மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 09 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

17/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 9 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                            அணையா விளக்கு ஆண்டவன்
“அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்றுமேவி நின்றேனே”                              பாடல் 48
மெய்யடியார்கள் போற்றிப் பணியும் வானவர் தலைவன் சிவபெருமானைத் தலைதாழ்த்தி வணங்கி மூல முதல்வன் அவனே என்பதை உணர்ந்தறிந்தேன். பூவுலகில் உள்ளவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் பரம் பொருள் என் உயிர்த் தந்தை ஆவான். என் உயிர்த்துணையாகிய அவனையே நான் எனக்கு வழிகாட்டும் அணையாத விளக்கென்று கருதி அவனோடு கலந்து நின்றேன்.

Picture
பாசத் திரை விலகப் பரமன் அருள் கிட்டும்
“பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்து எய்தலாமே”                                    பாடல் 49

சக்தியாகிய உமையை இடப்பாகம் கொண்டருளிய தலைவனை உள்ளத்தால் உணர்ந்தறிந்து, அப்பரமன் அருள் பேற்றைப் பெற நெருங்குபவர்கள், பந்த பாசம் என்னும் பாவச் செயல்கள் நிறைந்த பெருங்கடலாம் மனமயக்கம், மாயை, மலங்கள் என்னும் பிறவித் துயரில் இருந்து விடுபட்டுக் கரை ஏறி ஆண்டவன் அருளுக்கு முற்றிலும் பாத்திரமாகலாம்.

                   நான் அறிந்த உண்மை
“சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான்என்று
நாடுவன் நான்இன்று அறிவது தானே”                                 பாடல் 50

இறைவன் திருவடிகளைத் தலைமேல் சூடிக் கொள்வேன். அதாவது அவன் திருவடிகள் என் தலையில் படப் பணிந்து வணங்குவேன். சிவசிவ என்று சிவப்பரம் பொருள் நினைவை நெஞ்சில் என்றும் பதிய வைத்திருப்பேன். பெருமானே போற்றி என்று வாசமலர் பல தூவி அவன் புகழைப் பாடுவேன். பணிந்து பரவசமுற்று ஆடுவேன். ஆடி அவன் திருவருளை, தேவாதி தேவர் தலைவன் துணையை நாடுவேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இன்று நான் அறிந்து கொண்ட உண்மை இதுதான். அதாவது இறையருள் பெற யோகம், தவம், யாகம் என்று அலையாமல் அவன் புகழைப் பாடி மனதாரத் துதித்தாலே போதும் எனத் திருமூலர் சுட்டிக் காட்டுகின்றார்.

                  தமிழ் வேதம் தரும் வீடு
“வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே”                                 பாடல் 51

வேதத்தில் கூறப்பட்டுள்ளதை விடச் சிறந்த வாழ்க்கை நெறி வேறில்லை. உயர்ந்த வாழ்க்கை நெறி முறைகள் எல்லாமே வேதத்தில் விளக்கப்பட்டுள்ளன. எனவே எடுத்ததற்கெல்லாம் ஏன், எதற்கென்று தர்க்கம் செய்து, வாதம் புரிவதை விட்டு, கற்றறிந்த பெரியோர்கள், அறிவு நலம் மிக்க வேதத்தைப் படித்துணர்ந்தே வீடு பேற்றைப் பெற்றுள்ளார்கள். அதாவது வீண் வாதம் செய்யாமல் வேத நெறி கூறும் அற வாழ்வு மேற்கொண்டு அதன்படி நடந்தொழுகுங்கள். பேரின்ப வாழ்வு பெறலாம்.

                           மறைப் பெருமை
“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே”                       பாடல் 52

வேதத்தைச் சொன்னவனும், வேதம் ஓதுபவர்கள் வேள்விப் பயன் சிறக்க வேதப் பொருள் விழங்க வைத்தவனும் உண்மைப் பரம் பொருளான சிவபெருமானே ஆவான். ஆகவே வேதங்களைச் சொன்னவன் பிரமன்  என்பார்கள். ஆனால் பிரமன் வேதம் உரைத்தவனாக மாட்டான். மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்” எனவும், திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தில் “வேதமாய், வேள்வியாகி விளங்கும் பொருள்” எனவும் பாடியுள்ளார்கள்.

                     மூல முதல்வன் முக்கண் ஈசன்
“இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே”                             பாடல் 53

வேத மந்திரப் பொருளாகவும், வேதத்தின் அழகிய உருவமாகவும், உள்ளம் உருக்கும் உணர்வு தரும் வேதப் பொருளாகவும், சிறப்புக்குரியவரான வேதியர்கள் சொல்லும், உலகத் தோற்றுக்குக் காரணமாகவும் விளங்குபவன் முக்கண் முதல்வனான சிவப்பரம்பொருளேயாகும்.

                    பாதைகள் பல பயணம் ஒன்றே
“திருநெறி ஆவது சித்து அசித்தன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறி ஆம் சிவமாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.”                                                      பாடல் 54
​
இந்தப் போற்றத் தக்க சமய நெறி வழி நடப்பதாவது அறிவதும் அறியப்படாததுமான சித்து, அசித்து என்னும் இரண்டும் தவிர்ந்த உயர்ந்ததான  பரம்பொருளை எண்ணி வழிபடுவதும், குரு நெறியாகிய சன்மார்க்க வழியில் ஈடுபடுவதும் பரம்பொருளைச் சென்றடைய உள்ள ஒரு வழியாகும். எனவே வேதாந்தம், சித்தாந்தம், சன்மார்க்கம், பூசைவழிபாடு என்கின்ற எல்லா வழிகளுமே இறையருள் பெற உதவும் போற்றத் தக்க சமய நெறிகளே.
​

இந்தப் பக்கம் Free Web Hit Counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023