திருமந்திரம் ( பாகம் 13 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஆனந்தப் பேருடையாள் அம்பிகை
“நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்
பேருடையா ளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே” பாடல் 78
அழகிய அணிமணிகள் சூடியவள், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவள், சத்திய சோரூபமானவள் என் பிறவித் துயர் துடைத்தாண்டு கொண்ட பெருமாட்டி. சிறந்தவள், திரு ஆவடுதுறைச் சிவபெருமானுடன் உறையும் உமை அம்மையே அவள். அவளின் திருவடி ஒன்றி நான் தியானித்திருந்தேன்.

சிவனோடு சிவனாக
“சேர்ந்து இருந்தேன் சிவமங்கைதன் பங்கனைச்
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடுதண்துறை
சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நிழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன்நாமங்கள் ஓதியே” பாடல் 79
உமாதேவியை தன் இடப்பாகத்தில் கொண்டுள்ள சிவனோடு0 சிவனாக நான் திருவாவடுதுறைத் திருத்தலத்தில் தவயோகத்தில் இருந்தேன். சிவனொடு சிவனாக சிவன் பேரருளில் இரண்டறக் கலந்து திருவாவடுதுறைத் திருத்தலத்தில் படர் ஆல மரத்தடியில் நிட்டையில் அமர்ந்து சிவன் ஐந்தெழுத்தை ஓதி உச்சரித்து மெய்த்தவ யோகம் புரிந்தேன்.
திருவடியே துணையாகத் தியானித்திருந்தேன்
“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே” பாடல் 80
தியானத்தில் இந்த உடலோடு பல கோடி ஆண்டுகள் வாழ்ந்தேன். பகல் இரவு பேதம் தெரியாது தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். வானுலகத் தேவர்கள் எல்லாம் வழிபட்டு வணங்கும் திருவடியை வணங்கித் துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியெம் பெருமான் திருவடியே துணை என்று அதன் கீழே அதனைப் பற்றியபடி பற்று ஒழிந்து இருந்தேன்.
என்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்கு தமிழ்ச்செய்ய
“பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.” பாடல் 81
இப்பாடலின் பொருள் “முற்பிறப்பில் முறையாகத் தவம் செய்யாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறவி என்னும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நான் இறைவனை நன்றாகத் தமிழ் வேதம் செய்வதற்காக இறைவனால் பிறப்பிக்கப்பட்டுள்ளேன்.” என்பதாகும்.
தமிழ் ஞானப்பால் கொண்டு வழிபட்டேன்
“ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்உள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே” பாடல் 82
ஞானத்தின் தலைவி உமாதேவியை இடப்பாகம் கொண்ட தலைவன் சிவபெருமான். அவன் கோவில் கொண்டுள்ள திருவாவடுதுறையில் ஒருகுறையும் இல்லாமல் ஒன்பது கோடி ஆண்டுகள் தமிழ் ஞானமாகிய பால் கொண்டு சிவனுக்கு அபிடேக, ஆராதனைகள் செய்து, பாமலர் கொண்டு அர்ச்சித்து, படர் ஆலின் கீழே தவயோகத்தில் இருந்தேன். (திருவாவடுதுறைத் தலத்தில் உமாதேவி பசுவாக இருந்து பரமனை வழிபட்டு முத்தி அடைந்தார் என்கிறது தலபுராணம். கோவிலின் மேற்றிசையில் உள்ள அரசமரத்தடியில் திருமூலர் யோக நிட்டையில் இருந்தார் என்பர்)
தன்னை வென்ற தவம்
“செல்கின்றவாறு அறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி ஊடு வந்தேன்” பாடல் 83
நல்ல ஒழுக்க நெறியில் செல்கின்ற வழியினைத் தெரிந்து, சிவப்பரம்பொருளை மனதில் இருத்தித் துதித்துக் காமத்தை வென்ற ஞானயோகம் பயின்றவர்கள், முனிவராக, தேவராக, அசுரராக, மனிதராகப் பல்கிப் பெருகும் நுண்ணிய வான் வழியே புகுந்து நானும் இவ்வுலகம் வந்தடைந்தேன்.
உத்தம வதம் சிவன் உரைத்தது
“சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே” பாடல் 84
ஆசிரியன் உள்ளத்துள்ளே ஓதி உணர்ந்த மறைகள், ஆகமங்கள் இவற்றிற்கெல்லாம் மேலான, என் குருநாதன் அருளிய உடலையும், உடலோடு ஒன்றாகி நிற்கும் உணர்வையும் உயிரையும் வளர்த்து வளமுறச் செய்கின்ற இந்த வேதப் பொருளை, நான் ஞானாசிரியனான இறைவன் அருளால் உணரப் பெற்றேன்.

இந்தப் பக்கம் "> தடவை பார்வையிடப்பட்டுள்ளது.