மயிலிட்டி
  மயிலிட்டி.info
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2013, 12, 11
  • மயிலிட்டி செய்திகள்
  • ஆலயங்கள்
    • பேச்சி அம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • வாழ்த்துக்கள்
    • பிறந்தநாள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • மரண அறிவித்தல் 2013
    • மரண அறிவித்தல் 2012
    • மரண அறிவித்தல் 2011
    • அமரர். அப்புத்துரை
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • மயிலையூர் தனு
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பேச்சி அம்மன் ஆலயம்
  • New Page

திருமந்திரம் - பாகம் 14 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

29/6/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 14 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
​
             நான் பெற்ற இன்பம் எல்லோரும் பெறவேண்டும்
“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே”                                பாடல் 85

இறையருளால் நான் உணர்ந்தறிந்த பேரின்பத்தை இவ்வுலக மக்களெல்லாம் பெற்றுய்யவேண்டும். வானம் அளந்து நின்ற வேத விழுப்பொருளைக் கூற நான் பெற்ற ஞானம் ஊனோடு கலந்து உணர்வோடு ஒன்றி உயிர்ப்படையச் செய்யும் வேத மந்திரம் இதுவாகும். இதை உளம் பற்றி நினைத்து நினைத்து துதிக்க இறைவன் திருவருள் தானே தேடி வந்தடையும்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 13 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

11/6/2018

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 13 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                          ஆனந்தப் பேருடையாள் அம்பிகை
“நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்
பேருடையா ளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே”                               பாடல் 78
​
அழகிய அணிமணிகள் சூடியவள், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவள், சத்திய சோரூபமானவள் என் பிறவித் துயர் துடைத்தாண்டு கொண்ட பெருமாட்டி. சிறந்தவள், திரு ஆவடுதுறைச் சிவபெருமானுடன் உறையும் உமை அம்மையே அவள். அவளின் திருவடி ஒன்றி நான் தியானித்திருந்தேன்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 12 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

13/5/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 12 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                     ஞானத்தவயோகிகள் நால்வர்
“நால்வரும் நாலுதிசைக்கு என்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகஎன
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே”                               பாடல் 70
​
சனகர், சனாதனர், சனந்தனர், சன்ற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்கள் நான்கு திசைகளிலும் உள்ளவர்களுக்கும் தலைவரானார்கள். அவர்கள் நால்வரும் பல்வேறு பொருள் பற்றியும், தாம் பெற்ற அனுபவ ஞானத்தை ஞாலத்தவர்கள் எல்லாம் பெற வேண்டும் என்ற பெரு நோக்கில் பரம்பொருள் ஞானத்தை உணர்த்தும் ஞானத்தலைவராய்த் தவயோகச் சித்தர்களானார்கள்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 11 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

9/4/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 11 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                       நந்தி பெற்றனன் நவ ஆகமம்
“சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே”                                 பாடல் 62
​
சிவம் என்னும் பரம்பொருளிடம் இருந்து சக்தியும், சக்தியிடமிருந்து சதாசிவமும், சதாசிவத்திடமிருந்து மகேசனும், மகேசனிடமிருந்து உருத்திரன் முதலான தேவர்களும், தவமுடைய திருமாலும், பிரமதேவனும் ஆகிய இவர்கள் பெற்ற ஆகமம் ஒன்பது ஆகும். இந்த ஆகமங்கள் அனைத்தும் நந்தி பெற்றான். ​


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 10 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

23/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 10 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                அறுசமயச் சாத்திரப் பொருளானவன்
”ஆறங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறங்கம் ஆகக் குணம்பயில்வார் இல்லை
வேறங்கம் ஆக விளைவுசெய்து அப்புறம்
பேறங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே”                                   பாடல் 55
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய ஆறு சமயத்திற்கு ஒப்பற்ற வேதத்தை ஓதி அருளிய சிவபெருமானை, உமை அம்மைக்குத் தன் உடலின் இடப்பாகத்தை தந்த சிவப்பரம்பொருளின் அருளாற்றலைப் போற்றிப் புகழ்பவர் இல்லை. இப்படிப் புகழாதவர்கள் வேறு சமய சாத்திரங்களைப் பயின்று கடைப்பிடித்து அந்த வேறானவற்றையே பெரிதாகப் போற்றி செய்து வாழ் நாளை வீண் நாளாக்குகின்றார்களே! திருமூலரின் இக்கருத்தை அருணகிரிநாதரும் “அறு சமயச் சாத்திரப் பொருளோனே” எனக் கூறியுள்ளார்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 09 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

17/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 9 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                            அணையா விளக்கு ஆண்டவன்
“அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்றுமேவி நின்றேனே”                              பாடல் 48
மெய்யடியார்கள் போற்றிப் பணியும் வானவர் தலைவன் சிவபெருமானைத் தலைதாழ்த்தி வணங்கி மூல முதல்வன் அவனே என்பதை உணர்ந்தறிந்தேன். பூவுலகில் உள்ளவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் பரம் பொருள் என் உயிர்த் தந்தை ஆவான். என் உயிர்த்துணையாகிய அவனையே நான் எனக்கு வழிகாட்டும் அணையாத விளக்கென்று கருதி அவனோடு கலந்து நின்றேன்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 08 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

12/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 8 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

                    தொழுது பணிவார்க்குத் தோழனும் ஆவான்
“சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குக்
கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே”                          பாடல் 41
​
அமுதம் பெற வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்பொது கொடிய நஞ்சு தோன்றியது. அதைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களைக் காக்க நஞ்சை உண்டு கண்டத்திலே தேக்கிக் கொண்டான் சிவபெருமான். அழகிய ஒளி பொருந்திய உமையைத் தன் இடப்பாகம் கொண்ட இறைவன், அன்பு கொண்ட அடியவர்களுக்குத் தன் இனத்தோடு கூடி வாழும் மான் போல உதவ எப்போதும் இருப்பான்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 07 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

4/2/2018

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 7 )

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

ஐந்தெழுத்தை ஓதி உணர்க
“சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே”                                 பாடல் 34
​
கலவைச் சாந்தோடு கலந்து மணம் வீசும் கஸ்தூரி வாசம் போல இறைவன் விண்ணவர்க்குச் சொன்ன உண்மைப் பொருள் நெறி “சிவாயநம” எனும் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல். விரிந்து படர்ந்த ஞானச் சுடர் போன்ற இந்த மந்திரத்தைச் சிவபெருமான் திருப் பெயரை ஆயிரம், ஆயிரமாக நான் தவத்தில் இருக்கும் போதும், வெளியே போகும் போதும் துதித்துத் தொழுகின்றேன்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 06 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

13/1/2018

0 Comments

 
Picture
​திருமந்திரம் ( பாகம் 6 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                   திருவடி பணிக புண்ணியம் பெறுக
“தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர்மேலே
உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே”.                              பாடல் 27
ஆருயிர்களைத் தொடர்ந்து நின்று காத்தருள் புரிபவன் பரம்பொருள். அவனைப் பணிந்து வணங்குங்கள். வணங்கித் துதித்து வழிபட்டால், விரிந்தகன்ற இவ்வுலகும் மற்றுமுள்ள அண்டங்கள் எல்லாமும் கடந்து நின்ற அக்கடவுள் உங்கள் உள்ளமாகிய கமல மலர் மீது வந்து அமர்வான். இப்படி அமருபவன் திருவடி தொழுதல் பெரும் புண்ணியமாகும்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 05 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

23/12/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 5 )
 (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
                                                             ஓசை ஒலியானவன்
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.”                                 பாடல் 20
முடிவாகிய இறப்பையும், தோற்றமாகிய பிறப்பையும் உயிர்களுக்குத் தந்து உதவியவனான, அடியவர்க்கு அடியவனான பரம்பொருள் இருக்கும் இடம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் அவன் இருக்கிமிடம் வாசமலர் பூக்கும் திருக்கயிலாய மலையே ஆகும். அன்பர் உள்ளத்தில் கோயில் கொண்டவன். சுடலையில் உறைபவன். எனினும் அவன் ஓசை ஒலியானவன். வெள்ளிப் பனிமலையே அவன் வடிவம்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 04 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

18/11/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 4 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
கால எல்லை கடந்தவன்
“மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்அளந் தான்தன்னை மேல்அளந் தார்இல்லை
கண்அளந்து எங்கும் கடந்துநின் றானே”                                 படல் 13
மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு இரண்டடியால் விண்ணையும், மண்ணையும் அளந்து பின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் வைத்த திருமால், தாமரை மலரில் இருக்கும் பிரமன் உட்பட தேவர்கள் எல்லோரும் இறைவனின் அளப்பரிய அருள் தன்மையை எண்ணிப்பார்த்து அவனை நினைக்கிறார்கள் இல்லை. விண்ணையும், மண்ணையும், வெளி அண்டங்களையும் கடந்து நிற்கும் கடவுள் இவனைப் போல் வேறு ஒருவர் இல்லை. இவன் கால எல்லை, இடம், பொருள் எல்லாம் கடந்து இருப்பவன்.


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 03 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

5/11/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 3 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
சிவனே எல்லாம்
“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன்அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவன்அன்றி மூவரால் ஆவதுஒன் றில்லை
அவன்அன்றி ஊர்புகு மாறு அறியேனே”.                             பாடல் 6
சிவன் இல்லாமல் தேவர்கள் இல்லை. சிவனருள் இல்லாமல் செய்யப்படும் மேலான தவம் எதுவும் இல்லை. சிவன் இல்லாமல் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோரால் எதுவும் செய்ய இயலாது. சிவன் அருள் இல்லாமல் விண்ணுலக வாழ்வடையும் வழியை நான் உட்பட எவராலும் அறிய முடியாது. ​


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 02 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

8/10/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் ( பாகம் 2 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
விநாயகர் காப்பு
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே”.
​
(ஐந்து கைகள், யானை முகம், வெண்ணிலவின் மூன்றாம் பிறைக் கோடு போன்ற ஒற்றைக் கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாய் இருப்பவனை (விநாயகப் பெருமானை) சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகின்றேன்” (இப்பாடல் திருமூலரால் எழுதப்படவில்லை எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.)


Read More
0 Comments

திருமந்திரம் - பாகம் 01 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி"

20/8/2017

0 Comments

 
Picture
திருமந்திரம் (பாகம் 1 )
நாகேந்திரம் கருணாநிதி

திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது.  உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. .  சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. ​


Read More
0 Comments
Forward>>

    சைவசித்தாந்த ரத்தினம்
    ​நாகேந்திரம் கருணாநிதி

     

    பதிவுகள்

    August 2023
    November 2022
    July 2022
    March 2022
    February 2022
    December 2020
    November 2020
    February 2020
    September 2019
    June 2019
    March 2019
    February 2019
    January 2019
    December 2018
    October 2018
    September 2018
    August 2018
    July 2018
    June 2018
    May 2018
    April 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    August 2017

    அனைத்துப் பதிவுகள்

    All
    திருமந்திரம் தொடர்கள்

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023