மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 04 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

18/11/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 4 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
கால எல்லை கடந்தவன்
“மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே”                                 படல் 13
மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் வைத்த திருமால், தாமரை மலரில் இருக்கும் பிரமன் உட்பட தேவர்கள் எல்லோரும் இறைவனின் அளப்பரிய அருள் தன்மையை எண்ணிப்பார்த்து அவனை நினைக்கிறார்கள் இல்லை. விண்ணையும், மண்ணையும், வெளி அண்டங்களையும் கடந்து நிற்கும் கடவுள் இவனைப் போல் வேறு ஒருவர் இல்லை. இவன் கால எல்லை, இடம், பொருள் எல்லாம் கடந்து இருப்பவன்.

Picture
எல்லாம் கடந்தவன் எங்கும் நிறைந்தவன்
“கடந்துநின் றான்கம லம்மலர் ஆதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே”.                            பாடல் 14
கமல மலராகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாதி தேவர்களையும் கடல் போலும் நீல நிற மேனி உடைய மாயவனாம் திருமாலையும் தாண்டி, அதற்கு அப்பாலும் உள்ள அண்டங்கள் பலவற்றையும் தாண்டி, அப்பாலுக்கும் அப்பாலாய் நிற்கின்ற இறைவன் எங்கும் நிறைந்த பரம் பொருளாகவும் இருக்கின்றான். அதாவது இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாம் கடந்தவன், அவன் இல்லாத இடமில்லை.

                   சுயம்பானவன் சோதிச் சுடரானவன்
“ஆதியு மாய்அர னாய்உடல் உள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்துஇருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்தம் ஆகிநின் றானே”.                                    பாடல் 15
உயிர்களுக்கு வாழ்முதலாய், உயிர்களைக் காக்கின்ற சிவனாய், உடல்உள் கனலும் மூலாதாரமாய், படர்ந்து விரிந்து சுடர்விடும் சோதி சொரூபமாய் நீண்டு வளரும் தன்மையுடைய எல்லா உயிர்களுக்கும் அருள் செய்து காக்கும் தருமமும் ஆகி என்றும் ஒரே தன்மை உடையதாக இருப்பவன் இறைவன் மட்டுமே.

                      வானவர் வணங்கி வளம் பெறுவர்
“கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே”.                                  பாடல் 16
கொன்றை மலர் மாலை அணிந்த சடைமுடி உடைய, அழகிய ஒளி பொருந்திய நெற்றியை உடைய. உமையவளை இடப்பாகம் கொண்டிருக்கும் சிவப்பரம்பொருளை அக்கினி, வருணன், இந்திரன் முதலான விண்ணுலகத் தேவர்களும், வானவர்களும்  எண்ணித் துதித்து தங்கள் குறைகள் நீங்கப் பெற்று, விரும்பி வேண்டிய நல்லருளைப் பெற்றுக் குணக் குன்றாகத் திகழுவர். 

                      இறை அருளே இனிய துணை
“காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவன்என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர்இல்லை தானே”.                                  பாடல் 17
வெங்காயம், பெருங்காயம் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் இரண்டின் மணத்தையும் மீறி கஸ்தூரியின் மணம் சிறந்து விழங்கும். அதுபோலப் பரம்பொருள் பார் முழுதும் கடந்து, கலந்து இருப்பவன் என்றாலும் அவனைத் தன்னுள் தனக்குறவாக்கிக் கொள்வதைப் போன்று உற்ற துணை உயிருக்கு வேறில்லை.

                    அவனருளால் ஆண்டியும் அரசனாவான்
“அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவ நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே”.                                  பாடல் 18
காம்பிலி நாட்டரசன் வேள்விதத்தனுக்கு மகனாகப் பிறந்து வறுமையுற்ற குணநிதி சிவனருளால் குபேரனாகி, செல்வச் சிறப்படைந்து, அழகாபுரிக்கு அரசனாகி குபேரப் பட்டணத்தையே அவனுக்குரியதாக்கினான். வறியவனை வானவர் செல்வன் ஆக்கியவன், மூவுலகச் செல்வ வளத்திற்கெல்லாம் உரியவன் ஆக்கியவன் சிவப்பரம்பொருளே. எனவே அவனைப் பணிவோர், அவன் அருளைப் பெறுவோர் அமராபதி அரசர் ஆவர்.
​
                  உள்ளமே உறைவிடம் ஆனவன்
“இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.”                                      பாடல் 19
வாசமணம் வீசும் ஏழுலகங்களுக்கும் அதிபதியாகத் திகழ்பவனே சுடலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பேரறிவாளன். யோக மார்க்கத்தை உயிர்களுக்கு உதவும் இவனே உயிர்கள் செய்யும், கடைப்பிடிக்கும் மேலான தவ ஒழுக்கத்திற்கு ஏற்ப அந்த உள்ளங்களைக் கோயிலாகக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்.
​


இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023