மரண அறிவித்தல்
அமரர். கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் (இனிப்பர்)
பிறப்பு : 14.09.1950
இறப்பு : 04.02.2020
யாழ். திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இன்பர்சிட்டி, பருத்தித்துறை வதிவிடமாகவும் கொண்ட திரு. கதிரிப்பிள்ளை ஆனந்தசிவம் (இனிப்பண்ணா) அவர்கள் 04.02.2020 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை பூரணம் தம்பதியினரின் மகனும்,
இந்திரபுஸ்பம் (இந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்.
காஞ்சனா(ஜேர்மனி), கஜேந்திரன்(கஜன்-பிரான்சு), கரிகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தந்தையும்.
கிரிஷாந்த், கிருஷ்ணா ஆகியோரின் பேரனும்.
அழகானந்தசிவம், ஆனந்தமலர், அன்புமலர், சிவஅன்பு, சிவகுமார்(அமரர்), செல்வக்குமார்(அமரர்) ஆகியோரின் பாசமிகு அண்ணனுமாவார்.
06.02.2020 (வியாழக்கிழமை) காலை 08.00 மணியளவில் வியாபாரிமூலையில் (எரிஞ்சம்மன் கோவிலடி) உள்ள அன்னாரது சகோதரரான சிவம் அவர்களின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக சுப்பர்மடம் இந்து மயானத்தினத்திற்கு கொண்டு செல்லப்படும்.
தொடர்புகளுக்கு-
கஜேந்திரன்(கஜன்-பிரான்சு) -0033 7 69 21 66 30
கரிகரன் -0094766328434
சிவம்(சகோதரர்) -0094776465034
தகவல்:
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி
பிரான்சு கிளை

சென்று வாருங்கள் இனிப்பண்ணா... இரா. மயூதரன்
‘தம்பி எங்கட கோயில கட்டி முடிக்குமட்டும் விட்டிட்டுப் போயிடாத’ என்று நீங்கள் சொன்னது இப்பவும் என்ர காதுக்குள்ள பேச்சி அம்மாளச்சியின்ர ஆணையா கேட்டுக்கொண்டே இருக்குது இனிப்பண்ணா....
சுமார் ஒரு வருசம் இருக்கும்... பருத்தித்துறை ரவுனில் போன் கதைத்துக் கொண்டு நின்டனான். எனக்கு பின்னால ஒராள் நிக்கிறமாதிரி உணர்வு... திரும்பிப்பார்த்தா இனிப்பண்ணா தயங்கியவாறு நின்றிருந்தார்.
உடனே அழைப்பை துண்டித்துவிட்டு வாங்கோ அண்ணை எப்படி சுகமோ என விசாரித்தேன். எங்களுக்கென்ன இருக்கிறம்.... என்றவர் அது இருக்கட்டும் உன்னட்ட ஒரு கதை சொல்ல வேணுமென்டு தேடினனான் என்றவர் தொடர்ந்தார்...
கோயில் நிர்வாகத்தில இருந்து விலத்திப்போட்டியோ...? என்று கேட்டவர் என்ர பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தார்... நீங்களெல்லாம் இருக்கிறியள் என்ட நம்பிக்கையிலதான் இருக்கிறம். விசயம் தெரிஞ்ச நீங்களெல்லாம் விட்டுட்டு விலத்தினால் என்ன செய்யுறது என்று தனது ஆதங்கத்தை உரிமையோடு இறக்கி வைத்தார் இனிப்பண்ணா.
பேச்சி அம்மன் கோயில் நிர்வாக செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க நினைத்ததன் காரணம் குறித்து அவருக்கு விளக்கி கூறியிருந்தேன். அதை ஒருபக்கம் ஏற்றுக்கொண்டாலும் என்னதான் இருந்தாலும் கோயில கட்டி முடிக்குமட்டும் உங்கள மாதிரி விசயம் தெரிந்த ஆக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஆணித்தரமான குரலில் கூறியிருந்தார்.
உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் வியாபாரி மூலை முதலாம் கட்டை சந்தியில் உள்ள கடை வாசலில் ஆறியிருந்த இனிப்பண்ணாவை கண்டவுடன் சைக்கிளில் இருந்து இறங்கி எப்படி சுகமா இருக்கிறியளோ என்று கேட்டன் தம்பி குறைநினைக்காதையன எனக்கு எல்லாம் மறந்து போச்சுது யார் என்று சொன்னத்தான் தெரியும் என்று கூறியதை கேட்க உண்மையில் அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது.
இன்னாற்ற மகன் என கூறிவிட்டு கனத்த மனதுடன் அவ்விடம் விட்டகன்ற எனக்கு இவ்வளவு தெளிவா ஊரில நடக்கிற விடயத்தை அறிஞ்சு அக்கறையோட ஆலோசனை சொல்லியதை பார்க்க நம்பமுடியாமல் இருந்தது.
பேச்சி அம்மாளாச்சிதான் இனிப்பண்ணா வடிவில வந்து தன்ர கோயில் கட்டி முடியுமட்டும் விலத்தாதை என்று கூறினதாத்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறன்.
இனிப்பண்ணா போன்ற பலரின் அக்கறையான வற்புறுத்தலில்தான் இன்றளவும் ஆலய நிர்வாகத்தில் செயற்பட்டு வருகின்றேன். பேச்சி அம்மாளாச்சி ஆசைப்பட்ட மாதிரி கோயில் கட்டி முடியுமட்டும் எத்தனை இடஞ்சல்கள் வந்தாலும் உறுதியா நின்று எடுத்த தெய்வத் திருப்பணியை எல்லாம் வல்ல பேச்சி அம்மாளச்சியின்ர துணையோட செய்து முடிப்போம்.
கோயில் நிர்வாகத்தில இருக்கிறது பேர் புகழுக்காகவோ என்னை விளம்பரப்படுத்தவோ அல்ல இவ்வாறான அக்கறையானவர்களின் வற்புறுத்தல்களால்தான் என்பதை இவ்விடத்தில் அறுதியிட்டு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சென்று வாருங்கள் இனிப்பண்ணா... உங்கள் ஆத்மா பேச்சி அம்மாளாச்சியின் திருவடி நிழலில் அமைதிகொள்ளட்டும்.
இரா.மயூதரன் 05-02-2020