் (1.அந்தகாசுரனை அழித்த தலம் 2.தக்கன் தலை எடுத்த தலம், 3.பிரமன் அகந்தை அழிந்த தலம், 4.சலந்திராசுரனை அழித்த , தலம், 5.திரிபுரம் எரித்த தலம், 6.யானைத் தோல் போர்த்த தலம், 7.காலனை உதைத்த தலம், 8.மன்மதனைக் கொன்ற தலம்), இலிங்கபுராணம், தக்கன்வேள்வி, பிரளயம், சக்கராயுதம், எலும்பும் கபாலமும், அடிமுடி தேடல் என்பனவும் இதில் அடங்குகின்றது.
மூன்றாம் தந்திரம் அட்டாங்க யோகம் [இயமம் (முதற் தந்திரத்தில் கூறிய ஒழுக்கம்), நியமம் (தவம், செபம், ஆத்திகம், மனநிறைவு, தானம், விரதம், ஞானநூற் கேள்வி, சிவ வேள்வி, சிவபூசை, நற்பண்பு முதலியனவற்றை நியமமாகச் செய்தல்.) மூலம் பலப்படுத்திய உள்ளத்தையும், உடலையும் ஒருமுகப்படுத்தி மேலும் பலப்படுத்தச் செய்யும் ஆசனம்] அட்டமாசித்தி, சோதிடம், மற்றும் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) போன்ற விடையங்களுடன் ஆறு ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை) பற்றியும் விளக்குகிறது.
நான்காம் தந்திரம் மந்திரங்கள் மூலம் ஞானத்தை அடையும் வழி, அசபா மந்திரம் (உச்சரிக்கப்படாத மந்திரம்), சக்கரங்கள், நடனசபை (சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை), திருநடனம் (அற்புதத் தாண்டவம், ஆனந்தத் தாண்டவம், அனவரதத் தாண்டவம், பிரளயத் தாண்டவம், சங்காரத் தாண்டவம்), ஐந்தெழுத்து, எல்லாம் சிவமே எனும் தத்துவம், சிவசக்தி வழிபாடு என்பன பற்றியும் விளக்குகிறது.
ஐந்தாம் தந்திரம் அன்பாலும், அருளாலும் சிவப்பரம்பொருளை அடைய முயலும் வழிபாட்டு முறையான சைவம் (சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடும் சுத்த சைவம்) பற்றியும், இறைவனை அடையும் வழிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும், அவற்றால் கிடைக்கும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் பற்றியும், சத்திநிபாதம் பற்றியும் விளக்குகிறது.
ஆறாம் தந்திரம் இறைவனே மானுடச் சட்டை தாங்கிக் குருவடிவாக வருவதனையும், ஞானம் பெறும் மார்க்கங்களையும், துறவு, தவம், வேடம், திருநீற்றின் மகிமை பற்றியும் விளக்குகிறது.
ஏழாம் தந்திரம் இறைவன் திருவடிகளைக் காணும் வழிகளான ஆறு ஆதாரங்கள் பற்றியும், இறைவனின் அடையாளமான சிவலிங்கங்கள் (அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம்) பற்றியும், சிவபூசை, சிவதீட்சை, குருபூசை, மகேஸ்வரபூசை, அடியார் பெருமை, போசனவிதி, சற்குரு, சமாதி பற்றியும், ஐம்புலன்களை அடக்கும் முறை பற்றியும் விளக்குகிறது.
எட்டாம் தந்திரம் பதி, பசு, பாசம் பற்றியும், பாசம் அகலப் பசு பதியை அடைவது பற்றியும், சிவன் கோயில் அமைப்பு பதி, பசு, பாசம் (சிவலிங்கம், நந்தி, பலிபீடம்) பற்றியும், மூவகை ஆன்மாக்கள் (விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர்) பற்றியும், ஐந்தொழில் ஆற்றும் ஈசான மூர்த்தி பற்றியும், முக்குற்றம் (காமம், வெகுளி, மயக்கம்), முப்பதம் (தத்பதம், தொம்பதம், அசிபதம்), பற்றியும், அசிபதநிலை (தத்துவமசி) அது நீயாய் இருக்கிறாய் என்ற விளக்கம் பற்றியும் விளக்குகிறது.
ஒன்பதாம் தந்திரம் பஞ்சாக்கரம் (தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், அதிசூக்கும பஞ்சாக்கரம்), திருக்கூத்து, முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவுக்குள் அடங்கிய பின் சிவப்பரம்பொருள் ஆன்மாவைத் தன்வசப்படுத்தும் முறை, ஒளி வடிவில் இறைவனைக் காணல், ஊழ் வினை, சிவதரிசனம், சித்தி மார்க்கம், முத்தி மார்க்கம், சிவபதி சேரும் வழி போன்ற பல விடையங்கள் விளக்கப்பட்டுள்ளன.
திருமந்திரத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பாகக் காணப்பட்டாலும் இவற்றை விரிவாகப் பார்க்கு முன் நாங்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய சில பாடல்களைச் சுருக்கமாக முதலில் பார்ப்போம்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.