
நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர்.
|
மயிலிட்டி.info |
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த புலமைப்பரிசில் பரீட்சையில்18/11/2020 ![]()
நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர்.
0 Comments
![]() மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 7/10/2018) சுமார் இரண்டு வருடங்கள் அன்மித்த நிலையில் நமது புலம்பெயர் உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய கடந்த 19/07/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகத்தினரால் மயிலிட்டி வாழ் இளைஞர்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் நமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் இலட்சனையுடன் பெயரும் பொறிக்கப்பட்ட T-shirts வழங்கும் நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ![]()
அனைவருக்கும் வணக்கம்
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி, பிரான்சு கிளை 01.04.2020 ?நல் உள்ளங்களுக்கு நன்றிகள்? தற்போது எமது தாய்நாட்டில் நிலவும் கொரோனா வைரசின் உச்ச தாண்டவத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை கருத்திற்கொண்டு 150 குடும்பத்துக்கு மேற்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவுப்பொதிகள் (80,000/= பெறுமதியான உலர் உணவுகள்) எமது திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம் ஊடாக (மயிலிட்டி) அமிர்தலிங்கம் மதுசன் அவர்களின் வழிகாட்டலில் 01.04.2020 அன்று வழங்கப்பட்டுள்ளது. ![]()
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் தற்கால இடர் முகாதைத்துவப்பணி..
வலி வடக்கு பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனையில் வலி வடக்கு பிரதேச செயலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தால் , 100 குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் (1000x100=100000/-) 30.03.2020 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ![]()
அனைவருக்கும் வணக்கம்.
கடந்த 2020/01/12ம் திகதி அன்று நடைபெற்ற இவ்வருடத்திற்கான முதலாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திலே சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட 2019/12/31ம் திகதி அன்று முடிவடைந்த 2019ம் ஆண்டுக்கான மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினுடைய முழுமையான வரவு செலவு விபரங்கள் அடங்கிய வரவு செலவு கணக்கறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக இங்கு புகைப்படமாக இணைப்புச்செய்யப்பட்டுள்ளது. |
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்ஒன்றித்து உயர்வோம் பதிவுகள்
November 2020
அனைத்துப் பதிவுகள் |