திருமந்திரம் ( பாகம் 14 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
நான் பெற்ற இன்பம் எல்லோரும் பெறவேண்டும்
“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே” பாடல் 85
இறையருளால் நான் உணர்ந்தறிந்த பேரின்பத்தை இவ்வுலக மக்களெல்லாம் பெற்றுய்யவேண்டும். வானம் அளந்து நின்ற வேத விழுப்பொருளைக் கூற நான் பெற்ற ஞானம் ஊனோடு கலந்து உணர்வோடு ஒன்றி உயிர்ப்படையச் செய்யும் வேத மந்திரம் இதுவாகும். இதை உளம் பற்றி நினைத்து நினைத்து துதிக்க இறைவன் திருவருள் தானே தேடி வந்தடையும்.

சிவனை ஒவ்வொரு நாளும் வணங்குக
“பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடு கூடிநின்று ஓதலும் ஆமே” பாடல் 86
பிறப்பு இறப்பு இல்லாப் பெருமைக்குரியவன் முக்கண் முதல்வன். அவன் பெயர் நந்தி. இந்த ஞானத் தலைவனை விண்ணுலகத்தவர் தேடிச் சென்று கைகூப்பி வணங்கிச் சிறந்த போற்றிகள் கூறிப் பூசிப்பர். அவனை நொடிப்பொழுதும் மறக்காத மனத்தோடு, மந்திரச் சொற்களாகிய மாலைகள் சூட்டி, மனம் ஒன்றி, எல்லோருமாகச் சேர்ந்து வழிபடுவது நல்லது.
எல்லாவற்றிற்கும் எல்லை வகுத்தவன்
“அங்கிமிகாமை வைத்தான் உலகு ஏழையும்
எங்கும்மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமிகாமை வைத்தான் பொருள் தானுமே” பாடல் 87
உயிர்கள் உடலிலும், கடல் நடுவிலும், காட்டிலும், மலையிலும், ஏழுலகங்களில் என எல்லா இடங்களிலும் அளவோடு நெருப்பு இருக்கச் செய்தான். இவை இல்லா இடம் இல்லாது இருக்கச் செய்தான். உடல் உருவாக வைத்தான். அதில் உயிர் தோன்றி இருக்கவும், அது அளவில் பெருகி விடாதிருக்கவும் செய்தான். தமிழ்ச் சாத்திரமாகிய திருமந்திரமும், அதன் பொருளும் மிகாது அளவோடு இருக்கச் செய்தான். (விஞ்ஞானம் கூறும் உலகம் முதலில் நெருப்புக் கோளமாக இருந்து குளிர்ந்தது, பின்னர் இங்கே உயிர்கள் தோன்றி வளர்ந்தன என்னும் கூற்றை இப்பாடலில் திருமூலர் கூறியுள்ளார்)
யாராலும் அறியமுடியாத சிவன்
“அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றுஅயன் பொய் மொழிந்தானே” பாடல் 88
சிவபெருமானின் திருவடியையும், திருமுடியையும் தேடிச் சென்ற திருமாலாலும், பிரமாவாலும் அவற்றைக் காணமுடியவில்லை. திருமால் தன்னால் அடியைக் காணமுடியவில்லை எனக் கூறினார். பிரம்மா தான் முடியைக் கண்டதாகப் பொய் சொன்னார். (இக்கதை புராணத்தில் உள்ளது. பொய் சொன்னதால் பிரம்மாவிற்கு பூமியில் கோயில் இல்லாது போகச் சிவன் சபித்த்தாகப் புராணம் கூறுகிறது)
உண்மைப் பொருள் உணர்த்திய சிவன்
“பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே” பாடல் 89
சிவன் ஏறும் விடையும் (மாடும்) அவன் திருக்கரங்கள் ஏந்தியுள்ள மானும், மழுவும் சிவனின் அருளாட்சியின் குறியீடுகள் ஆகும். இத்தகைய சிவன் இவ்வுலகில் எனக்கு உண்மைப் பொருள் உணர்த்தி, நான் மெஞ்ஞான அறிவு பெற உதவினான். இவனே எம் நந்திதேவன்.
பரம்பொருளை விளக்கும் திருமந்திரம்
“ஞேயத்தை ஞானத்தை ஞாது உருவத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கி இட்டேனே” பாடல் 90
அறியப்படவேண்டிய பொருளை அறியும் அறிவை, அதை அறிய முயலும் ஆன்மாவை, அப்படி அறிய முயலும்போது ஆன்மாக்களை மருளச்செய்யும் மாய மலங்களை, அதனால் தொடரும் பிறவிப் பெருக்கத்தை, இதிலிருந்து விடுபட்டுச் சிவப்பேறுபெற, மூலப் பொருளாக, முழுமுதலாக இருக்கின்ற, எவராலும் எளிதில் அறியவொண்ணாப் பொருளாக இருக்கின்ற பரம்பொருளை விளக்க நான் தந்தது இந்தத் திருமந்திரம்.
திருமூலர் திருக்கயிலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர்
“விளக்கிப் பரமாகும் மெஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே” பாடல் 91
ஆகம வேதப் பொருளை விளக்கி அருளியவன் பராபரன். மெஞ்ஞானச்சோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமை உடையவன். அவனே இன்ப வடிவான நந்தியெம் பெருமான். மனித மனங்களை நடுங்கச் செய்யும் ஆணவ மலங்களைப் போக்கி அருள ஆனந்த நடமிடுபவன். இவன் அருளானையை ஏற்று, வளமிக்க திருக்கயிலாய மலைஞானகுரு, நந்தி பரம்மரையில் வந்தவன் நான்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.